Natural remedies for hoarseness and sore throat: சில சமயங்களில் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுக்களின் காரணமாக சிலருக்கு தொண்டை வலி அல்லது வெடிப்பு போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாக, அதிக குளிர் மற்றும் சூடான பொருட்களை ஒன்றாக உட்கொள்ளும்போது குரல் வெடிப்பு ஏற்படலாம். இது தவிர அதிகமாக பாடுவதும், கத்துவதும் காரணமாகவும் சிலரின் குரலும் வெடிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், சில சமயங்களில் பேசுவதும் கூட கடினமாகக் கூடும்.
குரல் வெடிக்கும் போது, பேசும் போது மிகவும் சத்தமாக பேச வேண்டும். ஆனால், இது குரலை மோசமாக்குகிறது. எனவே, இந்த சிக்கலை சமாளிப்பதற்கு சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. இதன் மூலம் குரல் விரைவில் குணமடையக்கூடும். இதில் குரல் வெடிப்புக்கான சில வீட்டு வைத்தியங்கள் குறித்து காணலாம். இதன் மூலம் வெடிப்புள்ள குரலை குணப்படுத்த முடியும்.
தொண்டை கரகரப்புக்கான வீட்டு வைத்தியங்கள்
தொண்டைக்கு ஓய்வு கொடுப்பது
குரல் உடைந்து போகும்போதோ அல்லது கரகரப்பாக இருக்கும் போதோ அதிகம் பேசக்கூடாது. எனவே முடிந்தவரை தொண்டையை தளர்த்திக் கொள்ள வேண்டும். இது குரலை தெளிவுபடுத்த உதவுகிறது. மேலும் குரலை சரிசெய்ய சிறிது நேரம் மௌனத்தை கடைபிடிக்கலாம். இது மிகவும் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தொண்டை வலியால் அவதியா?... உடனடி நிவாரணத்திற்கு எளிமையான வீட்டுக்குறிப்புகள்!
சூடான நீரின் பயன்பாடு
குரல் கரகரப்பாகவோ அல்லது வெடிப்பாகவோ இருக்கும் போது, வெந்நீரைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். இது குரலை மீட்டெடுக்க உதவுகிறது. குரலை மேம்படுத்த வெந்நீரைப் பல வழிகளில் பயன்படுத்தலாம்.
வெதுவெதுப்பான உப்பு நீர் - குரல் மாறினால் அல்லது வெடித்தால், வெதுவெதுப்பான உப்பு நீர் கொண்டு வாயைக் கொப்பளிக்கலாம். இதன் மூலம் குரலை சரிசெய்யலாம்.
நீராவி எடுத்துக் கொள்வது - குரலை மேம்படுத்த, சூடான நீரிலிருந்து நீராவி எடுக்கலாம். நீராவி எடுத்துக்கொள்வது மார்பு மற்றும் தொண்டையில் படிந்திருக்கும் சளியை அகற்றலாம். இதன் மூலம் தொண்டை தொற்றுகளைத் தடுக்கவும் முடியும்.
வெந்நீர் குடிப்பது - குரலை மேம்படுத்த சூடான நீரை குடிக்கலாம். சில நாள்கள் தொடர்ந்து சூடான நீரைக் குடிப்பதன் மூலம் குரலை மேம்படுத்தலாம். இதன் மூலம் தொண்டையும் தெளிவாக இருக்கும்.
தேன் பயன்படுத்துவது
தொண்டை கரகரப்புக்கு தேனின் பயன்பாடு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது குரலைக் குணப்படுத்த உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்துவதற்கு முதலில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த இரண்டு கலவைகளையும் கலந்து குடிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை உட்கொள்வது குரலைக் குணப்படுத்த உதவுகிறது.
பூண்டு பயன்பாடு
தொண்டைப் பிரச்சனையை குணப்படுத்துவதற்கு பூண்டு உதவுகிறது. இதற்கு இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளே காரணமாகும். இவை தொண்டையில் உள்ள பாக்டீரியா மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது. இதற்கு 2 பூண்டு பற்களை அரைத்து, அதில் தேன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, சிறிது வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உட்கொள்ளலாம். இது தொண்டைக்கு நிவாரணத்தை அளிக்கவும், குரல் விரைவில் குணமாகவும் உதவுகிறது.
இஞ்சி பயன்பாடு
கரகரப்பான குரலைக் குணப்படுத்துவதற்கு இஞ்சியை இந்த எளிய வழிகளில் பயன்படுத்தலாம்.
