நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதில் குடல் மற்றும் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு முறைகள் இவற்றை பாதுகாக்க உதவினாலும், காலை நேரத்தில் சில சத்தான உணவுகளை சேர்த்தால் குடல்–கல்லீரல் செயல்பாடு மேலும் பலம் பெறும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் ஜோசெஃப் சால்ஹப், தனது வீடியோவில், தாம் தினமும் காலை சாப்பிடும் 3 உணவுகளை பகிர்ந்துள்ளார். இவை குடல் மற்றும் கல்லீரலை நேரடியாகப் பாதுகாக்கும் வகையில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறுகிறார்.
1. பெர்ரிகள் – குடலும் கல்லீரலும் விரும்பும் சூப்பர் உணவு
புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி போன்ற பெர்ரிகள் காலை நேரத்தில் சாப்பிட சிறந்த சத்துணவுகள். டாக்டர் சால்ஹப் கூறுவதில், அவர் பெரும்பாலும் இவற்றை புதிதாக அல்லது freeze-dried வடிவிலோ எடுத்துக்கொள்வார். "புளூபெர்ரிகளில் 'ப்டெரோஸ்டில்பீன்' (Pterostilbene) என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது கல்லீரலை சுத்தப்படுத்துவதிலும், வயதானதை தாமதப்படுத்துவதிலும், புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது" என அவர் விளக்குகிறார்.
2. மிக்ஸ் நட்டுகள் – மூளை, குடல், கல்லீரல் அனைத்திற்கும் நன்மை
பெர்ரிகளுடன் ஒரு கைப்பிடி கலப்பு நட்டுகளையும் தினமும் காலை சாப்பிடுவதாக நிபுணர் பகிர்ந்துள்ளார். வால்நட், ஆல்மண்ட், பிஸ்தா, காசு, பிக்கான், மெக்டேமியா போன்ற நட்டுகளில் நன்மை செய்யும் சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஆராய்ச்சிகள் படி தொடர்ந்து நட்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் நல்ல மூளை செயல்பாடு, குறைந்த டிமென்ஷியா அபாயம், மேலும் கோலன் புற்றுநோய் குறைவான அபாயம் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் நட்டுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: கம்பு vs கேழ்வரகு.. 45 வயதுக்கு பிறகு எது சிறந்தது.? மருத்துவர் விளக்கம்..
3. பிளாக் காபி – கல்லீரலின் பாதுகாப்பு கவசம்
காலை நேரத்தில் பிளாக் காபி அருந்துவது கல்லீரல் மற்றும் மூளை நலனுக்கு சிறந்தது என டாக்டர் சால்ஹப் கூறுகிறார். அவர் குறிப்பாக light roast காபியே சத்துகள் பாதுகாப்பாக இருக்கும் காரணத்தால் அதைத் தேர்வு செய்கிறார். பிளாக் காபி, கல்லீரல் கொழுப்பை குறைப்பதில், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், மூளை செயல்பாட்டை உறுதிசெய்வதில், மேலும் கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இறுதியாக..
குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை தினசரி பாதுகாக்க அதிக நேரம் தேவையில்லை. பெர்ரிகள், கலப்பு நட்டுகள், பிளாக் காபி என மூன்றையும் காலை உணவாக எளிமையாகச் சேர்த்துக்கொண்டால் உடலின் செரிமான முறை, கல்லீரல் செயல்பாடு, மூளை நலம் என பல முக்கிய அம்சங்கள் மேம்படும். தொடர்ந்து பின்பற்றப்படும் இந்த சிறிய பழக்கம் நீண்டகால ஆரோக்கியத்திற்கு பெரிய முதலீடாக இருக்கும்.
Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனை அல்ல. உடல்நிலை பிரச்சனைகள், கல்லீரல்/குடல் நோய்கள் அல்லது கர்ப்பம் போன்ற நிலைகளில் மருத்துவரை சந்தித்துப் பிறகே உணவில் மாற்றம் செய்யவும்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
-
Current Version
Nov 17, 2025 10:57 IST
Published By : Ishvarya Gurumurthy