சமூக ஊடகங்களில் ஏசிவி என அழைக்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகரை கூந்தல்,சரும பராமரிப்பு, வெயிட் லாஸ் என பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம். பெரும்பாலான மக்களால் ஆரோக்கியமானதாக கருதப்படும் இது நிச்சயமாகவே சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நன்மை பயக்குகிறதா? என்ற சந்தேகத்திற்கு இன்று தீர்வு காணலாம்..
சோசியல் மீடியா உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் ஜொலி, ஜொலிக்கும் சருமம் மற்றும் பளபளக்கும் கூந்தலை பெற ஆப்பிள் சைடர் வினிகர் சிறந்தது என வைரலாகி வருகிறது.
முக்கிய கட்டுரைகள்
குறிப்பாக வீட்டிலேயே DIY அழகு சாதன பொருட்களை தயாரிப்பதில் ஆப்பிள் சைடர் வினிகர் பிரபலமாகி வருகிறது. ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் தோலில் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? இது உங்கள் தலைமுடிக்கு நல்லதா? உங்களுக்கு சரும பிரச்சனை இருந்தால் என்ன செய்வது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு நிபுணர்களின் ஆய்வு முடிவுகள் என்ன என்பதை தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஆப்பிள் சைடர் வினிகர் என்றால் என்ன?
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள் சாறுடன் ஈஸ்ட் அல்லது வேறு ஏதாவது கார்போஹைட்ரேட் சேர்த்து புளிக்கவைப்பட்ட ஜூஸ் ஆகும். அதாவது இயற்கை பாக்டீரியாக்கள் ஆப்பிள் சாற்றை, அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது. இந்த செயல்முறை முடிந்ததும், பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட மற்றும் வடிகட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆப்பிள் சைடர் வினிகர் ஆனது இன்று, நேற்றல்ல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது அசிட் ரிஃப்ளக்ஸ் முதல் இருமல் சிகிச்சை வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சரும பராமரிப்பில் ஆப்பிள் சைடர் வினிகரின் பங்களிப்பு குறித்த ஆய்வு மட்டும் இதுவரை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் ஆரோக்கியமானவர்களும், சரும பிரச்சனைகள் இல்லாதவர்களும் இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூந்தல், சருமத்தில் ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்துவது?
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது அசிட்டிக் அமிலமாகும், எனவே இதனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் முடி உதிர்வு, உச்சந்தலையில் எரிச்சல், சருமத்தில் கொப்புளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிதளவு நீர் கலந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் கூந்தல் அல்லது சரும பராமரிப்பில், ஒவ்வொரு எட்டு அவுன்ஸ் தண்ணீருக்கும் அரை தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: காலை எழுந்தவுடன் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
மேலும் ஆப்பிள் சைடர் வினிகரை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பாக அதனை சோதிக்க வேண்டும். இதற்காக ஆரம்பத்தில் மிதமாகவும்,சிறிது கால சோதனைக்குப் பிறகு படிப்படியாக அளவை அதிகரிக்கவோ செய்யலாம்.
ஏனெனில் ஆப்பிள் சைடர் வினிகரை அதிகமாக பயன்படுத்துவது நரைமுடி, தோலில் அரிப்பு, கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை கொண்டு வரக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
கூந்தல் பராமரிப்பில் ஆப்பிள் சைடர் வினிகரின் பங்களிப்பு:
- முடியின் பொழிவு மற்றும் கருமையான நிறத்தை மீட்டெடுக்கிறது.
- அரிப்பு மற்றும் பொடுகை நீக்குகிறது
- கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
- கூந்தலில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குகிறது.

இதையும் படிங்க: Tips to avoid Snoring: இதை மட்டும் பாலோப் பண்ணால்… குறட்டை பிரச்சனை இனி இல்லை!
சரும பராமரிப்பில் ஆப்பிள் சைடர் வினிகரின் பங்களிப்பு:
- ஆயில் மற்றும் முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் அதனை நீக்க வீட்டு வைத்தியங்களில் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாம்.
- டோனர், ஸ்பாட் ட்ரீட்மெண்ட், பேஸ் வாஷ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது
- சருமத்தின் pH ஐ சமநிலைப்படுத்துகிறது
- ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்கிறது
Image Source: Freepik