Garlic Benefits To Relieve Back Pain: பலர் அடிக்கடி முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவோம். வீட்டு வேலைகளை செய்யும் போதும், நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பது, நீண்ட நேரம் படுத்துக் கொண்டு இருந்தாலும் சிலருக்கு இடுப்பில் விறைப்பு மற்றும் வலி ஏற்படும். இதனால், நமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். இதை தவிர்க்க விளம்பரங்களை பார்த்து சந்தையில் விற்கப்படும் பல தைலங்கள், வலி நிவாரணி ஜெல், மாத்திரை மற்றும் பல மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அதனால் நமக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை.
ஆனால் நமது வீட்டு சமையலறையில் இருக்கு ஒரு மசாலா பொருள் இயற்கையாகவே இடுப்பு தசைகளில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியிலிருந்து உங்களை விடுவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நீங்கள் படித்தது உண்மைதான். அனைவரின் சமையலறையில் காணப்படும் பூண்டு உங்கள் முதுகு வழியை சரி செய்யும். முதுகு வழியை சரி செய்வதில் பூண்டு ஒரு சஞ்சீவியாக காணப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Steam Benefits: அதிகரிக்கும் காற்று மாசு; நீராவி பிடிப்பது இவ்வளவு நல்லதா?
தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் ரமிதா கவுர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் இடுப்பு மற்றும் முதுகு அலியை குறைக்க பூண்டு எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
முதுகுவலியை பூண்டு குணப்படுத்துமா?

ஊட்டச்சத்து நிபுணர் ரமிதா கவுரின் கூற்றுப்படி, "பூண்டுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது, இது முதுகு வலியைக் குறைக்க உதவுகிறது. பூண்டு சாப்பிடுவது தசை வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மையை குறைக்க உதவும்". முதுகு மற்றும் மூட்டு வலியைப் போக்க இது உங்களுக்கு மிகவும் உதவும். முதுகு மற்றும் இடுப்பு வலிக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்.
இந்த பதிவும் உதவலாம் : Knee Pain: ஊறவைத்த திராட்சையை மட்டும் இப்படி சாப்பிட்டு பாருங்கள்!
முதுகு வலிக்கு பூண்டை எப்படி சாப்பிடுவது?

முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற, ஒரு பல் பூண்டை நசுக்கி, காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் விழுங்கலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
Pic Courtesy: Freepik