Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

காபி குடிக்கும்போது நீங்கள் செய்யும் இந்த தவறுகள் வயிற்றையும் கல்லீரலையும் சேதப்படுத்தும்..

வெறும் வயிற்றில் காப்பி குடிப்பது, அதிக சர்க்கரை சேர்ப்பது, இரவில் காப்பி குடிப்பது போன்ற 7 பழக்கங்கள் உங்கள் குடல் மற்றும் கல்லீரலை மெல்ல அழிக்கக்கூடும். இது குறித்து காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி பகிர்ந்துள்ளார்.

பலருக்கு காபி இல்லாமல் நாள் தொடங்குவதே சாத்தியமில்லை. ஆனால், காபி குடிக்கும் முறையே உங்கள் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார் காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி. சமீபத்தில் தனது சமூக வலைதளப் பதிவில், காபி குடிக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

காபி குடிக்கும்போது செய்யும் தவறுகள்

வெறும் வயிற்றில் காபி குடிப்பது

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி குடிப்பது, வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து ரீப்ளக்ஸ், வாந்தி உணர்வு, நீண்டகாலத்தில் காஸ்ட்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சர்க்கரை, கிரீமர், சிரப்

ஒரு ஃப்ளேவர்ட் லாட்டே காப்பி 30–50 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கக்கூடும். இதனால் உடலில் அதிக கலோரி சேமிப்பு, கொழுப்பு கல்லீரல் (fatty liver), நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது.

அதிகப்படியான காபி

ஒரு நாளில் 400 mg கஃபீனை (சுமார் 4 கப் காப்பி) தாண்டி குடிப்பது, கார்டிசால் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, குடல் எரிச்சல், இதய துடிப்பு வேகம், பதட்டம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: காலையிலே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 3 உணவுகள் – மருத்துவர் எச்சரிக்கை.!

இரவு நேர காபி

கஃபீனின் தாக்கம் சுமார் 5-6 மணி நேரம் வரை இருக்கும். அதனால் இரவு வேளையில் காப்பி குடிப்பது, ஆழ்ந்த உறக்கத்தை தாமதப்படுத்தி, கல்லீரல் பழுது பார்த்தலை தடுக்கிறது.

சோர்வை மறைக்க காபி

சிலர் தூக்கமின்மை காரணமாக சோர்வை மறைக்க காபி குடிப்பார்கள். ஆனால், இது நீண்ட காலத்தில் மன அழுத்தம், மூளை சோர்வு, குடல் எரிச்சல் போன்றவற்றை அதிகரிக்கிறது.

செயற்கை இனிப்புப் பொருட்கள்

‘ஜீரோ கலோரி’ என விளம்பரப்படுத்தப்படும் சுக்ரலோஸ், அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்புகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து செரிமான சீர்குலைவை ஏற்படுத்தும்.

லைட் ரோஸ்ட் vs டார்க் ரோஸ்ட்

பொதுவாக லைட் ரோஸ்ட் காபி தான் ஆரோக்கியம் என நம்பப்படுகிறது. ஆனால் மருத்துவர் சௌரப் சேதி கூறுவதாவது, டார்க் ரோஸ்ட் காப்பிதான் குறைவான அமிலத்தன்மையைக் கொண்டிருப்பதால் GERD, ரீப்ளக்ஸ் பிரச்சனையுடன் இருக்கும் நோயாளிகளுக்கு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக..

காபி குடிப்பது தவறல்ல. ஆனால் அளவு, நேரம், சேர்க்கப்படும் பொருட்கள் ஆகியவை சரியாக இல்லாவிட்டால், அது குடலுக்கும் கல்லீரலுக்கும் தீவிர சேதத்தை உண்டாக்கும். காப்பியை ஒரு ஆரோக்கியமான வழியில் பருகுவதே நன்மை.

Disclaimer: இந்தக் கட்டுரை தகவல் பகிர்விற்காக மட்டுமே. உடல்நிலை பிரச்சனைகள் அல்லது செரிமானக் கோளாறுகள் இருந்தால், காப்பி பழக்கங்களில் மாற்றம் செய்ய முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

காலையிலே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 3 உணவுகள் – மருத்துவர் எச்சரிக்கை.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 28, 2025 14:08 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content