காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி அல்லது டீ குடித்தால்தான் நாள் துவங்கும் என்ற பழக்கமுள்ளவர்கள் பலர். சிலர் நாள்பட்ட பழக்கமாகவே அடிக்கடி காபி, டீ அருந்துவார்கள். ஆனால் இந்த பானங்கள் எவ்வளவு நேரம் உடலில் தாக்கம் செலுத்துகின்றன, எப்போது குடிக்கக் கூடாது, எந்த முறையில் எடுத்தால் உடலுக்கு குறைவான பாதிப்பு உண்டாகும் என்பதைக் குறித்து, ஆயுர்வேதம் மற்றும் குடல் சுகாதார பயிற்சியாளர் டிம்பிள் ஜங்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதை அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
டீ, காபி பிரியர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 3 முக்கிய உண்மைகள்.!
காபியை ஒரே அடியாக கைவிடலாமா?
டிம்பிள் கூறுவதாவது, “காபியை திடீரென முற்றிலும் நிறுத்திவிட்டால், நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் சோர்வு, கவலை, மன அழுத்தம், கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் தோன்றலாம். காரணம், கேஃபைன் கல்லீரல் வழியாக செயல்படுத்தப்பட்டு, பல மணி நேரம் உடலில் ஒட்டிக்கொண்டே இருக்கும்” என்றார்.
எத்தனை மணி நேரம் உடலில் இருக்கும்?
ஒரு கப் Coffee-யில் சுமார் 100 மில்லி கிராம் caffeine இருந்தால், அதன் தாக்கம் 5 அல்லது 7 மணி நேரம் நீடிக்கும். உதாரணமாக, மதியம் 3 மணிக்கு காபி குடித்தால், இரவு 9 மணியளவில் கூட அதில் குறைந்தது 50 மில்லி கிராம் கேஃபைன் உடலில் இருக்கும். இதன் விளைவாக இரவு தூக்கம் பாதிக்கப்படலாம் என்கிறார் டிம்பிள்.
வெறும் வயிற்றில் டீ, காபி வேண்டாம்
வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இது குடலை வறட்சியடையச் செய்யும். நீண்டகாலமாக தொடர்ந்து குடித்தால் வாதம்–பித்தம் சமநிலையின்மை ஏற்படும். மேலும் கேஃபைனில் உள்ள டையுரெடிக் பண்பு உடலில் நீரிழப்பை உருவாக்கி அசிடிட்டியை அதிகரிக்கும் என்று டிம்பிள் குறிப்பிட்டார்.
View this post on Instagram
காபி, டீ குடிக்கும் சரியான வழி
* சாதாரண பாலை விட தாவர அடிப்படையிலான பாலை (பாதாம் பால், ஓட்ஸ் பால், தேங்காய் பால்) பயன்படுத்துவது நல்லது.
* பால் சேர்த்து டீயை நீண்ட நேரம் கொதிக்கவிடக்கூடாது. இது அமிலத் தன்மையை அதிகரிக்கும்.
* டீயில் லவங்கப்பட்டை, இஞ்சி, ஏலக்காய், மிளகு, ஸ்டார் அனிஸ், அஸ்வகந்தா போன்ற இயற்கைச் சேர்மங்களைச் சேர்ப்பது நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தரும். மேலும் கஃபைனின் தாக்கம் குறுகிய நேரத்தில் குறையும்.