நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (Fibre Rich Foods) நம்மை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருப்பதுடன், உடல் முழுவதும் சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகின்றன. சமீபத்தில், ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற குடல்நல நிபுணர் டாக்டர் சௌரப் சேதி, தனது சமூக வலைதளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ள 8 உணவுகளை பகிர்ந்து, அவை குடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டினார்.
மருத்துவர் பகிர்ந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
1. சியா விதைகள் (Chia Seeds)
இரண்டு ஸ்பூன் சியா விதைகள் = 10g நார்ச்சத்து. செரிமானத்தை மெதுவாக்கி, குடல் நுண்ணுயிர்களை ஊட்டும். ஸ்மூத்தி, தயிர் அல்லது இரவு ஊறவைத்து காலை சாப்பிடலாம்.
2. பருப்பு வகைகள் (Lentils)
ஒரு கப் சமைத்த பருப்பு = 15g நார்ச்சத்து. சூப், கறி அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. ராஸ்பெர்ரி (Raspberriesஒரு கப் = 8g நார்ச்சத்து. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம், குறைந்த சர்க்கரை அளவு. தயிர், ஓட்ஸ், ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
4. அவகாடோ (Avocados)
ஒரு நடுத்தர அவகாடோவில் = 10g நார்ச்சத்து. சாலட் அல்லது டோஸ்டில் சேர்த்து சாப்பிடலாம்.
5. ப்ரோக்கோலி (Broccoli)
சமைத்த ஒரு கப்பில் = 5g நார்ச்சத்து. குடல் ஆரோக்கியத்துக்கு உதவும் சல்ஃபரோபேன் நிறைந்தது.
இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலா.? கவலை வேண்டாம்.. உடனே உங்க டயட்டில இத சேருங்க..
6. ஓட்ஸ் (Oats)
சமைத்த ஒரு கப்பில் = 4g நார்ச்சத்து. கொழுப்பு குறைக்கவும், குடல் ஆரோக்கியத்துக்கும் உதவும். ஓட்மீல் அல்லது கஞ்சி போல் சாப்பிடலாம்.
7. ஆளி விதைகள் (Flaxseeds)
ஒரு ஸ்பூன் (அரைப்பது சிறந்தது) = 3g நார்ச்சத்து. ஹார்மோன் சமநிலைக்கும், குடலுக்கும் நல்லது. ஸ்மூத்தி, தயிரில் கலந்து தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
8. கொண்டைக்கடலை & பயறு (Chickpeas & Beans)
ஒரு கப் = 13-15g நார்ச்சத்து. குடலை குணப்படுத்தும் புட்ரேட் உற்பத்தியை அதிகரிக்கும். சூப், கறி, சில்லா போன்றவற்றில் சேர்த்து தினமும் சாப்பிடலாம்.
இறுதியாக..
டாக்டர் சௌரப் சேதி கூறியதாவது: “இந்த 8 நார்ச்சத்து உணவுகளை தினசரி உணவில் சேர்த்தால், குடல் ஆரோக்கியம், செரிமானம், உடல் எடை கட்டுப்பாடு ஆகியவை மேம்படும். எந்த அளவு உணவைச் சாப்பிட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.