Bad Breath: வாய் துர்நாற்றத்தால் அவதியா? இந்த வைத்தியத்த ட்ரை பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Bad Breath: வாய் துர்நாற்றத்தால் அவதியா? இந்த வைத்தியத்த ட்ரை பண்ணுங்க!

ஒருவருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சரியாக பல் துலக்கவில்லை என்றாலோ, சாப்பிட்ட பிறகு வாயை சுத்தம் செய்யவில்லை என்றாலோ அல்லது வயிறு சார்ந்த பிரச்னைகள் இருந்தாலோ, வாய் துர்நாற்றம் ஏற்படும். இதனை தடுக்க பல முயற்சிகளை எடுத்து சோர்ந்துவிடுகிறார்கள். இதனை தடுக்க எளிய வீட்டு வைத்தியத்தை இங்கே காண்போம். 

தண்ணீர் குடிக்கவும்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தொடர்ந்து அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வாய் வறண்டதாக உணரும் போதெல்லாம் தண்ணீர் குடிக்கவும். சோடா போன்ற பானங்களைத் தவிர்க்கவும். இது வாயை மேலும் உலர்த்தும். அதனால் தண்ணீர் அதிகம் குடிக்கவும். 

உப்பு நீரில் கொப்பளிக்கவும்

உப்பு நீரில் வாயை கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து 30 விநாடிகளுக்கு வாய் கொப்பளித்து துப்பவும். இவ்வாறு செய்தாலே வாய் துர்நாற்றம் நீங்கும். 

இதையும் படிங்க: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.

கிராம்புகளை மெல்லவும்

வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம்புகளை தொடர்ந்து மென்று தின்று வந்தால், வாய் துர்நாற்ற பிரச்னை தீரும்.

மவுத் வாஷ்

வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தையில் கிடைக்கும் மவுத் வாஷ்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் ஆல்கஹால் உள்ளது. இவை அனைவருக்கும் வேலை செய்யாது! அதனால்தான் இயற்கையான முறையில் வீட்டிலேயே மவுத்வாஷ் செய்யலாம். அதற்கு முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள், இரண்டு எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்க்கவும். இந்த கலவையை ஒரு ஜாடியில் ஊற்றவும். இந்த மவுத்வாஷ் 2 வாரங்கள் வரை அப்படியே இருக்கும்.

நாக்கை சுத்தம் செய்யுங்கள்

நீங்கள் பல் துலக்கும் போது, நாக்கையும் சுத்தம் செய்யுங்கள். நாக்கில் உள்ள பாக்டீரியாக்களும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடவும்

தினசரி உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஆப்பிள், செலரி, கேரட் சாப்பிடுவதால் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது எச்சில் உற்பத்தியை அதிகரித்து வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் வாய் துர்நாற்றத்தை போக்குவதில் நன்றாக வேலை செய்கிறது. நீங்கள் பல் துலக்கும் போது பேஸ்டில் சில துளிகள் தேயிலை மர எண்ணெயை வைக்கவும். வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கலந்து, வாயைக் கொப்பளிக்கலாம்.

Image Source: Freepik

Read Next

Sore Throat Tea Recipes: தொண்டை வலியைக் குறைக்க இந்த டீ எல்லாம் குடிங்க.

Disclaimer

குறிச்சொற்கள்