Fri Sep 11, 2026 | 10:46 PM IST

Doctor Verified

தொண்டையில் சளி இருந்துட்டே இருக்கா.? மருத்துவர் சொல்வதை மட்டும் செய்யுங்க போதும்.!

தொண்டையில் சளி, வீக்கம், தொண்டை வலி போன்ற பிரச்சனையை விரைவில் குறைக்க மருத்துவர் தீபா பரிந்துரைக்கும் வீட்டுவழி சிகிச்சைகள் இங்கே..

தொண்டைச் சளி என்பது பலரையும் தொடர்ந்து வாட்டும் பிரச்சனையாக மாறியுள்ளது. சில நாட்களில் சரியானாலும், மீண்டும் மீண்டும் வருவது அதிகம் காணப்படுகிறது. இதைப் பற்றியும், தொண்டை சளியை சரி செய்ய வைத்திய ரீதியாக என்ன செய்யலாம் என்பதையும் மருத்துவர் தீபா விரிவாக விளக்குகிறார்.

தொண்டைச் சளி உண்மையில் எங்கே இருந்து வருகிறது?

மருத்துவர் தீபாவின் விளக்கப்படி, பொதுவாக தொண்டை பகுதியில் சளி உருவாகாது. அது மூச்சுக் குழல் பகுதியில் தான் உருவாகிறது. ஆனால், தொடர்ந்து பேசுபவர்கள், குரல் பயன்படுத்த வேண்டிய தொழிலில் இருப்பவர்கள், பாடகர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தொண்டையில் ரணம் மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வீக்கத்திலிருந்து வரும் திரவத்தையே பலர் “தொண்டைச் சளி” என தவறாக நினைக்கிறார்கள்.

Video Link: https://youtu.be/QbVTC1cKrCo

காரமான உணவை குறைத்தால் ரணம் குறையும்

தொண்டையில் வீக்கம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது:

* கார உணவுகளை குறைக்க வேண்டும்

* அதிகமாக கூச்சலிடுதல், நீண்ட பேச்சு ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்

* மிதமான சூடுநீரை 30 மில்லி அளவு தடவித் தடவிக் குடிக்க வேண்டும்

இது தொண்டை உலர்வை குறைத்து ரணத்தை ஆற்ற உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் பிளேட்லெட் எண்ணிக்கையை உயர்த்துமா?  நிபுணர் விளக்கம்! 

சூடுநீர் + கல் உப்பு + மஞ்சள்

இது மருத்துவர் தீபா பரிந்துரைக்கும் மிகச் சிறந்த இயற்கை கொப்பளிப்பு முறை.

* ஒரு குவளை சுடுநீரில்

* 1 ஸ்பூன் கல் உப்பு

* 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

இவற்றை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

சரியான கொப்பளிக்கும் முறை:

* தண்ணீரை வாயில் வைத்து மேலே பார்த்து “அண்ணாரா” செய்ய வேண்டும்

* தண்ணீர் தொண்டை ஆழம் வரை சென்று பிறகு தலையை கீழே குனிய வேண்டும்

* இதை 5–6 தடவை செய்யலாம்

இந்த முறையால் தொண்டை வீக்கம், ரணம் மற்றும் வலி மிக விரைவாக குறையும்.

தொண்டை வலி நீங்க “மிளகு–பால்” கஷாயம்

பேசிக் கொண்டே இருப்பதால் வலி நீங்காதவர்களுக்கு இந்த ரெமடி சிறப்பு:

* முக்கால் டம்பளர் பால்

* 1/4 டம்பளர் தண்ணீர்

* பால் கொதிக்கும் போது நுணுக்கமாக நசுக்கிய 10 மிளகு சேர்க்கவும்

* 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

* 1 டீஸ்பூன் பனை வெல்லம்

இதனை நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்தால் தொண்டைச் சளி–வலி கணிசமாக குறையும்.

பூண்டு–பால் ரெமடி

விரைவில் நிவாரணம் வேண்டும் என்பவர்களுக்கு மருத்துவர் தீபா பரிந்துரைக்கும் இன்னொரு முறை:

* பாலை கொதிக்க வைக்கவும்

* அதில் 3 பூண்டு பல் சேர்க்கவும்

* 1/4 டீஸ்பூன் மஞ்சள் கலந்து வடிகட்டவும்

* வடிகட்டிய பானத்தில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பருகவும்

ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் தொண்டைச் சளி, வீக்கம், வலி அனைத்தும் குறையும்.

இறுதியாக..

தொண்டைச் சளி, ரணம், வீக்கம் போன்றவை தொடர்ந்து குணமாகாமல் இருந்தாலும், வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய வைத்திய முறைகள் உடனடி நிவாரணம் வழங்கும். கார உணவு கட்டுப்பாடு, கொப்பளித்தல், மிளகு–பால், பூண்டு–பால் ஆகியவை தொண்டை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல்கள் மற்றும் நிபுணர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது உடல்நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.

Read Next

பொதுவான உடல்நலப் பிரச்சனைகளும்.. அதைப் போக்க தொப்புளில் தடவ வேண்டிய எண்ணெய்களும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 21, 2025 11:13 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Nov 21, 2025 11:13 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content