$
Best Tea For Sore Throat: மழைக்காலத்தில் பலரும் சளி, இருமல், வறட்சி மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலம், கோடைக்காலம் அல்லது பருவமழை என எதுவாக இருப்பினும், தொண்டை பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க சூடான தேநீர் உதவுகிறது. தொண்டை புண், வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தேநீர் சிறந்த தேர்வாக அமைகிறது.
சளி, இருமல்,தொண்டைப்புண் பிரச்சனையை நீக்க நறுமணம், சுவை மற்றூம் பல்வேறு பண்புகள் கொண்ட மூலிகை டீக்கள் உதவுகின்றன. இந்த மூலிகை பானங்களை அருந்துவது தொண்டைக்கு இதமாகவும், மனதிற்கு நிம்மதி தருவதாகவும் அமைகிறது. இதில் தொண்டை வலியைப் போக்க சிறந்த தேநீர் வகைகள் சிலவற்றைக் காணலாம்.
தொண்டை வலியைப் போக்க உதவும் தேநீர்
நோய்வாய்ப்பட்டிருக்கும் போது பெரும்பாலும் திரவங்கள் குடிப்பது மிகவும் முக்கியமானது. மேலும், சூடான தேநீர் மிகச்சிறந்த பயனுள்ள பானங்களில் ஒன்றாக அமைகிறது. இதில் தொண்டை வலியைப் போக்க உதவும் சிறந்த தேநீர் வகைகள் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Pain Home Remedies: கண்களில் ஏற்படும் அதிக அழுத்தம் மற்றும் வலியைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
இஞ்சி டீ
இஞ்சி சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைப்பதுடன், தொண்டை வலியைப் போக்க உதவுகிறது. மேலும், இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இஞ்சி டீயில் சில இலவங்கப்பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இஞ்சி டீக்கு சுவை மற்றும் கூடுதல் நன்மைகளைத் தரும் விதமாக இயற்கை மூலப்பொருளான தேன் பயன்படுத்தலாம்.

மஞ்சள் மற்றும் எலுமிச்சை தேநீர்
மஞ்சள், எலுமிச்சை இரண்டுமே பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன. இவை தொண்டை தொற்றுக்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. மேலும், தொண்டை வலி மற்றும் எரிச்சலை நீக்க மஞ்சள் கலந்த எலுமிச்சை தேநீரை அருந்தலாம். மேலும், எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் வகையில், நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது.
மிளகுக் கீரை தேநீர்
மிளகுக்கீரையில் மெந்தோல் அதிகம் உள்ளது. இது தொண்டை வலியைப் போக்க சிறந்த இயற்கை வழியாகும். இரவு தூங்கும் முன் பெப்பர்மின்ட் டீ அருந்துவது சிறந்த பலனைத் தரும். இது தொண்டை வலிக்கு உதவுவது மட்டுமல்லாமல், செரிமான மேம்பாட்டிற்கும் உதவுகீறது. மேலும், இதில் உள்ள ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் போன்றவை சளி மற்றும் இருமல் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure Remedies: உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் வீட்டு முறைகள்
அதிமதுர வேர் தேநீர்
அதிமதுர வேர், தொண்டை வலியை குணப்படுத்தும் மற்றொரு சிறந்த தேநீர் ஆகும். இதில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. இது தொண்டை புண்களை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதிமதுரம் இனிப்பாக இருப்பதால், இந்த டீயில் கசப்புத் தன்மை இருக்காது. மேலும், இது பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக உள்ளது. எனினும், இந்த தேநீரை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இந்த டீயை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

கிரீன் டீ
இன்று பெரும்பாலானோர் உடல் எடை குறைப்புக்கு கிரீன் டீயை எடுத்துக் கொள்கின்றனர். இதில் பாலிபினால்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கலவைகள் நிறைந்துள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வைரஸ்களை எதிர்த்து போராடலாம். தொண்டை வலியைக் குணமாக்க, ஒரு நாளைக்கு இரு முறை கிரீன் டீ அருந்தலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொண்டைப் புண் காரணமாக ஏற்படும் வலி, எரிச்சல் மற்றும் அசௌகரியத்தைக் குணப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure Remedies: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அருமையான வீட்டு வைத்தியம்!
கெமோமில் டீ
இது ஒரு பிரபலமான தேநீர் வகையாகும். இது பெரும்பாலும், மனஅமைதிக்காக உட்கொள்ளப்படுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் கெமோமில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் திசு சேதத்தை சரி செய்வதுடன், ஒட்டு மொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் உதவுகிறது. இது ஒரு நன்மை தரும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் முகவராக செயல்படுகிறது. மேலும், இது இருமல் மற்றும் தொண்டைப் புண்கள்களைக் குணப்படுத்துகிறது. இவை சளி அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் தருகின்றன.
தொண்டைப்புண் பிரச்சனையிலிருந்து விடுபட இங்கே கொடுக்கப்பட்ட தேநீர் வகைகளை வீட்டிலிருந்தே தயார் செய்து அருந்தலாம். மேலும், இதனுடன் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களைக் கலந்து கூட்டு தேநீர் தயாரிக்கலாம். எனினும், தொண்டை வலிக்கு மூலிகை தேர்வை முயற்சிக்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், ஏற்கனவே ஏதாவது உடல் நலப் பிரச்சனைகள் இருப்பின், அவர்கள் சில மூலிகைகளைச் சேர்ப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cracked Mouth Corner Treatment: வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்க
Image Source: Freepik