Beard Growth Oil: தாடி வேகமா வளர பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Beard Growth Oil: தாடி வேகமா வளர பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க.


Ways To Use Almond Oil For Beard Growth: இன்றைய நவீன காலகட்டத்தில் ஆண்கள் நீளமான மற்றும் கனமான தாடிகளையே விரும்புவர். இது அழகான தோற்றத்தைத் தருவதுடன், ஆண்களின் ஆளுமையை மேம்படுத்துவதாக அமைகிறது. ஆனால் பல ஆண்கள் தாடி சரியாக வளரவில்லை என கவலையுறுகின்றனர். இதற்கு தாடியை வளர்க்க சரியான எண்ணெயைப் பயன்படுத்த வேன்டும். உண்மையில் சில ஆண்கள் முகப்பரு, ஒவ்வாமை, சொறி போன்ற தோல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த சூழ்நிலையில் சரியான தீர்வு கிடைக்காமல் மிகுந்த கவலை அடைவர்.

தாடி வளர இயற்கையான வழியைத் தேடுவதும் அவசியமாகும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக தாடி நீண்ட மற்றும் அடர்த்தியாக வளர பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது தாடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஏன் பாதாம் எண்ணெய் தாடி வளர உதவுகிறது தெரியுமா? தாடி வளர பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தும் சரியான முறையைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Eye Masks: கண் கருவளையம் சீக்கிரம் மறைய இந்த கண் மாஸ்க் பயன்படுத்துங்க.

தாடி வளர பாதாம் எண்ணெய் பயன்படுத்துவதற்கான வழிகள்

ஆண்கள் தாடி வளர்ச்சிக்கு பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவதற்கான சரியான முறையைக் காணலாம்.

  • முதலில் பாத்திரம் ஒன்றில் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி ஜோஜோபா எண்ணெயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சிறிது சூடாக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இந்த எண்ணெயை தாடி வளரக்கூடிய இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு 4-5 நிமிடங்கள் மசாஜ் செய்து, பிறகு முகத்தில் 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும்.
  • அதன் பிறகு முகத்தைக் கழுவி விடலாம்.
  • எனினும், இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி விரும்பியவர்கள் இரவு முழுவதும் விட்டு விடலாம். இதை தவறாமல் செய்வதன் மூலம் விரைவில் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

இந்த இரண்டு எண்ணெய்களையும் கண்ணாடி பாட்டில் ஒன்றில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஆனால் இதை பயன்படுத்துபவர்கள் அதிக நேரம் வெயிலில் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

எனவே வெளியில் செல்ல வேண்டிய சூழல் இருந்தால் முகத்தில் சன்ஸ்கிரீன் தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Nail Strengthening Tips: இயற்கையான முறையில் நகங்களை வலுவாக்குவது எப்படி?

Image Source: Freepik

Read Next

முடி, சருமத்திற்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்துவது நல்லதா? - உண்மை என்ன?

Disclaimer