Ayurveda Treatment For Mouth Ulcer: வாய்ப்புண் ஏற்படும் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். எனினும் வாய்ப்புண்களால் பலரும் அதிகமாக அசௌகரியங்களை அனுபவிப்பர். குறிப்பாக சாப்பிடுவது, குடிப்பதில் சிரமங்கள் உண்டாகலாம். அல்சர் காரணமாக வாயில் வலி மற்றும் எரிச்சல் உணர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, வாய்ப்புண் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வயிற்று வலி, சமநிலையற்ற உணவு அல்லது மலச்சிக்கல் போன்றவை ஆகும்.
இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் உடலில் ஹார்மோன் சமநிலையன்மை ஏற்படுவதே முக்கிய காரணமாகும். இது தவிர, மோசமான வாய் ஆரோக்கியமும், வாய் புண்களுக்குக் காரணமாக இருக்கலாம். வாய் புண் பிரச்சனைக்கு ஆயுர்வேத சிகிச்சை சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இதில், வாய் புண்களுக்கான ஆயுர்வேத வைத்திய முறைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Stomach Problems: இந்த குளிருல வர வயிற்று வலி நீங்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.
வாய் புண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகள்
பொதுவாக வாய்ப்புண் ஆனது நோய்த்தொற்று, அதிக காய்ச்சல், மோசமான வாய் ஆரோக்கியம் மற்றும் வயிற்றுக் கோளாறு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இந்த வாய்ப்புண்களைச் சமாளிக்க பாதுகாப்பான மற்றும் பயனுள்ள முறையாக ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளன. ஆயுர்வேத முறைப்படி, வாய் புண் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் சிகிச்சை முறைகள் குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கே.பாண்டே அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வாய்ப்புண்களை குணப்படுத்த உதவும் ஆயுர்வேத சிகிச்சைகள்
இதில் கொடுக்கப்பட்டுள்ள சில ஆயுர்வேத வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் வாய்ப்புண்களை எளிதில் குணப்படுத்த முடியும்.
துளசி இலைகள்
துளசியில் உள்ள மருத்துவ பண்புகள் வாய்ப்புண்களைக் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதை உட்கொள்வது வயிறு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும், இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நோய்த்தொற்றில் இருந்து விடுபட உதவுகிறது. இதன் மூலம் வாய்ப்புண் ஏற்படுவதைத் தடுக்கலாம். வாய்ப்புண் உள்ளவர்கள் துளசி இலைகளை நீரில் நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாய்ப்புண்களில் இருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.
கசகசா
வாய்ப்புண் பிரச்சனைகளை நீக்குவதில் கசகசா பெரிதும் உதவுகிறது. சர்க்கரையுடன், தேங்காய் தூளைக் கலக்க வேண்டும். மேலும் இதில் கசகசாவைக் கலந்து மாத்திரைகள் தயாரிக்க வேண்டும். இந்த மாத்திரைகளை தண்ணீருடன் சாப்பிடலம் அல்லது வாயில் உறிஞ்சலாம். இவ்வாறு செய்து வர அல்சர் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கற்றாழை & ஆம்லா சாறு
ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் சாறு மற்றும் கற்றாழை இரண்டுமே முக்கிய மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகிறது. வாய் புண்களில் இருந்து விடுபட இவை இரண்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்த கற்றாழை மற்றும் நெல்லிக்காயில் உள்ள இயற்கையான பண்புகள் அல்சரைக் குறைப்பதுடன், வயிறு மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். தினமும் நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாறு குடித்து வர வாய்ப்புண் பிரச்சனை குணமாகும்.
வேப்ப இலைகள்
ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேப்ப இலைகள் பெரிதும் உதவுகின்றன. இதன் சக்திவாய்ந்த பண்புகள் தொற்று பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கிறது. வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் காலை நேரத்தில் வேப்பம்பூ நீரில் வாயைக் கொப்பளித்து வர அதிலிருந்து விடுபடலாம்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆயுர்வேத சிகிச்சை முறைகளும் வாய்ப்புண் பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கிறது. குறிப்பாக, வாய்ப்புண்கள் பெரும்பாலும் வயிற்றுக் கோளாறுகளால் ஏற்படுகின்றன. இந்த சூழ்நிலையில் வயிற்றுக்கு நன்மை தரும் உணவுகளை உட்கொள்வது நல்லது. அதே சமயம், எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் பின்பற்றுவதற்கு முன்பாக, மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்துவது சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: Rules for Eating Fruits: நீங்க பழங்கள் அதிகம் சாப்பிடுபவரா? அப்ப இப்படி சாப்பிடுங்க.
Image Source: Freepik