
Symptoms of stool getting stuck in the intestines: பொதுவாக குடல் அடைப்பு என்பது ஒரு இரைப்பை குடல் நிலையைக் குறிப்பதாகும். இந்த குடல் அடைப்பு காரணமாக செரிமான உணவானது சிறு அல்லது பெரிய குடல் வழியாக செல்ல முடியாது. இது ஒரு பொதுவான ஆனால் ஆனால் தீவிரமான நிலையைக் குறிக்கக் கூடியதாகும். குடல் அடைப்புக்கான காரணம் வயது வாழ்க்கை முறை அல்லது வயிற்று அறுவை சிகிச்சையின் வரலாற்றைப் பொறுத்தது ஆகும். இதில் குழந்தைகளில் ஏற்படக்கூடிய குடல் அடைப்புக்கான பொதுவான காரணம், குடலில் ஏற்படும் பிறவி குறைபாடுகள் ஆகும்.
இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனைகளின் மூத்த இரைப்பை குடல் நிபுணர் மற்றும் ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் ஜி ஹர்ஷவர்தன் ரெட்டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
குடல் பகுதியில் மலம் தக்கவைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள்
- குமட்டல் மற்றும் வாந்தி
- வயிற்று வலி
- குடல் இயக்கத்தின் போது வலி
- சோர்வு மற்றும் பலவீனம்
- குடல் இயக்கத்தில் சிக்கல்
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முன்கூட்டிய வயதாவதைத் தடுக்க முடியுமா?
குடலில் மலம் குவிவதற்கான காரணங்கள்
குடலில் மலம் அடைத்தல், அதாவது குடல் அடைப்பு என்பது வயதைப் பொறுத்தது ஆகும். மேலும், குடல் அடைப்பு பிரச்சனை உள்ளவர்களிடமும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் காணப்படுகிறது. இதில் குடலில் மலம் சேர்வதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
world-IBD Day-2025-why-it-matters-and how-to-take-care-of-your-gut-health-Main
- குழந்தைகளில் குடல் அடைப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் குடலில் பிறவி குறைபாடு இருப்பதாகும்.
- பெரியவர்களில் குடலிறக்கம், இறுக்கம், வீரியம் மிக்க கட்டி மற்றும் முந்தைய அறுவை சிகிச்சை போன்றவற்றால் குடல் அடைப்பு ஏற்படலாம்.
- உணவில் நார்ச்சத்து இல்லாததும் குடலில் மலம் ஒட்டிக் கொள்வதற்கு காரணமாக இருக்கலாம். உண்மையில் குடல்களைச் சுத்தம் செய்வதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகும். இந்த நார்ச்சத்துக்கள் குடல்களைச் சுத்தம் செய்து, குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது.
- குப்பை உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களும் குடல் அடைப்பால் பாதிக்கப்படலாம். ஏனெனில் துரித உணவில் நார்ச்சத்து சிறிதும் இல்லை. இதனால் இது குடலில் ஒட்டிக்கொண்டு நீண்ட நேரம் வெளியே வராமல் இருக்கும்.
- குடல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். ஏனெனில், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் குடலில் மலம் குவிகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வது குடல்களை நன்கு சுத்தம் செய்ய உதவுகிறது.
- குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பதும் அவசியமாகும். தண்ணீர் குடிப்பவர்களுக்கு மலம் கழிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதே சமயம், தண்ணீர் குடிக்காதவர்களின் மலம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்குமா?
குடலில் மலம் தேங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
குடல் அடைப்பு என்பது மருத்துவ அவசரநிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, நோயாளி இதன் அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். மேலும் இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். எனினும், சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
nutritionist-explains-a-simple-4-step-process-for-improving-gut-health-Main
நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது
நார்ச்சத்துக்கள் குடல் வழியாக மலத்தை திறம்பட வெளியேற்ற உதவுகிறது. இது குடல் இயக்க செயல்முறையை எளிதாக்குகிறது.
திரவ உணவு எடுத்துக்கொள்வது
நாள் முழுவதும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, நீரேற்றமாக இருக்க பழச்சாறு, காய்கறி சாறுகளையும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், தேங்காய் தண்ணீர் குடிப்பதும் நீரேற்றமாக இருப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
துரித மற்றும் குப்பை உணவுகளைத் தவிர்ப்பது
துரித, குப்பை மற்றும் வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் எரிச்சல் உணர்வு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
முன்பு வயிற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் மருத்துவரைத் தொடர்பு கொள்வது அவசியமாகும். எனவே நீண்ட காலமாக வயிற்று வலி அல்லது மலச்சிக்கல்லால் பாதிக்கப்பட்டிருப்பின், நிச்சயமாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியம் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்குமா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version