$
Bad breath reasons in Tamil: காலையில் தூங்கி எழுந்தவுடன் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். இது சில நேரங்களில் நம்மை மட்டும் அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தும். நம்மில் பலர் வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் பல் துலக்கினால் சரியாகிவிடும் என புறக்கணித்துவிடுவோம். இப்படி செய்வது உயிருக்கே ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், உண்மைதான். நீண்ட நேர வாய் துர்நாற்றத்தை அலட்சியப்படுத்தினால், அது பல நோய்களை உண்டாக்கும். பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, காலையில் வாய் துர்நாற்றம் நாள்பட்ட வாய்வழி பிரச்சினைகளை குறிப்பதாக கூறப்படுகிறது. காலையில் வாய் துர்நாற்றம் வீசுவது மருத்துவத்தில் ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Benefits of Kissing: முத்தம் கொடுப்பது உடல் எடையை குறைக்க உதவுமாம்!
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

இரவு நீண்ட நேரம் தூங்கி காலையில் எழுந்ததும் வாய் துர்நாற்றம் வருவது சகஜம். நீண்ட நேரம் வாயில் வறட்சி ஏற்படுவதால் இது நிகழ்கிறது. அதாவது, வாய் வறட்சியாக இருக்கையில் பாக்டீரியாக்கள் வாயில் முழுமையாக பரவத் தொடங்குகின்றன. இதன் காரணமாக காலையில் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. இதற்காகத்தான் சிலர் இரவு உணவு சாப்பிட்ட பிறகு பல் துலக்காதவர்கள்.
தூக்கத்தின் போது, வாயில் தேவையானதை விட குறைவான உமிழ்நீர் சுரக்கிறது. இதன் காரணமாக தான் வாயில் வறட்சி ஏற்படுகிறது. உங்களுக்கு புகையிலை பழக்கம் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். இதை கைவிடுவது நல்லது. இது தவிர, மலச்சிக்கல், வாயு மற்றும் அசிடிட்டியால் அவதிப்படுபவர்களும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம் : Bad Breath: காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசிகிறதா? இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்!
வாய் துர்நாற்றத்தை குறைக்க என்ன செய்யணும்?

அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
வாய் துர்நாற்றத்தைப் போக்க, நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் முழு உடலையும் டீடாக்ஸ் செய்ய உதவும். வயிறு உபாதை தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் குணமாகும்.
இரவு தூங்கும் முன் பல் துலக்குங்கள்
காலையில் பல் துலக்கும் பழக்கம் எப்படி இருக்கிறதோ, அதை போலவே இரவிலும் பல் துலக்குங்கள். உங்கள் வாயின் pH அளவு சமநிலையில் இருந்தால் இந்த பிரச்சனை உங்களுக்கு குறைவாக இருக்கும். இதற்கு, தொடர்ந்து மவுத் வாஷ் பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம் : Bad Breath: வாய் துர்நாற்றத்தால் அவதியா? இந்த வைத்தியத்த ட்ரை பண்ணுங்க!
தீங்கு விளைவிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள்

வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். புகையிலை, புகைபிடித்தல், குட்கா, மது மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் உணவுகளை உட்கொள்வதிலிருந்து விலகி இருங்கள். இதுபோன்ற ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
Pic Courtesy: Freepik