இன்றைய காலத்தில், எளிதாகக் கிடைக்கும் ஸ்னாக்ஸ் உணவுகளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துகளை பலர் கவனிக்கவில்லை. குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில தினசரி ஸ்னாக்ஸ் பழக்கங்கள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள 10 முக்கியமான தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை பார்ப்போம்.
இடைவிடாமல் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது
குடலுக்கு ஓய்வு தேவை. ஆனால், எப்போதும் சிறிய சிறிய ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம், குடலுக்கு ஓய்வு தராமல் செயல்பட வைக்கிறது. இது குடலின் இயல்பான ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.
போனில் ஸ்க்ரோல் செய்யும்போது சாப்பிடுவது
யோசனை இன்றி, சோஷியல் மீடியாவில் ஸ்க்ரோல் செய்யும் போது சாப்பிடுவது அதிக கலோரி உட்கொள்ள வழிவகுக்கும். இது ஜீரணத்திற்கு கூடுதல் அழுத்தம் தருகிறது.
“ஆரோக்கியம்” என்ற பெயரில் வரும் பார் உணவுகள்
பல ultra-processed snack bars ஆரோக்கியமானவை என விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றில் அதிக சர்க்கரை, செயற்கை சேர்வுகள், ரசாயனங்கள் அடங்கியிருப்பதால் குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: புளிப்பான உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானது அல்ல.! மருத்துவர் சொல்வதை கேளுங்கள்..
இனிப்பான பானங்கள் & எனர்ஜி டிரிங்க்ஸ்
Sugary drinks, energy drinks போன்றவை ஸ்னாக்ஸ் எனக் கருதி சாப்பிடுபவர்கள் அதிகம். ஆனால் இவை கல்லீரல் கொழுப்பை அதிகரித்து, நீண்ட காலத்தில் fatty liver பிரச்னையை ஏற்படுத்தும்.
நட்டு பட்டர் அதிகம் சாப்பிடுவது
Nut butters ஆரோக்கியமானது என கருதப்பட்டாலும், அதிகமாக சாப்பிடுவது மறைமுகமாக அதிக கலோரிகள் மற்றும் எண்ணெய்கள் உடலில் சேர்க்கிறது. இது கல்லீரல் மீது அழுத்தம் தருகிறது.
சுவை சேர்க்கப்பட்ட தயிர் சாப்பிடுவது
Flavored yogurts – அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகள் சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரண/plain தயிர் ஆரோக்கியமானது, ஆனால் flavored yogurt குடல் மைக்ரோபையோமுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
சிப்ஸ், ஃப்ரைஸ் மற்றும் வேகவைத்த ஸ்னாக்ஸ்
Fried snacks அதிக எண்ணெய், உப்பு, காரத்தால் நிரம்பியவை. குடல் சுகாதாரத்தை பாதித்து, கல்லீரல் நச்சுப் பண்புகளை நீக்குவதற்கான திறனை குறைக்கின்றன.
பசியின்றி சாப்பிடும் பழக்கம்
பசியின்றி சாப்பிடும் பழக்கம், குடல் மற்றும் கல்லீரலை தேவையின்றி வேலை செய்ய வைக்கிறது. இதனால் ஜீரண பிரச்னைகள் உருவாகும்.
View this post on Instagram
நார்ச்சத்து இல்லாத ஸ்னாக்ஸ்
பல ஸ்னாக்ஸ் உணவுகளில் fiber இல்லை. நார்ச்சத்து இல்லாமல் சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் குறைந்து, சீரான மலச்சிக்கல் பாதிக்கப்படுகிறது.
இரவு நேர ஸ்னாக்ஸ் சாப்பிடுவது
Late-night snacking – உடல் ஓய்வு பெறும் நேரத்தில் சாப்பிடுவது சீரணத்தை பாதித்து, தூக்கத்தையும் கல்லீரல் செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது.
இறுதியாக..
டாக்டர் சௌரப் சேதியின் எச்சரிக்கைப்படி, தினசரி ஸ்னாக்ஸ் பழக்கங்களில் சிறிய மாற்றங்களை செய்தால் கூட குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். சரியான நேரத்தில், சரியான அளவில், ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் உணவுகளை தேர்வு செய்வதே சிறந்த வழி.
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேதி பகிர்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளவை பொது தகவலுக்காக மட்டுமே. தனிப்பட்ட சுகாதார சிக்கல்களுக்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 22, 2025 09:38 IST
Published By : Ishvarya Gurumurthy