Apple Cider Vinegar For Hair: இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலானோர் முடி தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இன்னும் சிலர் தலைமுடி உதிர்தல், பொடுகு மற்றும் வறண்ட கூந்தல் போன்றவற்றால் பலரும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு சிறந்த தீர்வாக ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. ஆனால் பலருக்கும் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா? என்ற கேள்வி இருக்கும். உண்மையில் ஆம், ஆப்பிள் சைடர் வினிகர் தலைமுடிக்கு டானிக்காக செயல்படுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகரில் நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது தவிர என்சைம்கள், வைட்டமின்கள், அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை காணப்படுகிறது. இதை தலைமுடிக்கு தடவுவது உச்சந்தலையில் pH அளவை சீராக வைக்க உதவுகிறது. இது முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துகிறது. இது பொடுகு மற்றும் வறண்ட கூந்தலுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. அது மட்டுமின்றி ஆப்பிள் சீடர் வினிகர் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. இதில் ஆப்பிள் சைடர் வினிகரை முடிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Milk For Hair: பால் போன்ற மென்மையான, பளபளப்பான முடிக்கு பாலை இப்படி யூஸ் பண்ணுங்க
ஆப்பிள் சைடர் வினிகரை முடியில் தடவுவது எப்படி?
ஆப்பிள் சைடர் வினிகரை தலைமுடியில் நேரடியாக தடவுவது சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதில் ஆப்பிள் சைடர் வினிகரை முடிக்கு எந்தெந்த பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேங்காய் எண்ணெய்
ஒரு பாத்திரம் ஒன்றில் 2-3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகரைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதைக் கொண்டு தலைமுடியை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை 1 மணி நேரம் வைத்து, பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். மேலும் தேங்காய் எண்ணெயை தலைமுடியில் தடவி வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம். அதே சமயம், ஆப்பிள் சைடர் வினிகர் முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது.
நீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்
கூந்தலுக்கு ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்துவதற்கான எளிதான வழியாக அமைகிறது. கிண்ணம் ஒன்றில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்க வேண்டும். ஷாம்பு செய்த பிறகு இந்தக் கலவையைத் தலைமுடியைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வது முடி உதிர்வதைக் குறைக்கிறது. இது முடியின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Powder: பொசு பொசுனு முடி வளர செம்பருத்தி பவுடரை இந்த பொருள்களோட யூஸ் பண்ணுங்க
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் அலோவேரா
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிலான கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு ஆப்பிள் சைடர் வினிகரையும், ஒரு ஸ்பூன் தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாகக் கலக்க வேண்டும். இதை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி, கேப் ஒன்றால் மூடி வைக்க வேண்டும். இதை அரை மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். இதில் பயன்படுத்தும் கற்றாழையில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இவை பொடுகுத்தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்கவும், முடியை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன்
பாத்திரம் ஒன்றில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகருடன், இரண்டு ஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். முடியை ஷாம்பு செய்த பிறகு, இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியில் தடவ வேண்டும். இவ்வாறு 10 நிமிடம் வைத்து தண்ணீரில் கழுவ வேண்டும். இது முடியை ஈரப்பதமாக வைப்பதுடன், தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை நீக்க உதவுகிறது.
இந்த வழிகளைக் கொண்டு ஆப்பிள் சைடர் வினிகரை தலைமுடியில் தடவலாம். எனினும், ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Apple Cider Vinegar for Hair: முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்த்துபவரா நீங்க? இதன் தீமைகள் இங்கே!
Image Source: Freepik