உலர் இஞ்சி பயன்பாடு - குரலை மேம்படுத்த உலர்ந்த இஞ்சி உதவுகிறது. இதற்கு முதலில் 100 கிராம் உலர்ந்த இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில் 2 கிராம் பெருங்காயம் மற்றும் 4 கிராம் கிராம்பு சேர்க்கலாம். பின், அனைத்து பொருட்களையும் அரைத்து ஒரு பொடி தயாரிக்க வேண்டும். பிறகு இந்தப் பொடியை காலை மற்றும் மாலையில் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளலாம். இது தொண்டையை உடனடியாக குணப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இஞ்சி மற்றும் தேன் ஒன்றாக சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?
இஞ்சி சாறு - தொண்டையில் படிந்திருக்கக்கூடிய சளியால், சிலருக்கு குரல் வெடிக்கிறது. எனவே தொண்டையில் சளி இருந்தால், இஞ்சி சாற்றைப் பயன்படுத்தலாம். இஞ்சி சாற்றை உட்கொள்வது தொண்டை மற்றும் மார்பில் படிந்திருக்கும் சளியை நீக்க உதவுகிறது. மேலும் இது குரலை உடனடியாக மேம்படுத்துகிறது.
குரல் கரகரப்பாகவோ அல்லது வெடித்தோ இருப்பின், இஞ்சியை நன்றாகத் தட்டி அரைக்க வேண்டும். பிறகு இதில் 2 கிராம்பு மற்றும் சிறிது பெருங்காயத்தை அரைத்து அதனுடன் சேர்க்கலாம். அதன் பிறகு, அதில் தேன் கலந்து அப்படியே நாக்கால் கலவையை ருசிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்வதன் மூலம், சில நாட்களில் குரல் குணமாவதை உணரலாம்.
இலவங்கப்பட்டையின் பயன்பாடு
சில சமயங்களில், தொண்டை வீக்கத்தாலும் குரல் கரகரப்பான பிரச்சனை ஏற்படலாம். இதற்கு இலவங்கப்பட்டை நன்மை பயக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டையின் குரலை குணப்படுத்த உதவுகிறது. இதை இலவங்கப்பட்டை உறிஞ்சுவது, இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது போன்ற வழிகளில் பயன்படுத்தலாம்.
குரலை மேம்படுத்த விரும்புபவர்கள், அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம். அதன் பிறகு 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். சிறந்த பலன்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை இதை உட்கொள்ளலாம். இது விரைவில் குணப்படுத்த உதவுகிறது.
இது தவிர, இலவங்கப்பட்டை டீ குடிக்கலாம். இதற்கு 1 கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் கொதித்ததும், அதை வடிகட்டி, அதில் 1 முதல் 2 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும். இது குரலுக்கு நிவாரணத்தைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல உணர்வா? என்ன காரணமா இருக்கும்.. மருத்துவரின் பதில் இதோ
கருப்பு மிளகின் பயன்பாடு
குரலை மேம்படுத்த கருப்பு மிளகைப் பயன்படுத்தலாம். கருப்பு மிளகை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
முதலில் 5 முதல் 6 கருப்பு மிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இதை ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சேர்த்து சமைக்கலாம். அதன் பிறகு, இதை அரைத்து நாக்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். குரலை மேம்படுத்த, இந்த கலவையை ஒரு நாளைக்கு 2 முறை எளிதாக உட்கொள்ளலாம். இது தொண்டைக்கு நிறைய நிவாரணத்தைத் தருகிறது.
மற்றொரு வழியாக, 2 சிட்டிகை கருப்பு மிளகுப் பொடியை எடுத்துக் கொண்டு, இதை எலுமிச்சை சாறுடன் கலக்க வேண்டும். அதன் பிறகு, இதை நாக்கால் எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இது தொண்டையில் உள்ள தொற்றைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது தொண்டை கரகரப்பை விரைவில் குணமாக்குகிறது.
கரகரப்பு அல்லது குரல் வெடிப்பு பிரச்சனையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இந்த குறிப்புகளைப் பயன்படுத்தலாம். ஆனால், பேசுவதில் அதிக சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்வது அவசியம். இதன் மூலம், தொண்டையில் ஏதேனும் கடுமையான பிரச்சனை இருந்தால், அதை சரியான நேரத்தில் குணப்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
Image Source: Freepik