Best Ayurvedic Herbs To Reduce Body Heat: கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் உடலை நீரேற்றமாக இருப்பது அவசியமாகிறது. இதற்கு நீரேற்றம் மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.
அந்த வகையில் சில குளிர்ச்சிமிக்க ஆயுர்வேத மூலிகைகளும் கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இந்த மூலிகைகளை எடுத்துக் கொள்வது குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்கிறது. இதில் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sinus Ayurvedic Remedies: சைனஸ் பிரச்சனையிலிருந்து விடுபட இந்த மூன்று ஆயுர்வேத முறைகள் போதும்
உடலை குளிர்ச்சியாக வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்துக்கள் மற்றும் ஈரப்பதமூட்டும் தன்மை கொண்ட சிறந்த காய்கறியாகும். கோடைக்காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொள்வது நாள் முழுவதும் குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைக்க உதவுகிறது. இதனை சாலட்கள், ஸ்மூத்திகளாக சிற்றுண்டி எடுத்துக் கொள்ளலாம்.
துளசி
துளசி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளில் ஒன்றாகும். இது உடலைக் குளிர்விக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சியளிக்க உதவும் சிறந்த மூலிகை ஆகும். கூடுதல் சுவைக்காக, துளசி டீயுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
இஞ்சி
இது பொதுவாக வெப்பத்துடன் தொடர்புடையதாக இருப்பினும், வியர்வையை உண்டாக்கும் கோடைக்காலத்தில் வெப்பமான காலநிலையில் உடலை குளிர்விக்க உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் குளிர்ந்த இஞ்சி கலந்த எலுமிச்சைப் பழச் சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds For Brain: மூளைத் திறனை அதிகரிக்க இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க
ஆம்லா
ஆம்லா என்ற இந்திய நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதுடன் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. ஆம்லா சாற்றை உட்கொள்வது புத்துணர்ச்சியை அளிக்கிறது அல்லது உலர்ந்த ஆம்லா பொடியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர்விக்கும் ஆயுர்வேத மூலிகைகளை தயார் செய்யும் முறை
ஆம்லாவை இஞ்சியுடன் சேர்த்து சாறாக தயார் செய்யலாம். கோதுமை புல் சாறு, கற்றாழை சாறு போன்றவற்றை அருந்தலாம்.
உணவு அல்லது வாழ்க்கை முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன், சுகாதார வழங்குநர் அல்லது ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது. இந்த ஆயுர்வேத மூலிகைகளின் குளிர்ச்சியான சாறுகளை எடுத்துக் கொள்வது உடலை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Improving Remedies: கண் பார்வைத் திறனை மேம்படுத்த நீங்க பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத வைத்தியங்கள்
Image Source: Freepik