Doctor Verified

நல்லதுனு சாப்பிடுறீங்களா.? இதுவே குடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள்.! மருத்துவர் எச்சரிக்கை..

நல்லது என்று நினைத்து தினமும் சாப்பிடும் சில உணவுகள் நம் குடல் ஆரோக்கியத்தை மெதுவாக பாதிக்கலாம் என்று காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி எச்சரிக்கிறார். எந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும், அதற்குப் பதிலாக என்ன சாப்பிடலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
நல்லதுனு சாப்பிடுறீங்களா.? இதுவே குடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகள்.! மருத்துவர் எச்சரிக்கை..


“ஹெல்தி” என்று நம்பி சாப்பிடும் சில உணவுகள் நம் உடலுக்குள் மெதுவாக கேடு விளைவிக்கின்றன என்றால் நம்புவீர்களா? ஆம், காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்ற சில “சுகாதாரமான” உணவுகள் உண்மையில் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்று எச்சரித்துள்ளார். அவர் கூறியபடி, “நல்லது என்று சாப்பிடுவது எல்லாம் நமக்கு நல்லதல்ல” - சில உணவுகள் பாசி பேக்டீரியா வளர்ச்சி, உப்புசம் மற்றும் செரிமான சீர்கேடு ஏற்படுத்தக்கூடும்.

குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்

சுவை சேர்க்கப்பட்ட தயிர் (Flavored Yogurts)

பலர் இதை ஹெல்தி டெசர்ட் அல்லது பிரேக்‌பாஸ்ட் என சாப்பிடுகிறார்கள். ஆனால் இதில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் செயற்கை சுவைச்சேர்க்கைகள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, பேக்டீரியா சமநிலையை கெடுக்கிறது, இதனால் உப்புசம் மற்றும் செரிமான சிரமம் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக வெறும் தயிருடன் (plain yogurt) பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.

புரோட்டீன் பார்கள் (Protein Bars)

பல புரோட்டீன் பார்களில் சர்க்கரை ஆல்கஹால்கள் (sorbitol, maltitol) மற்றும் gum compounds உள்ளன. இவை வயிற்றில் வாயு, உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும். இதற்கு பதிலாக முட்டை, தோஃபு, வறுத்த நட்டுகள் போன்ற இயற்கையான புரத மூலங்கள் சாப்பிடுங்கள்.

சுவை சேர்க்கப்பட்ட தாவர பால் (Flavoured Plant-Based Milks)

சில ஆமண்ட் அல்லது ஓட்ஸ் பால் வகைகளில் emulsifiers மற்றும் சேர்க்கைச் சர்க்கரை நிறைந்திருக்கிறது. இது குடல் சுவர் (gut lining) பலவீனப்படுத்தி, inflammation ஏற்படுத்தும். இதற்கு பதிலாக இனிப்பு சேர்க்கப்படாத பாதாம் பால் அல்லது சோயா பால் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பாலியல் ஆரோக்கியத்திற்கான 5 சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்.. மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்

கிரனோலா & பிரேக்‌பாஸ்ட் சீரியல் (Granola & Breakfast Cereals)

“High-fiber” என்று விளம்பரப்படுத்தப்படும் பல சீரியல் வகைகள் உண்மையில் அதிக சர்க்கரை மற்றும் refined oils கொண்டவை. இது insulin spikes மற்றும் குடல் அலர்ஜி (gut inflammation) ஏற்படுத்தும். இதற்கு பதிலாக, ஓட்ஸ் + சியா விதைகள் + பழங்கள் சேர்த்து வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம்.

கலோரி இல்லாத பானங்கள் & டயட் சோடாக்கள் (Zero-Cal Drinks & Diet Sodas)

பலர் இதை “சர்க்கரை இல்லாதது” என்று நம்பி குடிப்பார்கள். ஆனால் இதில் உள்ள aspartame, sucralose போன்ற செயற்கை இனிப்புச் சேர்க்கைகள் குடல் மைக்ரோப்ஸை (gut microbes) கெடுக்கும். இதனால் வயிற்று வீக்கம், craving, மற்றும் செரிமான சீர்கேடு ஏற்படும். இதற்கு மாற்றாக எலுமிச்சை அல்லது புதினா சேர்த்த sparkling water பருகலாம்.

பேக்கேஜ் செய்யப்பட்ட சாலட் டிரஸ்ஸிங்குகள் (Packaged Salad Dressings)

பல சாலட் டிரஸ்ஸிங்குகளில் seed oils, preservatives, additives போன்றவை அடங்கியுள்ளன. இது குடல் அழற்சியை அதிகரித்து, ஆரோக்கிய பேக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. இதற்கு பதிலாக வீட்டிலேயே olive oil + lemon juice + spices சேர்த்து தயாரிக்கலாம்.

 

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

மருத்துவர் ஆலோசனை

“நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ‘குறைந்த கலோரி’ அல்லது ‘சுவைச் சேர்க்கைகள்’ தேவையில்லை. உணவு எளிமையாக, இயற்கையாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியம் நல்லது என்றால் உடலின் மற்ற அனைத்தும் சீராக இருக்கும்” என்று டாக்டர் சௌரப் சேதி கூறுகிறார்.

இறுதியாக..

நல்லது என்று நம்பி சாப்பிடும் பல உணவுகள் உண்மையில் குடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. செயற்கை சுவைகள், சேர்க்கைச் சர்க்கரை, மற்றும் பாக்கெட் உணவுகள் குடலில் உள்ள நன்மை பேக்டீரியாக்களை பாதிக்கின்றன. எனவே, இயற்கையான, எளிய மற்றும் குறைந்த செயல்முறை (minimally processed) உணவுகளை தேர்வு செய்வது தான் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய வழி.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தளத்தில் பகிரப்பட்ட டாக்டர் சௌரப் சேதி அவர்களின் மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை மட்டுமே. உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ப உணவுமுறையில் மாற்றம் செய்ய முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

Read Next

முடக்கத்தான் கீரை எப்படி சாப்பிட்டால் வேலை செய்யும் தெரியுமா.? மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 23, 2025 20:43 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்