$
Sore Throat Drinks: தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இதில் இருந்து விடுபட சில பானங்கள் உதவலாம். தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, தொண்டை புண் போன்றவற்றை நீக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பானங்களை இங்கே காண்போம்.
எலுமிச்சை மற்றும் தேன்
எந்த சூடான பானமும் தொண்டை புண் ஆற்ற உதவும். தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றிற்கு வெதுவெதுப்பான நீர் நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதுவும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து குடிப்பது, சிறந்த தேர்வாக இருக்கும்.

இஞ்சி டீ
இஞ்சி தேநீர் தொண்டை வலிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இஞ்சி தேநீர் குடிப்பது நன்மை பயக்கும். இது தொண்டை வலியை ஆற்றவும், நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.
இதையும் படிங்க: Cough and Cold: சளி, இருமலின் போது வெந்நீர் குடிக்கலாமா? இது நல்லதா?
கெமோமில் டீ
கெமோமில் டீ தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கெமோமில் டீ ஓய்வை ஊக்குவிக்கும். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோயிலிருந்து சிறப்பாக மீட்கவும் உதவும். மேலும் தூக்கம் மற்றும் தளர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க உதவும்.
மிளகுக்கீரை டீ
மிளகுக்கீரை டீயில் ழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் தொண்டை புண்ணை ஆற்றும். உங்கள் தொண்டை புண் அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக இருந்தால் பெப்பர்மின்ட் டீ குடிக்க வேண்டாம். மிளகுக்கீரை, அமில-ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை மோசமாக்கும்.

சூடான சூப்
ஆரோக்கியமான புரதங்கள் அல்லது காய்கறிகள் கொண்ட சூப், உங்கள் தொண்டை புண் ஆற்றவும் மற்றும் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சில முக்கிய ஊட்டச்சத்துக்களைப் பெறவும் ஒரு சிறந்த வழியாகும்.
பொதுவாக குளிர்காலங்களில் தொண்டை புண் ஏற்படும். இதனை போக்க மேற்கூறிய பானங்களை முயற்சிக்கவும். இருப்பினும், தாங்க முடியாத வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
Image Source: Freepik