
கல்லீரல் நம் உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. ஆனால் அதில் அதிக கொழுப்பு தங்கி விட்டால் அது Fatty Liver Disease எனப்படும் நோயாக மாறுகிறது. மதுவால் ஏற்படாத வகை “Non-Alcoholic Fatty Liver Disease (NAFLD)” எனப்படுகிறது.
முக்கியமான குறிப்புகள்:-
American Liver Foundation தெரிவிப்பின் படி, “கல்லீரலில் சில அளவு கொழுப்பு இயல்பாக இருக்கலாம். ஆனால் அது கல்லீரல் எடையின் 5–10% ஐ மீறினால் அது ஆபத்தானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், கல்லீரல் பிரச்சனையை விரைவாக கண்டறிவது மிகவும் அவசியம்.
பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப், தனது Instagram வீடியோவில் கொழுப்பு கல்லீரலின் முக்கியமான 3 அறிகுறிகளை விளக்கி உள்ளார். அதில் கடைசியாக சொன்ன அறிகுறியே மிகவும் பொதுவானது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரலை தடுக்கும் உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..
கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்
மிகுந்த சோர்வு (Fatigue)
டாக்டர் Joseph Salhab கூறுவதில், “கொழுப்பு கல்லீரல் நோயாளிகளில் மிக அதிகமாக காணப்படும் அறிகுறி சோர்வு. அதற்குக் காரணம், கல்லீரல் செயல்பாட்டில் ஏற்படும் மாபெரும் மாற்றங்கள் மற்றும் உறக்கக் குறைபாடு ஆகியவை” என அவர் விளக்குகிறார். கல்லீரல் சரியாக செயல்படாததால் உடலில் ஆற்றல் குறைவு ஏற்பட்டு நிலையான சோர்வு ஏற்படும்.
மேல் வயிற்றுப் பகுதி வலி
அடுத்ததாக, டாக்டர் கூறியுள்ள முக்கிய அறிகுறி வலது மேல் வயிற்று பகுதியில் ஏற்படும் வலி. இந்த வலி சில நேரங்களில் உணவு எடுத்துக்கொண்ட பிறகும், சில சமயங்களில் யாதொரு காரணமுமில்லாமலும் ஏற்படலாம். “இது கல்லீரலில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கம் என்பதற்கான எச்சரிக்கை சிக்னல்” என அவர் கூறுகிறார்.
எந்த அறிகுறியும் இல்லாத நிலை
மருத்துவரின் கூற்றுப்படி, “கொழுப்பு கல்லீரல் நோயின் மிக பொதுவான அறிகுறி — எந்த அறிகுறியும் இல்லாமை!” அதாவது, பலருக்கு கல்லீரலில் கொழுப்பு அதிகமாக இருந்தாலும், அவர்கள் முழுமையாக நலமாய் இருப்பதாகவே உணர்வார்கள்.
“இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் 50% பேர் சாதாரண இரத்தப் பரிசோதனையில் கூட எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கலாம்,” என டாக்டர் எச்சரிக்கிறார். கல்லீரலில் மெதுவாக அழற்சி, சேதம் ஏற்பட்டு பின்னர் மட்டுமே கல்லீரல் செயலிழப்பு தெரியும் நிலைக்கு தள்ளப்படும்.
கல்லீரலை பாதுகாக்க வேண்டியவை
* மதுபானம், அதிக எண்ணெய் உணவு, வெள்ளை அரிசி, சர்க்கரை ஆகியவற்றை குறைக்கவும்.
* தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும்.
* பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், தண்ணீர் அதிகமாக உட்கொள்ளவும்.
* வாரத்தில் ஒரு முறை கல்லீரல் டீட்டாக்ஸ் ஜூஸ் (எ.கா. beetroot + lemon) எடுத்துக்கொள்ளலாம்.
இறுதியாக..
Fatty Liver என்பது நவீன வாழ்க்கை முறை நோய்களில் மிக வேகமாக பரவிவரும் ஒன்று. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உணவு பழக்கமும் உடற்பயிற்சியும் சரி செய்தால், கல்லீரலை மீண்டும் ஆரோக்கியமாக்க முடியும். அதனால், சோர்வு, வயிற்று வலி போன்ற சிறிய அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
Disclaimer: இந்த கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. கல்லீரல் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 12, 2025 21:04 IST
Published By : Ishvarya Gurumurthy