
Why does it feel like something is stuck in your throat: அன்றாட வாழ்வில் பலரும் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அவை சிறியது முதல் பெரியது வரை இருக்கலாம். அவ்வாறே, ஒரு சிலர் அவ்வப்போது தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டது போல உணர்வை சந்திக்கின்றனர். இந்த உணர்வு பலருக்கும் எழலாம். இவ்வாறு தொண்டையின் கீழ் பகுதியில் சளி சேரும் உணர்வு, தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு, தொண்டையில் அசௌகரியம் அல்லது எரியும் உணர்வு போன்ற உணர்வு ஏற்படும் போது கூடவே இருமல் ஏற்படுகிறது. இது தவிர, எதையாவது விழுங்க வேண்டும் என்ற ஆசை, பேசுவதில் சங்கடமாக உணர்வது மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்றவையும் ஏற்படும்.
பலரும் சந்திக்கும் பிரச்சனையான தொண்டையில் ஏதோ சிக்கிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. வானிலை மாற்றத்தின் காரணமாக தொண்டை தொற்று ஏற்படலாம். மேலும், மாசுபட்ட பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் பெரும்பாலும் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக தொண்டை வலி, அசௌகரியம் மற்றும் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த உணர்விற்கான காரணங்கள் குறித்து லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸின் எம்.டி மருத்துவர் டாக்டர் சீமா யாதவ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Home remedies for cough: தீராத சளி இருமலால் தொந்தரவா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
தொண்டையில் ஏதோ சிக்கிக் கொள்வது போன்ற உணர்வுக்கான காரணங்கள்
தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதாக உணர்ந்தால், அதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
- தொண்டையில் ஏதேனும் சிக்கிக் கொள்ளக்கூடாத பொருள் சிக்கிக் கொள்வதால் அசௌகரியமான உணர்வு ஏற்படலாம். சில சமயங்களில் நாணயம், உணவில் இருக்கும் சிறிய மீன் எலும்பு அல்லது கூழாங்கல் போன்றவை கூட தொண்டையில் சிக்கிக் கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் ஒருவர் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
- தொண்டையின் பின்புறத்தில் அமைந்துள்ள திசுக்களின் கட்டியே டான்சில்ஸ் ஆகும். இது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைப் பிடித்து வடிகட்டிகளாக செயல்படுகின்றன. இந்த டான்சில்ஸ் வீங்குவதால் டான்சிலிடிஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படலாம்.
- சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அடிக்கடி மூக்கு மற்றும் தொண்டையில் சளி தேங்கி நிற்கும். இவ்வாறு தொண்டையில் சளி தேங்கி நிற்பதன் காரணமாக அதில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படலாம்.
- கழுத்துக்கு அருகில் எலும்பு வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவும் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படும். இது கர்ப்பப்பை வாய் ஆஸ்டியோஃபைடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Itchy throat remedies: தொண்டை அரிப்பால் அவதியா? உடனே சரியாக்க உதவும் சூப்பர் ரெமிடிஸ் இதோ
தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
தொண்டையில் ஏதாவது சிக்கிக்கொண்டதாக உணர்வு ஏற்பட்டால் சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.
- உங்களுக்கு தொண்டையில் ஏதாவது சிக்கிக்கொண்டதாக உணர்வதாக இருந்தால், ஐஸ் கட்டியை உறிஞ்சலாம். இது வீக்கத்தைக் குறைத்து வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
- பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது தொண்டை வலி அல்லது எரிச்சலைப் போக்கலாம்.
turmeric-milk-warm-drink-in-the-winter
- தொண்டையில் ஏதாவது சிக்கிக் கொள்வதாக இருப்பின், பூண்டை மென்று சாப்பிடுவது தொண்டை வலி அல்லது எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- சூடான நீரிலிருந்து நீராவி எடுப்பதன் மூலம் தொண்டைப் பிரச்சனையைக் குணப்படுத்தலாம்.
- தொண்டையில் ஏற்படக்கூடிய அசௌகரியத்தைப் போக்குவதற்கு துளசி நீரைக் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது துளசி இலைகளைக் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொண்டையில் சிக்கிய உணர்வு ஏற்படும் போது இந்த குறிப்புகளின் உதவியுடன் அதிலிருந்து நிவாரணத்தைப் பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தொண்டை வலியால் அவதியா?... உடனடி நிவாரணத்திற்கு எளிமையான வீட்டுக்குறிப்புகள்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version