அல்சரால் வாய்துர்நாற்றமா? இந்த இரண்டையும் அடித்து விரட்ட இந்த ஒரு பானம் குடிங்க போதும்!

  • SHARE
  • FOLLOW
அல்சரால் வாய்துர்நாற்றமா? இந்த இரண்டையும் அடித்து விரட்ட இந்த ஒரு பானம் குடிங்க போதும்!


எனவே, பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே நாம் வீட்டிலேயே சில ஆரோக்கியமான முறைகளைக் கையாளலாம். இதன் மூலம் நாம் எளிய பிரச்சனைகளிலிருந்து விலகி, அவற்றை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில் உணவு முறை காரணங்களால் நாம் பலரும் அல்சர் பிரச்சனையைச் சந்திக்கிறோம். அல்சர் பிரச்சனை விரைவில் தீர்க்க முடியாத ஒன்றாக அமைகிறது. இந்த அல்சர் பிரச்சனையா ல் சிலர் வாய் துர்நாற்றம் பிரச்சனையைச் சந்திப்பர். இதில் அல்சர், வாய் துர்நாற்றம் இரண்டையும் நீக்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Ulcer Remedies: ஆயுசுக்கும் அல்சர் தொல்லை இல்லை.. அதான் இது இருக்கே..

அல்சர் எதனால் வருகிறது

அல்சர் குறித்த தவறான நம்பிக்கைகள் தான் நம்மிடையே நிலவி வருகிறது. இதில் காரமான உணவுகளைச் சாப்பிட்டால் அல்சர் வந்து விடுமோ என்று பயப்படுகின்றனர். இது தவிர, சாப்பிடாமல் விடுவதன் மூலமோ அல்லது நேரம் கடந்து சாப்பிடுவது போன்றவையும் அல்சருக்குக் காரணமாகலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அல்சர் ஏற்பட வேறு சில காரணங்கள் உள்ளன. H.pylori என்கிற பாக்டீரியா தொற்றுக்களின் காரணமாகவே அல்சர் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.  மருத்துவர் பரிந்துரையில்லாமல் நாமாகவே மருந்தகத்துக்குச் சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கும் அல்சர் ஏற்படலாம். இது தவிர, தினசரி மது அருந்துதல், புகைபிடித்தல் போன்றவையும் அல்சரை மறைமுகமாகத் தூண்டக்கூடியதாக அமைகிறது.

அல்சரைக் கண்டறிவது எப்படி?

வயிற்றில் அல்சர் இருப்பது என்பதை உணர்த்தும் வகையில் வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் புண்கள் ஏற்படலாம். இந்த அல்சர் இருப்பவர்களுக்கு, அடிக்கடி வயிற்று வலி உண்டாகலாம். இது பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதில் பெப்டிக் அல்சர், ஆர்டெரியல் அல்சர் (தமனி புண்கள்), சிரை புண்கள், வாய் புண்கள் போன்ற பல்வேறு வகைகள் உள்ளது. இதில் கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வரக்கூடியதாகும். டியோடெனல் அல்சர் என்பது சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது. இது சிறுகுடலின் முதல் பகுதியான டியோடெனத்தின் சுவரைச் சுற்றி உருவாகும்.

ஒருவருக்கு அல்சர் இருப்பதை எண்டோஸ்கோபி, பயாப்சி மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். இவ்வாறு கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மூலமாக அல்சரைக் குணமாக்கலாம். இது தவிர, ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல், தேவையான அளவு தண்ணீர் அருந்துவது, நன்றாகத் தூங்குவது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாத் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Burning: காரமா சாப்பிட்டால் வயிறு கப கபனு எரியுதா? நிவாரணம் பெற இதை குடியுங்க!

அல்சர் இருக்கும் போது உடலில் தோன்றும் அறிகுறிகள்

  • வயிறு வலி
  • வயிறு எரிச்சல்
  • வயிறு உப்புசம்
  • நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல்
  • வாந்தி
  • மூச்சுத்திணறல்
  • உடல் எடையிழப்பு
  • பசியின்மை

எப்போது மருத்துவரை அணுகலாம்?

அல்சருக்கான அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் அல்சரைக் குணமாக்கலாம். மேலும், அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அல்சர் கடுமையாக இருப்பின், வயிற்றுக்குள் உள்ள புண்கள் கடுமையாகி உள்ளே இரத்தக்கசிவு ஏற்படுவதுடன், மலம் கருப்பாகலாம். அல்சர் இருக்கும் போது வாய் துர்நாற்றம் ஏற்படுவது பொதுவானதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer: உங்களுக்கு வாய் புண் இருந்தால் இதை செய்யுங்க!

அல்சர் மற்றும் வாய் துர்நாற்றம் நீங்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையானவை

  • சீரகம் - 10 கிராம்
  • சோம்பு – 10 கிராம்
  • ஓமம் – 100 கிராம்
  • ஏலக்காய் - 2
  • வெல்லம் – சிறிதளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவை அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜார் ஒன்றில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
  • அந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடவேண்டும். இந்தப் பொடியைத் தேவைப்படும் போது இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • இதை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, தினமும் சாப்பிட்ட பிறகு மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.
  • இவ்வாறு சாப்பிட்டு வர உடலில் உள்ள அல்சர் குணமாகும். மேலும் வாயிலிருந்து வீசும் துர்நாற்றத்தை மறைத்து விடுகிறது.

இதை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடுவது செரிமான சக்தியை மேம்படுத்த உதவுகிறது. மேலும், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், உடல் சோர்வும் நீங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Ulcer Prevention: அல்சரால் அவதிப்படுகிறீர்களா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்க

Image Source: Freepik

Read Next

Stomach Burning: காரமா சாப்பிட்டால் வயிறு கப கபனு எரியுதா? நிவாரணம் பெற இதை குடியுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்