மவுத்வாஷ் தயாரிக்க உதவும் ஆப்பிள் சைடர் வினிகர். வீட்டிலேயே இப்படி செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
மவுத்வாஷ் தயாரிக்க உதவும் ஆப்பிள் சைடர் வினிகர். வீட்டிலேயே இப்படி செய்யுங்க.


How To Make Mouthwash With Apple Cider Vinegar At Home: வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பலரும் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், வாய்வழி நோய்களைக் குணப்படுத்த மவுத்வாஷ் பெரிதும் உதவுகிறது. பல் துலக்கிய பின்னரும் வாய் சுத்தமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. மவுத்வாஷ் உதவியுடன், வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் குறைக்கலாம். மேலும், இது ஈறுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இது தவிர வாய்ப்புண் பிரச்சனையைக் குறைக்கவும் மவுத்வாஷ் உதவுகிறது. சந்தையில் விற்பனை செய்யப்படும் மவுத்வாஷ் பயன்களைத் தந்தாலும், கூடவே பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. மவுத்வாஷை வீட்டிலேயே தயார் செய்யலாம். அதன் படி ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தி மவுத்வாஷ் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Loose Motion: உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இந்த 7 பொருள் போதும்

ஏன் ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இதில் கிருமி நாசினி பண்புகள் நிறைந்துள்ளன. இவை நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்பட்டு வாய் சுகாதாரத்தை பராமரிக்கிறது. இதில் ஆப்பிள் சைடர் வினிகரைக் கொண்டு மவுத்வாஷ் தயார் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் மவுத்வாஷ் செய்யும் முறை

  • முதலில் ஆப்பிள் சைடர் வினிகர் மவுத்வாஷ் தயார் செய்ய 1 கப் அளவு நீரில் 1 முதல் 2 தேக்கரண்டி அளவு ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்க வேண்டும்.
  • விரும்பினால், இதில் புதினா எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • உங்கள் வசதிக்கேற்ப மவுத்வாஷைப் பயன்படுத்தலாம்.
  • இதில் குறைந்த அளவு ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதிகப்படியான வினிகர் பற்களைப் பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pink Lips Home Remedies: அழகான பிங்க் நிற உதட்டைப் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்க

ஆப்பிள் சைடர் வினிகர் மவுத்வாஷ் நன்மைகள்

ஆப்பிள் சைடர் வினிகர் பற்களின் பிளேக் பிரச்சனையை நீக்க உதவுகிறது.

இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், வாயில் உள்ள தொற்றுநோய அகற்ற உதவுகிறது

ஆப்பிள் சைடர் வினிகரைக் கொண்டு தயாரிக்கப்படும் மவுத்வாஷ் வாய் துர்நாற்றத்திற்கு சிகிச்சையளிப்பதுடன், வாய் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் மவுத்வாஷைப் பயன்படுத்துவதற்கு முன் பற்களை நன்கு துலக்க வேண்டும்.
  • ஃப்ளூரைடு கொண்ட பற்பசையைப் பயன்படுத்திய உடனே மவுத்வாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • அதே சமயம், மவுத்வாஷ் பயன்படுத்தும் போது நிறைய பயன்படுத்தாமல், அளவிடும் கோப்பையைப் பயன்படுத்தி மவுத்வாஷை அளந்து பயன்படுத்த வேண்டும்.
  • மவுத்வாஷ் பயன்படுத்திய அரை மணி நேரம் வரை எதையும் சாப்பிட வேண்டாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்துபவர்கள் மேலே கூறப்பட்ட வழிகளில் தயார் செய்து பயன்படுத்தலாம். அதே போல, வினிகர் பயன்படுத்தும் போது நீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். எனினும், ஆப்பிள் சைடர் வினிகர் மவுத்வாஷ் பயன்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Back Pain: தீராத முதுகு வலியால் அவதியா? உடனடியாக நிவாரணம் பெற இந்த ஒரு சமையல் பொருள் போதும்!

Image Source: Freepik

Read Next

சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற வீட்டு வைத்தியம்!

Disclaimer