Expert

Sore Throat Remedies: இந்த குளிருல தொண்டை வலியா? உடனடியா போக்க இத செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Sore Throat Remedies: இந்த குளிருல தொண்டை வலியா? உடனடியா போக்க இத செய்யுங்க.


இந்த சிரமத்திலிருந்து விடுபட மருந்துகளை உட்கொள்ள ஆரம்பிக்கின்றனர். தொண்டை வலி மற்றும் தொண்டைப் புண் போன்ற பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம். இதில் தொண்டைப்புண் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் சவலியா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Steam Benefits: அதிகரிக்கும் காற்று மாசு; நீராவி பிடிப்பது இவ்வளவு நல்லதா?

தொண்டை வலிக்கான வீட்டு வைத்தியம் (Home Remedies for Sore Throat)

ஆம்லா

இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லா தொண்டை புண் அல்லது சளியை நீக்க உதவும் சிறந்த தேர்வாகும். இதற்கு நெல்லிக்காய் சாற்றை எடுத்து, அதில் 1 ஸ்பூன் அளவு தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வர தொண்டை வலி நீங்கும்.

இலவங்கப்பட்டை

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்வது சளி, இருமல் தொண்டைப் புண் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. இதற்கு ஒரு சிறிய இலவங்கப்பட்டை அல்லது அரை டீஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை தூளை ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்ட வேண்டும். பின் இதை ஆற வைத்து சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்து வர தொண்டை வலியை நீக்கலாம்.

உலர் இஞ்சி

தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற நினைப்பவர்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் அளவு உலர் இஞ்சி பொடியைக் கலந்து குடிக்கலாம்.

சூடான நீர் மற்றும் எலுமிச்சை

வெதுவெதுப்பான நீரில் அரைடீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்து வர தொண்டை புண் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Drink: நெஞ்செரிச்சலுக்கு காலையில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்

வெந்தய நீர்

தொண்டை வலிக்கு வெந்தய நீர் மிகவும் நன்மை பயக்கும். வெந்தயம் தொண்டையை சுத்தப்படுத்தக்கூடிய இயற்கைச் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இதற்கு 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டிய பிறகு டீ போல குடிக்கலாம்.

உப்பு நீர்

ஒரு கிளாஸில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மஞ்சள் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் ஆறவைத்து, இந்த நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை செய்யலாம். இவை தொண்டை வலியிலிருந்து விடுபட வைப்பதுடன், தொண்டைக்கு நிவாரணம் தருகிறது.

துளசி இலைகள்

குளிர்காலத்தில் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற 4 முதல் 5 துளசி இலைகளைச் சிறிது தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். பின் இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம் அல்லது விரும்பினால் தேன் சேர்த்து அருந்தலாம்.

இஞ்சி

தொண்டை புண் குணமாக, இஞ்சியை எடுத்துக் கொள்ளலாம். ஒரு அங்குல புதிய இஞ்சியை 1 கப் தண்ணீரில் 3-4 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். பின் இதை குடித்து வர தொண்டை வலி குணமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Breathing: வாய் வழியாக சுவாசிக்கும் கெட்ட பழக்கம் உங்களுக்கு உள்ளதா?

சூடான நீர்

குளிர்காலத்தில் தொண்டை வலிக்கு இதமாக நாள் முழுவதும் வெந்நீரை அருந்தலாம். இவை தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களிலிருந்து விடுபட வைப்பதுடன், தொண்டை வலியிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது.

அதிமதுரம்

தொண்டை வலியைக் குணமாக்க உதவும் வைத்திய முறைகளில் அதிமதுரம் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இதில் ஒரு டீஸ்பூன் முலேத்தி பொடியை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை சாப்பிட்டு வர தொண்டை வலி விரைவில் குணமாகும்.

தொண்டைப் புண், தொண்டை வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்திய முறைகளைக் கடைபிடிக்கலாம். இவை தொண்டை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மவுத்வாஷ் தயாரிக்க உதவும் ஆப்பிள் சைடர் வினிகர். வீட்டிலேயே இப்படி செய்யுங்க.

Image Source: Freepik

Read Next

Tooth Pain Remedies: 5 நிமிடத்தில் பல் வலிக்கு நிவாரணம் வேண்டுமா?…வீட்டு வைத்தியம் இதோ!

Disclaimer