Ways To Use Aak Leaves For Body Pain: குளிர்காலம் தொடங்கி விட்டாலே, பலரும் பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அந்த வகையில் மூட்டுக்கள் மற்றும் எலும்புகள் தொடர்பான வலி அதிகளவில் சந்திக்க நேரிடும். குறிப்பாக குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகம் தொந்தரவு செய்யலாம். இதில், வயதானவர்கள் மற்றும் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மூட்டு வலியைக் குறைக்க, மக்கள் தங்கள் உணவுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
உணவைத் தவிர, கடுகு அல்லது எள் எண்ணெயைக் கொண்டு மூட்டுக்களில் மசாஜ் செய்யலாம். இதற்கு ஆக் இலைகள் அல்லது எருக்கன் செடி இலைகள் மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது. இந்த எண்ணெயைக் கொண்டு மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்குத் தொடர்ந்து மசாஜ் செய்து வருவது நிவாரணத்தைத் தரும். இது குறித்து சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் டாக்டர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.
மூட்டு வலிக்கு எருக்கன் செடி இலை எண்ணெய் தரும் நன்மைகள்
எருக்கன் செடி இலைகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த இலைகளில் உள்ள பண்புகள் வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த இலை எண்ணெய் கீல்வாத நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. மேலும், இந்த எண்ணெய் தசைகளை வலுப்படுத்துவதுடன் வலியிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது.
வலி நீங்க எருக்கன் செடி இலை எண்ணெய் பயன்படுத்துவது எப்படி
மூட்டு வலி அல்லது உடலின் வேறு எந்தப் பகுதியில் வலி இருப்பின், எருக்கன் செடி இலை எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு எருக்கன் இலை இலையை எடுத்து, வலி உள்ள இடத்தில் தடவிய பின் கட்டு அல்லது துணியால் கட்ட வேண்டும். இவ்வாறு தினமும் 5-6 நாள்களுக்கு எருக்கன் செடி இலை எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் உடல் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!
Image Source: Freepik