Side effects of Tea: தேநீரையும் மனித வாழ்வின் உணவு முறையையும் பிரித்து பார்க்கவே முடியாது. பலரும் காலையில் எழுந்தவுடன் தங்களது பொழுதை தொடங்குவதே தேநீர் உடன்தான். அதோடு, உறவினர் வீட்டிற்கு சென்றால் தேநீர், அலுவலகம் இடைவெளி என்றால் தேநீர், நண்பர்களை சந்தித்தால் தேநீர், சிறிய இடைவேளை கிடைத்தால் தேநீர் என தேநீர் நமது வாழ்வியல் முறையில் பிரித்து பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
தேயிலை இலைகள் அல்லது தேயிலைத் தூளுடன் பால் மற்றும் சர்க்கரை அல்லது பிற இனிப்புகளை இணைக்கும் ஒரு பிரபலமான பானமாகும் தேநீர். பால் தேநீர் என்பது தேநீரில் இருந்து ஆக்ஸிஜனேற்றத்தையும் பாலில் இருந்து கால்சியத்தையும் வழங்கும் என்றாலும் அதன் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்ததே ஆகும்.
அதிகம் படித்தவை: Weight loss Diet Plan: நீங்க வெயிட் லாஸ் டயட்டில் இருப்பவரா? அப்போ இவற்றை கவனியுங்க!
குறிப்பிட்ட நேரங்களில் அல்லது அதிகப்படியான அளவுகளில் பால் டீ குடிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். காலையில் பால் டீ உட்கொள்வதால் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம்.
காலையில் பால் தேநீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
செரிமான பிரச்சனை ஏற்படும்
வெறும் வயிற்றில் பால் தேநீரை உட்கொள்வது செரிமான செயல்முறையை எரிச்சலடையச் செய்யும். மேலும் இது அமிலத்தன்மை அல்லது வீக்கத்திற்கு வழிவகுக்கும். தேநீரில் உள்ள காஃபின் மற்றும் பாலில் உள்ள லாக்டோஸ் அமில உற்பத்தியைத் தூண்டும், இது அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.
உடலுக்கான இரும்புச்சத்து பிரிச்சனை
தேநீரில் டானின்கள் உள்ளன, இது உணவு இரும்புச்சத்தை உடல் பெறும் செயல்முறையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு தயாராக இருக்கும் போது, காலையில் அதை முதலில் குடிப்பது, பிந்தைய உணவில் இருந்து இரும்பு உட்கொள்ளலில் தடுப்பை ஏற்படுத்தலாம்.
குமட்டல் ஏற்படலாம்
உணவு இல்லாமல் பால் டீ குடிப்பதால் சிலருக்கு குமட்டல் ஏற்படக்கூடும். தேநீரில் உள்ள டானின்கள் மற்றும் காஃபின்கள் வயிற்றின் உட்புறத்தை சீர்குலைக்கக் கூடும். குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது இந்த பாதிப்பு ஏற்படலாம்.
அமிலத்தன்மையை தூண்டும்
தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள் வயிற்றில் உள்ள அமில அளவை அதிகரிக்கலாம், இது காலையில் முதலில் உட்கொள்ளும் போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்க அதிக வாய்ப்புள்ளது.
கார்டிசோல் அளவை உயர்த்தலாம்
காலையில் பால் டீ குடிப்பது கார்டிசோல் அளவை அதிகரிக்கும். கார்டிசோல் என்பது மன அழுத்த ஹார்மோன் ஆகும். குறிப்பாக காஃபின் உள்ளடக்கம் காரணமாக இது ஏற்படத்தலாம். ஒரு நாளின் ஆரம்பத்தில் உயர்ந்த கார்டிசோல் பதட்டம், நடுக்கம் அல்லது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தலாம்.
ஊட்டச்சத்து உறிஞ்சலில் பிரச்சனை
பால் தேநீர் குடிப்பது என்பது உடல் மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பாதிக்கிறது. ஒரு நாளை டீ உடன் தொடங்குவது, அடுத்தடுத்த உணவுகளில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் தன்மையை பாதிக்கலாம்.
எடை அதிகரிப்பை ஊக்குவிக்கலாம்
தேநீரில் சர்க்கரை மற்றும் முழு கொழுப்புள்ள பால் சேர்ப்பது கலோரி உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது, இது காலப்போக்கில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். வளர்சிதை மாற்றம் மெதுவாக இருக்கும் போது காலையில் முதலில் தேநீர் குடிப்பது ஆபத்தை அதிகரிக்கிறது.
நச்சுத்தன்மையை சீர்குலைக்கலாம்
அதிகாலையில் உங்கள் உடல் இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்குகிறது. பால் தேநீரில் இருக்கும் சர்க்கரை மற்றும் காஃபின் உங்கள் கல்லீரலில் சிக்கலை ஏற்படத்தலாம். இதன்மூலம் இயற்கையான நச்சுத்தன்மையில் சீர்குலைவு ஏற்படக் கூடும்.
நீரிழப்பை ஏற்படுத்தும்
தேநீர் லேசான டையூரிடிக் ஆகும், அதாவது இது திரவ இழப்பை ஊக்குவிக்கிறது. போதிய அளவு தண்ணீர் இல்லாமல் காலையில் பால் டீ குடிப்பது லேசான நீரிழப்பு மற்றும் நாள் முழுவதும் ஆற்றல் அளவைக் குறைக்க வழிவகுக்கும்.
image source: freepik