ஹார்வர்டில் பயிற்சி பெற்ற குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி, தனது இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் இரவு உணவுக்கான 10 சிறந்த விருப்பங்களை பரிந்துரைத்துள்ளார். இவை அனைத்தும் குடல் ஆரோக்கியத்தையும் கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
ஹார்வர்ட் நிபுணர் பரிந்துரைக்கும் 10 உணவுகள் இங்கே..
1. கிரில் சால்மன் + குயினோவா + அஸ்பராகஸ்
* ஓமேகா-3 நிறைந்த சால்மன் மீன் குடல் அலர்ஜியை குறைக்கும்.
* குயினோவா நார்ச்சத்து தரும்.
* அஸ்பராகஸ் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
2. கிச்சடி + சுரைக்காய் வறுவல்
* பாசிப்பருப்பு மற்றும் அரிசியுடன் செய்யும் கிச்சடி எளிதில் ஜீரணமாகும்.
* சுரைக்காய் ஈரப்பதத்தையும் நார்ச்சத்தையும் தருவதால் கல்லீரலுக்கு நன்மை தரும்.
3. பேக் செய்யப்பட்ட காட் மீன் + ஹெர்ப் குயினோவா + சீமை சுரைக்காய்
* காட் மீன் லீன் புரதம் தரும்.
* சீமை சுரைக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும்.
* கல்லீரல் டிடாக்ஸுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் குயினோவா சிறந்ததாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: டீ, காபி பிரியரா நீங்க? இந்த 3 விஷயத்த மறந்துடாதீங்க!
4. சுண்டல் கறி + சாதம் + முட்டைகோஸ் சலாட்
* சுண்டல் குடல் பாக்டீரியாவை வளர்க்கும்.
* சாதம் சக்தி தரும்.
* முட்டைகோஸ் கல்லீரல் நச்சுகளை நீக்கும்.
5. பேக் செய்யப்பட்ட சிக்கன் + வறுத்த காய்கறிகள்
சிக்கனின் புரதமும், காய்கறிகளின் நார்ச்சத்தும், குடல் ஆரோக்கியம் மற்றும் கல்லீரல் பாதுகாப்பை மேம்படுத்தும்.
6. சாம்பார் + ராகி ரொட்டி + தேங்காய் சட்னி
* சாம்பார் ஜீரணத்திற்கு உதவும்.
* ராகி ரொட்டி முழு தானிய நன்மைகளை தரும்.
* தேங்காய் சட்னி நல்ல கொழுப்பு சத்துடன் சேர்ந்து கல்லீரலை வலுப்படுத்தும்.
7. டோஃபு வறுவல் + ப்ரொக்கொலி + காலிஃபிளவர் ரைஸ்
* டோஃபு தாவர புரதம் தரும்.
* ப்ரொக்கொலி கல்லீரல் சுத்தம் செய்ய உதவும்.
* காலிஃபிளவர் ரைஸ் குறைந்த கார்ப் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
8. பனீர் புர்ஜி + கலவை காய்கறிகள் + பக் வீட் ரொட்டி
* பனீர் உடல் திசுக்களை பழுது பார்க்க உதவும்.
* பக் வீட் ரொட்டி மற்றும் காய்கறிகள் நார்ச்சத்து நிறைந்தது.
9. கிரில் இறால் + ஸ்வீட் பட்டாணி மாஷ் + கேல் வறுவல்
* இறால் லீன் புரதம் தரும்.
* ஸ்வீட் பட்டாணி குடல் பாக்டீரியாவை வளர்க்கும்.
* கேல் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
10. கீரை + குயினோவா + வெள்ளரி சலாட்
இரும்பு நிறைந்த கீரை, நார்ச்சத்து நிறைந்த குயினோவா, நீர்ச்சத்து தரும் சலாட் – ஆரோக்கியமான குடல் மற்றும் கல்லீரலுக்கு சிறந்த கலவை.
View this post on Instagram