Fri Sep 11, 2026 | 10:49 PM IST

Doctor Verified

மாதுளை ஜூஸ் முதல் கிரான்பெர்ரி ஜூஸ் வரை.. குடல் & கல்லீரல் ஆரோக்கியத்துக்கான 5 முக்கிய பானங்கள்.! டாக்டர் சல்ஹாப் பரிந்துரை..

குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் 5 முக்கிய ஜூஸ்களை காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் ஜோசப் சல்ஹாப் பரிந்துரைக்கிறார். மாதுளை, ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி ஜூஸ்களின் நன்மைகளை அறியுங்கள்.

உடல் நலம் பெரும்பாலும் குடல் மற்றும் கல்லீரல் செயல்பாட்டின் மீது நேரடியாக பாதிக்கப்படும். ஆனால், நம் அன்றாட உணவில் சிறிய மாற்றங்களே இந்த இரு முக்கிய உறுப்புகளையும் பெரிதும் பாதுகாக்கும் என காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் ஜோசப் சல்ஹாப் தெரிவிக்கிறார்.

Instagram-ல் தொடர்ந்து ஊட்டச்சத்து குறிப்புகளை பகிர்ந்து வரும் இவர், தன்னுடைய குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்காக குடிக்கும் 5 முக்கிய ஜூஸ்கள் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு ஜூஸுக்கும் அறிவியல் ஆதாரங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1. மாதுளை ஜூஸ் – கல்லீரல் ஆரோக்கியத்திற்கான முதல் தேர்வு

2024 மார்ச் மாத ஆய்வின் படி, மாதுளை ஜூஸை தொடர்ந்து குடிப்பது கல்லீரல் என்சைம்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பெரும்பாலும் அதிக எடை, கொழுப்பு, மெடபாலிக் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த பலன் தரும். மாதுளை உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் திசுக்களில் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

2. ப்ளூபெர்ரி ஜூஸ் – மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கும் சக்தி

2010 ஆய்வின் படி, ப்ளூபெர்ரி ஜூஸை சில வாரங்கள் கூட குடித்தால், நினைவாற்றல், கவனிப்பு, மூளை செயல்பாடு போன்றவை மேம்படும். இது மூளையின் நரம்பு செல்களை பாதுகாக்கும் ‘நியூரோப்ரொடக்டிவ்’ தன்மை கொண்டது.

3.டார்ட் செர்ரி ஜூஸ் – குடல் அழற்சியை குறைக்கும் இயற்கை மருந்து

2019 ஆய்வு காட்டுவதாவது, “அழற்சி, LDL கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் ஆகியவற்றை, டார்ட் செர்ரி ஜூஸ் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது. குடலின் சிவத்தல் மற்றும் அழற்சியை குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.”

இந்த பதிவும் உதவலாம்: பிளாக் காபி முதல் பெர்ரி வரை.. குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்காக தினமும் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் இங்கே..

4. கிரான்பெர்ரி ஜூஸ் – குடல் & இதயத்திற்கான இரட்டை நன்மை

2016 ஆய்வில், கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தவர்கள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இரத்தக்குழாய் செயல்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். குடலில் உள்ள தீங்கான பாக்டீரியாவை கட்டுப்படுத்தும் திறனும் இதில் அதிகம்.

5. கான்கார்ட் திராட்சை ஜூஸ் – இரத்த ஓட்டம் & ஆக்ஸிஜன் சீராகச் செல்ல உதவும்

2015 ஆய்வு காட்டியதாவது, “நாளுக்கு தினம் சிறிய அளவு கான்கார்ட் திராட்சை ஜூஸ் குடித்தாலே இரத்த ஓட்டம், இதய செயல்பாடு, ஆக்ஸிஜன் வழங்கல் திறன் மேம்படும். இதில் உள்ள பிளேவோனாய்ட்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கும்.”

View this post on Instagram

A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc)

இந்த ஜூஸ்களை எப்படிக் குடிப்பது? – டாக்டர் சல்ஹாப் அறிவுரை

“முழு பழங்களையே சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால், சில நேரங்களில் வசதிக்காக ஜூஸ்களையும் குடிப்பேன்” என்று அவர் கூறுகிறார்.

பரிந்துரைக்கும் அளவு:

  • 30–60 ml ஜூஸ்
  • 100 ml ஐஸ் வாட்டரில் கலந்து குடிக்கவும்

“ஜூஸ்களை அதிகமாக குடிப்பதை நான் ஆதரிப்பதில்லை. ஆனால் மிதமாக எடுத்தால் ஆரோக்கிய நன்மைகள் உறுதி” என மருத்துவர் தெரிவித்தார்.

இறுதியாக..

குடல் மற்றும் கல்லீரல் நலம் சீராக இருந்தால் உடல் முழுவதும் சக்தி, மெடபாலிசம், செரிமானம், ஹார்மோன் செயல்பாடு அனைத்தும் மேம்படும். மாதுளை முதல் கிரான்பெர்ரி வரை இந்த 5 ஜூஸ்களை மிதமாக குடிப்பது உடல் அழற்சியை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான மருத்துவ தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. நீங்கள் இதை பின்பற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

Read Next

பச்சை இலை காய்கறிகளை நீங்க சரியான வழியில் தான் சாப்பிடுகிறீர்களா? நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 05, 2025 07:48 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content