Almond Oil For Baby Massage Benefits: புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதில் குழந்தைக்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறும், ஆரோக்கியமாகவும் இருக்கும் வகையில் அமையும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் குழந்தைக்கு மசாஜ் செய்வதும், மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் தேர்ந்தெடுப்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.
அந்த வகையில் குழந்தைக்கு மசாஜ் செய்ய பாதாம் எண்ணெய் சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில், இதில் வைட்டமின் ஈ, ஏ, கொழுப்பு அமிலங்கள், புரதம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. இவை குழந்தையின் எலும்புகளை வலுவாக்கவும், சோர்வைக் குறைக்கவும் மற்றும் உடலை ஈரப்பதமாக்க வைக்கவும் உதவுகிறது.மேலும், இவை குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இந்த எண்ணெயைக் கொண்டு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் 15-20 நிமிடங்கள் மசாஜ் செய்து வர குழந்தை பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம். இதில் குழந்தைக்கு பாதாம் எண்ணெயில் மசாஜ் செய்யும் முறைகள் மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்
குழந்தைகளுக்கு பாதாம் எண்ணெய் மசாஜ் செய்யும் முறை
- முதலில், உள்ளங்கையில் சிறு துளிகள் பாதாம் எண்ணெய் வைத்து, கைகளைத் தேய்த்து உள்ளங்கையில் பரப்பலாம். அதன் பிறகு, குழந்தையின் கால்களிலிருந்து, கைகள் மற்றும் தொடைகளைச் சுற்றி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் போது குழந்தையின் கைகளை மெதுவாக கால்களுக்கு கீழே இழுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, மற்ற காலுக்கு மாறவும். இந்த நேரத்தில் உள்ளங்கால்களை மசாஜ் செய்யலாம்.
- இப்போது குழந்தையின் மார்புக்கு கைகளை நகர்த்தி, உள்ளங்கைகளை ஒன்றாகச் சேர்த்து, குழந்தையின் மார்பின் நடுவில் வைக்கவும். பின் உள்ளங்கைகளைத் தோள்களை நோக்கி நகர்த்த வேண்டும். இதை 3 முதல் 4 முறை செய்யவும். பின், கைகளை வயிற்றை நோக்கி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, குழந்தையைத் தலைகீழாக மாற்றி, வயிற்றில் படுக்க வைத்து முதுகில் மசாஜ் செய்யலாம். இதில் உள்ளங்கைகளை கழுத்துக்குக் கீழே வைத்து, ஒரு கையை மெதுவாக கீழ்நோக்கியும், மற்றொன்றை இடுப்பை நோக்கியும் நகர்த்த வேண்டும்.
- பின் சில துளிகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து, காதுகள் மற்றும் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். முகம் மற்றும் காதுகளைச் சுற்றி மேல் மற்றும் வெளிப்புறமாகத் தடவலாம்.
- பிறகு, உச்சந்தலையில் மசாஜ் செய்வதற்கு தலையில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து, பின் குழந்தையின் தலையில் உள்ளங்கைகளை மெதுவாக நகர்த்த வேண்டும். இதில், தலையை மசாஜ் செய்யும் போது அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை.
இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Immunity: குறைமாத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
குழந்தைக்கு பாதாம் எண்ணெயில் மசாஜ் செய்வதன் நன்மைகள்
சருமத்தை ஈரப்பதமாக்க
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக்க வைக்க உதவுகிறது. மேலும், இது குழந்தையின் சருமம் வறண்டு போவதைத் தடுத்து, மென்மையாக மற்றும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
சோர்வைக் குறைக்க
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் ஊட்டச்சத்துகள் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், தசைகளை அமைதிப்படுத்துதல் மற்றும் உறுப்புகளைத் தளர்த்த உதவுகிறது.
தொட்டில் தொப்பியில் இருந்து நிவாரணம்
பல குழந்தைகளுக்கு தொட்டில் தொப்பி, பொதுவான அழற்சி நிலையாகும். இதில், குழந்தையின் தோல் மஞ்சள் நிறத்துடன் ஒட்டும் மற்றும் செதில்களாகத் தோன்றும். இவற்றை அகற்ற இனிப்பு பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம் மற்றும் குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கலாம். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Jaundice: பிறந்த குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள்
முடிக்கு ஊட்டமளிக்க
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. இது குழந்தையின் தலைமுடிக்கு ஊட்டமளித்து, வலுவூட்டுகிறது. மேலும், இது முடி உதிர்தலைத் தடுக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகளைக் குறைக்க
இந்த எண்ணெயில் வைட்டமின் ஏ, பி2, பி6 மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் சிவத்தல், அரிக்கும் தோலழற்சி, சொறி போன்ற தோல் பிரச்சனைகளை நீக்குவதுடன், சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக மாற்ற உதவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குழந்தைக்கு பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
- குழந்தைக்கு எண்ணெய் தடவும் முன், கைகளை நன்கு சுத்தம் செய வேண்டும். இவ்வாறு செய்வது எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
- குழந்தைக்கு பாதாம் எண்ணெய் ஒவ்வாமை இருப்பின், இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம்.
- குழந்தைக்கு அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தடிப்புகளை உண்டாக்கலாம். அதிகப்படியான எண்ணெயை பருத்தி துணி மூலம் அகற்றி விடலாம்.
குழந்தையின் கண்கள், காது அல்லது மூக்கில் படாமல் மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில், இது எரிச்சல் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.
பாதாம் எண்ணெயை வாங்கும் முன், அதன் தூய்மை மற்றும் காலாவதி தேதியை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Oil Massage: குழந்தைகளின் உடலை வலுப்படுத்த இந்த எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யுங்க
Image Source: Freepik