Fri Sep 11, 2026 | 11:24 PM IST

Doctor Verified

இரவில் செய்யும் இந்த 10 பழக்கங்கள்.. குடல் மற்றும் கல்லீரலை சீரழிக்கும்.! மருத்துவர் எச்சரிக்கை..

தூக்க பழக்கங்கள் உடல்நலத்தை நேரடியாக பாதிக்கும். குடல், கல்லீரல் ஆரோக்கியத்தை கெடுக்கும் 10 மோசமான இரவு நேர பழக்கங்களை மருத்துவர் சௌரப் சேதி எச்சரிக்கிறார். எவை அந்த பழக்கங்கள்? எவ்வாறு தவிர்க்கலாம்? முழு விவரம் இங்கே.

உடல்நலத்திற்கு தூக்கம் அத்தியாவசியம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், நாம் தூங்கும் முறைகள் மற்றும் இரவில் பின்பற்றும் பழக்கங்கள், குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குடல் மற்றும் கல்லீரலை சீரழிக்கும் 10 மோசமான தூக்க பழக்கங்களை பட்டியலிட்டு, அவற்றை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரவில் செய்யக்கூடிய தவறுகள்

1. இரவு நேரத்தில் கனமான உணவு சாப்பிடுதல்

மிகவும் கனமாக சாப்பிட்டு உடனே படுத்துக்கொண்டால், ஜீரணக் கோளாறுகள், அமிலத்தன்மை மற்றும் கல்லீரல் மீது அழுத்தம் அதிகரிக்கும். இதனால் நீண்ட காலத்தில் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

2. தினமும் நள்ளிரவு கடந்த பின்பே தூங்குவது

மனித உடலின் சர்க்கேடியன் ரிதம் (Circadian Rhythm) குலைந்து, ஹார்மோன்கள் பாதிக்கப்படும். குடல் செயல்பாடுகளும் ஒழுங்கற்றதாகும்.

3. படுக்கையில் மொபைல் போனை ஸ்க்ரோல் செய்வது

மொபைல் போனில் இருந்து வரும் நீல வெளிச்சம் (Blue light), தூக்க ஹார்மோன் மெலடோனின் உற்பத்தியை தடை செய்கிறது. இதனால் ஆழ்ந்த தூக்கம் குறைந்து, கல்லீரல் டிடாக்ஸிகேஷன் செயல்பாடு பாதிக்கப்படும்.

4. தூங்குவதற்காக மது அருந்துதல்

சிலர் தூக்கத்திற்காக மது குடிப்பது வழக்கம். ஆனால் இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, தூக்கத்தின் தரத்தையும் குறைக்கிறது.

5. காலை நேர சூரிய ஒளி கிடைக்காமல் இருப்பது

முறையான சூரிய ஒளி வெளிப்பாடு கிடைக்காவிட்டால், உடலின் ஜீரண செயல்பாடுகள், குடல் பாக்டீரியாக்கள் மற்றும் கல்லீரல் ஹார்மோன்கள் பாதிக்கப்படும்.

6. ஒழுங்கற்ற தூக்க நேரம்

தினமும் வேறு வேறு நேரத்தில் படுக்கும் பழக்கம், உடல் பயாலஜிக்கல் கிளாக்கை பாதிக்கிறது. இதன் விளைவாக குடல் இயக்கம் ஒழுங்கற்றது.

7. 6 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம்

தூக்கம் குறைந்தால், ஜீரண எஞ்சைம்கள் குறைவாக உற்பத்தியாகும். இது நீண்ட காலத்தில் குடலுக்கு அழுத்தம் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சியா விதைகளை சாப்பிடும்போது இந்த 7 தவறுகளைச் செய்யாதீர்கள்.!

8. 10 மணி நேரத்திற்கு மேல் அதிக தூக்கம்

அதிகமாக தூங்குவது கூட உடலின் மெட்டபாலிசத்தை சீரழிக்கும். இதனால் கல்லீரல் செயல்பாடுகள் சோம்பலாகி விடும்.

9. மாலையில் அதிகமாக காபி குடித்தல்

தூக்கத்திற்கு அருகில் கஃபீன் உட்கொள்வது தூக்கத்தை தள்ளிப் போடுகிறது. குடல் செயல்பாடுகளும் தடுமாறும்.

10. படுக்கையை வேலைக்கும் டிவிக்கும் பயன்படுத்துவது

படுக்கை தூக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மூளை தூக்கத்தை அடையாளம் காண முடியாமல் தவிக்கும்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

நிபுணர் கருத்து

தூக்க பழக்கங்கள் குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நேரடியாக தொடர்புடையவை. சரியான தூக்க பழக்கங்களை பின்பற்றினால், ஜீரண பிரச்சனைகள், கல்லீரல் கோளாறுகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றைத் தவிர்க்கலாம் என்று டாக்டர் சௌரப் சேதி கூறுகிறார்.

இறுதியாக..

நம் உடலுக்கு தேவையான 7–8 மணி நேர தரமான தூக்கம், சரியான நேரத்தில் உறங்குவது, மொபைல் மற்றும் காபி பயன்பாட்டை குறைப்பது, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மட்டுமே குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சாவி.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நம்பகமான நிபுணரை அணுகுவது அவசியம்.

Read Next

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிறீர்களா.? அது சாதாரணமல்ல.! காலை காபி பழக்கத்தை கைவிடுங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 24, 2025 15:19 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content