Herbs For Kidney Health: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த மூலிகைகளை எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Herbs For Kidney Health: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த மூலிகைகளை எடுத்துக்கோங்க

சிறுநீரகத்தை நல்ல நிலையில் வைத்திருக்க ஆயுர்வேதம் சிறந்த தேர்வாக அமைகிறது. குறிப்பாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். இதில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Aak Leaves For Body Pain: உடம்பு வலியை நீக்க உதவும் எருக்கஞ்செடி எண்ணெய்! எப்படி பயன்படுத்தலாம்?

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள்

சில பயனுள்ள ஆயுர்வேத மூலிகைகள் மூலம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நச்சு நீக்கம் மற்றும் புத்துயிர் சிகிச்சை பெற உதவுகிறது.

துளசி

துளசி சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த மூலிகை ஆகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வழக்கமான உணவில் இரண்டு துளசி இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை அருந்தலாம் அல்லது நீரில் கொதிக்க வைத்து நாள் முழுவதும் குடிக்கலாம்.

இஞ்சி

இஞ்சி சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. ஆயுர்வேதத்தில் சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஒரு காரணியாக வீக்கம் கருதப்படுகிறது. இதில் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம். தினமும் இஞ்சி டீ அருந்துவதன் மூலம் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைக்கலாம்.

மஞ்சள்

மஞ்சளில் வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இதில் குர்குமின் என்ற கலவை உள்ளது. ஆயுர்வேதத்தின் படி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பது சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். மேலும் சிறுநீரக செயல்பாட்டை புதுப்பிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Raw Garlic Benefits: பச்சை பூண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம். எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

பூண்டு

உயர் இரத்த அழுத்தம் இருப்பது சிறுநீரக நோய்க்கான ஆபத்து காரணியாகக் கருதப்படுகிறது. இதற்கு பூண்டு சிறந்த தேர்வாகும். இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.

கொத்தமல்லி

கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள் இரண்டுமே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்ற மூலிகையாகும். கொத்தமல்லி டையூரிடிக் என்பதால், உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. மேலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறிகளைப் போக்கவும் கொத்தமல்லி உதவுகிறது.

கோக்ரு

கோக்ஷூரா என்று அழைக்கப்படக்கூடிய ஆயுர்வேத மூலிகை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் இரண்டு அம்சங்களையும் அதிகரிக்க உதவுகிறது. அவை அனபோலிசம் மற்றும் கேடபாலிசம் ஆகும். இது ஒரு டையூரிடிக் மூலிகையாகும். இது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

இவை அனைத்தும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த ஆயுர்வேத மூலிகைகள் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: எந்த நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது நல்லது? ஆயுர்வேதம் கூறும் கருத்து இதோ

Image Source: Freepik

Read Next

Mint Leaves: யூரிக் ஆசிட் அளவை சட்டுனு குறைக்க… புதினா இலையை இப்படி பயன்படுத்துங்க!

Disclaimer

குறிச்சொற்கள்