Doctor Verified

Body Pain Remedies: தீராத உடல் வலி நீங்க இத மட்டும் செய்யுங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Body Pain Remedies: தீராத உடல் வலி நீங்க இத மட்டும் செய்யுங்க போதும்


Ayurvedic Remedy For Body Ache: உடலுக்குப் போதுமான ஓய்வு இல்லாத போது உடல் வலியால் பாதிக்கப்படலாம். இது தவிர, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். உடலின் திறன் தாண்டி வேலை செய்யும் போது அல்லது அதிக எடை போன்றவை உடல் வலியை ஏற்படுத்தலாம்.

இது அவ்வப்போது ஏற்படாமல், அடிக்கடி ஏற்படும் பிரச்சனையாக இருந்தால், வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழ்நிலையில் சில சிறப்பு வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இது குறித்து ஆயுர்வேத மற்றும் குடல் ஆரோக்கிய நிபுணர் டாக்டர் டிம்பிள் இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Hair Growth: இந்த 5 மூலிகைகளை மட்டும் யூஸ் பண்ணுங்க. நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு முடி வளரும்

உடல் வலி பிரச்சனைக்கு உதவும் ஆயுர்வேத வைத்தியம்

புளிப்பு உணவுகளைத் தவிர்ப்பது

அடிக்கடி உடல் வலியால் பாதிக்கப்பட்டிருப்பின், புளிப்பு உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு உணவில் தக்காளி, புளிப்பு, ஆப்பிள் சைடர் வினிகர், எலுமிச்சை போன்ற பழங்களைத் தவிர்க்க வேண்டும். இதை உட்கொள்வதால், நரம்பு மண்டலத்தின் உணர்திறன் அதிகரிக்கலாம். இதனால் உடல் வலியால் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சில நாள்களுக்கு புளிப்பு உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

பச்சையாக உணவுகள் உட்கொள்வதைத் தவிர்ப்பது

உணவுகளை பச்சையாக அதிகம் உட்கொள்வது உடல் வலியை அதிகரிக்கலாம். எனவே உணவுகளை பச்சையாக உட்கொள்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும். பச்சையாக உணவுகளை உட்கொள்வது செரிமானம் அடைவதைக் கடினமாக்கும். மேலும் இது உடலில் கடினமாக்குவதுடன் வறட்சியை அதிகரிக்கிறது. இது உடல் வலி அதிகமாக காரணமாகிறது. இதற்கு மாற்றாக, வேகவைத்த அல்லது சமைத்த பொருள்களை உட்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு உணவிலிருந்து போதுமான ஈரப்பதம் கிடைப்பதுடன், உடல் நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dry Dates Benefits: உடல் வலிமையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க

பூண்டு எண்ணெய் மசாஜ்

உடல் வலி குறைய பூண்டு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இது மிகவும் பழமையானதெனினும் சிறந்த தேர்வாகும். இதற்கு பூண்டை அதன் தோலுடன் சேர்த்து எண்ணெயில் வேக வைக்கலாம். பூண்டு எண்ணெயைத் தவிர, பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எந்த விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெயை சூடாக்கி, பின் சிறிது குளிர வைத்து முழு உடலையும் வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். இப்போது சூரிய ஒளியில் 20 நிமிடங்கள் உட்காரலாம். இது தசைப்பிடிப்பைக் குறைத்து உடல் வலியை நீக்க உதவுகிறது.

கவனம் செலுத்த வேண்டியவை

  • நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நீரிழப்பு ஏற்படுவது உடல் வலியை ஏற்படுத்தலாம். எனவே நாள் முழுவதும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • கடுமையான உடல் வலி ஏற்படும் சமயத்தில், சூடான ஃபோமெண்டேஷனை எடுத்துக் கொள்ளலாம்.
  • நடைபயிற்சி அல்லது இலகுவான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Herbs For Body Heat: உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கா? கூலா வெச்சிக்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் எடுத்துக்கோங்க

Disclaimer