
காலை நேரத்தை உற்சாகமாக தொடங்க பலரும் காபியை நம்புகிறார்கள். ஆனால் அந்த ஒரே கப் காபி நம்முடைய குடல் (Gut) மற்றும் கல்லீரல் (Liver) நலனுக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கிறார் காஸ்ட்ரோஎன்டரோலஜி நிபுணர் டாக்டர் சௌரப் சேதி.
முக்கியமான குறிப்புகள்:-
அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவில், “7 coffee habits that might be wrecking your gut and liver” என்ற தலைப்பில், பலர் தினமும் கவனிக்காமல் செய்யும் காபி பழக்கங்கள் நமது உடலின் உள் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்கினார்.
கவனிக்காமல் செய்யும் காபி பழக்கங்கள்
1. வெறும் வயிற்றில் காபி குடித்தல்
காலை எழுந்தவுடன் பலர் முதலில் காபி குடிப்பார்கள். ஆனால் இது அமிலத்தன்மையை (stomach acid) அதிகரித்து, அஜீரணம், வாந்தி உணர்வு, மார்பு எரிச்சல், மற்றும் கேஸ்ட்ரைட்டிஸ் (Gastritis) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். “வெறும் வயிற்றில் காபி குடிப்பது, வயிற்றின் அமில அளவை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது,” என டாக்டர் சேதி கூறுகிறார்.
2. சர்க்கரை, கிரீமர் மற்றும் சிரப்புகள் சேர்த்தல்
பலரும் காபியில் சுவைக்கு சர்க்கரை, சிரப், கிரீமர் சேர்ப்பார்கள். ஆனால் ஒரு ஃப்ளேவர்டு லாட்டே (Flavoured Latte)-யில் மட்டும் 30–50 கிராம் சர்க்கரை இருக்கலாம். இது கல்லீரல் கொழுப்பு (Fatty Liver) மற்றும் சர்க்கரை நோய் (Diabetes) ஆபத்தை அதிகரிக்கும்.
3. தினமும் 4 கப் அல்லது அதற்கு மேல் குடித்தல்
400 மில்லிகிராம் காபீன் (சுமார் 4 கப் காபி) உட்கொள்வது உடலில் கார்டிசோல் ஹார்மோனை (Cortisol) அதிகரித்து, இதயத் துடிப்பு, நரம்பு அழுத்தம், மற்றும் மனஅழுத்தம் (Anxiety) போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். “அளவுக்கு மீறிய காபி குடிப்பது குடல் நுண்ணுயிர்களை பாதிக்கிறது,” என டாக்டர் சேதி கூறுகிறார்.
4. இரவு நேர காபி
காபீனின் அரை வாழ்க்கைக் காலம் (Half-life) சுமார் 5–6 மணி நேரம். அதனால் மாலை அல்லது இரவு நேரத்தில் காபி குடிப்பது ஆழ்ந்த உறக்கத்தை (Deep Sleep) தாமதப்படுத்துகிறது. இதனால் கல்லீரல் மீளுருவாக்கம் மற்றும் உடல் புதுப்பிப்பு குறைகிறது.
5. சோர்வை மறைக்க காபி குடித்தல்
பலர் தூக்கமின்மை அல்லது சோர்வை மறைக்க காபி குடிப்பார்கள். ஆனால் இது நீண்டகாலத்தில் மூளை நரம்புகளை (Brain fog) மற்றும் குடல் அழுத்தத்தை (Gut stress) அதிகரிக்கிறது. “தூக்கமின்மையை காபியால் மறைப்பது தற்காலிக தீர்வு மட்டுமே,” என அவர் கூறுகிறார்.
6. செயற்கை இனிப்புகள்
பலர் "Zero Calorie" காபி என கூறி அஸ்பர்டேம் (Aspartame), சுக்ரலோஸ் (Sucralose) போன்ற இனிப்புகளை சேர்ப்பார்கள். ஆனால் இவை குடல் நுண்ணுயிர்களின் சமநிலையை (Gut Microbiome Balance) குலைக்கும். இதனால் அஜீரணம், வாயு, மற்றும் உடல் எரிச்சல் ஏற்படலாம்.
7. லைட் ரோஸ்ட் காபி தான் மென்மையானது என்று தவறாக நினைப்பது
பலர் லைட் ரோஸ்ட் காபி குறைவான அமிலம் கொண்டது என்று நினைப்பார்கள். ஆனால் உண்மையில் டார்க் ரோஸ்ட் காபி (Dark Roast Coffee) தான் அமிலம் குறைவாக இருப்பதால் மார்பு எரிச்சல் (Reflux/GERD) உள்ளவர்களுக்கு சிறந்தது. “டார்க் ரோஸ்ட் காபி தான் குடலுக்கு மென்மையானது,” என டாக்டர் சேதி விளக்குகிறார்.
இறுதியாக..
காபி நம் வாழ்க்கையில் புத்துணர்ச்சியை தரும் பானம் என்றாலும், தவறான முறையில் குடித்தால் குடல் நலம், கல்லீரல் செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும். அளவு, நேரம் மற்றும் சேர்ப்புகள் — இந்த மூன்றையும் கவனித்தால் காபி நமக்கு ஆரோக்கிய நன்மையை தரும் ஒரு சிறந்த பானமாக மாறும்.
Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவர் டாக்டர் சௌரப் சேதி (Gastroenterologist) அவர்களின் சமூக ஊடக பதிவை அடிப்படையாகக் கொண்டது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுத் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்த மாற்றத்தையும் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது உடல்நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.
Read Next
மலேரியாவை தடுக்க சூப்பர் டிப்ஸ்.!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 12, 2025 11:17 IST
Published By : Ishvarya Gurumurthy