Doctor Verified

இந்த அறிகுறிகள் இருந்தால்.. நீங்கள் தவறான முறையில் மலம் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்..

மலம் கழிக்கும் போது செய்யும் சில பழக்கவழக்கங்கள் piles, fissure போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். Gastroenterologist Dr. Saurabh Sethi கூறிய 8 தவறுகள் மற்றும் சரியான முறைகள் பற்றி தமிழில் அறிந்துகொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
இந்த அறிகுறிகள் இருந்தால்.. நீங்கள் தவறான முறையில் மலம் கழிக்கிறீர்கள் என்று அர்த்தம்..


நமது வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்கள், உட்காரும் முறை போன்றவை எல்லாம் செரிமான ஆரோக்கியத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. ஆனால் அதில் மிக முக்கியமான ஒன்று மலம் கழிக்கும் விதம். ஆம்! குடல் நோய் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி கூறுவதுப்படி, பலர் அறியாமலேயே செய்யும் சில தவறுகள் குடல் ஆரோக்கியத்தையும், பயில்ஸ், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன. இப்போது அந்த 8 முக்கிய தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

அதிகமாக அழுத்துவது

மலம் கழிக்கும் போது அதிகமாக வலியுடன் அழுத்துவது rectum பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இது piles, fissure, rectal prolapse போன்ற பிரச்சனைகளை தூண்டும்.

தீர்வு: சீரான உணவு பழக்கவழக்கங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவு, போதிய தண்ணீர் குடிப்பது அழுத்தமின்றி மலம் கழிக்க உதவும்.

நீண்ட நேரம் கழிப்பறையில் உட்காருவது

5 நிமிடத்திற்கு மேல் கழிப்பறையில் உட்காருவது, அந்த பகுதியின் நரம்புகள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

தீர்வு: மலம் கழிப்பதற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், இயல்பாகவே வந்த உணர்ச்சிக்கேற்ப குறுகிய நேரத்தில் முடித்து விடுங்கள்.

தவறான உட்காரும் நிலை

90° சாய்வில் உட்காருவது rectum passage-ஐ அடைத்து, மலம் வெளியேற சிரமத்தை உண்டாக்கும்.

தீர்வு: squat position-ல் உட்காருவது சிறந்தது. Footstool-ஐ பயன்படுத்துவதால் rectum நேராகி எளிதாக மலம் வெளியேறும்.

இந்த பதிவும் உதவலாம்: லெமன் வாட்டர் முதல் இஞ்சி டீ வரை.. மலச்சிக்கலுக்கான சிறந்த பானங்கள் இங்கே.! மருத்துவர் பரிந்துரை..

மலம் கழிக்க வேண்டிய உணர்ச்சியை புறக்கணிப்பது

முதல் முறை உணர்ந்தபோதே மலம் கழிக்காமல் தள்ளிப்போடுவது மலத்தை கடினமாகவும் உலர்ந்ததாகவும் மாற்றும்.

தீர்வு: உடலின் signal-ஐ உடனே கேளுங்கள். தள்ளிப்போடாமல் உடனே கழிப்பது மலச்சிக்கலை குறைக்கும்.

மொபைல், புத்தகம் பார்த்துக்கொண்டே உட்காருவது

போனில் scroll செய்வது, புத்தகம் வாசிப்பது என கவனம் சிதறும்போது தேவையற்ற நேரம் கழிப்பறையில் செலவாகிறது. இதனால் அதிக அழுத்தம் அந்த பகுதியில் ஏற்படும்.

தீர்வு: கழிப்பறையை “வாசிப்பறை” ஆக மாற்றாமல், அந்த வேலைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

தினமும் கட்டாயமாக மலம் கழிக்க முயற்சிப்பது

அனைவருக்கும் “ஒவ்வொரு நாளும்” மலம் கழிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சிலருக்கு வாரத்தில் 3 முறை கூட சாதாரணம்.

தீர்வு: உடலின் இயல்பான முறையை மதியுங்கள். கட்டாயமாக அழுத்துவது பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.

நார்ச்சத்து மற்றும் தண்ணீர் குறைவாக எடுத்துக்கொள்வது

Low-fiber diet காரணமாக stools கடினமாகும். இதுவே constipation-க்கு முதன்மை காரணம்.

தீர்வு: தினமும் 25-30 கிராம் நார்ச்சத்து உணவு (பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள்) மற்றும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது

Sedentary lifestyle குடல் இயக்கத்தை (gut motility) குறைக்கும். இதனால் மலம் கழிக்க சிரமமாகும்.

தீர்வு: தினமும் குறைந்தது 10-15 நிமிடங்கள் brisk walk, yoga அல்லது லேசான exercise செய்ய வேண்டும்.

இறுதியாக..

நமது தினசரி பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தும். “சரியான உட்காரும் நிலை, சரியான நேரம், சரியான உணவு பழக்கவழக்கம்” – இவை மூன்றும் இருந்தால் மலம் கழிக்கும் பிரச்சனைகள் பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான சுகாதார விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. நீண்டநாள் மலச்சிக்கல், இரத்தம் காணுதல், கடுமையான வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Read Next

சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாக உணர்கிறீர்களா.? வயிற்று உப்புசத்தை போக்க எளிய வழியை இரைப்பை குடல் நிபுணர் இங்கே பகிர்ந்துள்ளார்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 22, 2025 16:31 IST

    Published By : Ishvarya Gurumurthy