Thu Oct 29, 2026 | 01:42 PM IST

Coffee Vs Tea: காபி Vs டீ.. ஆரோக்கியத்திற்கு சிறந்தது.?

Coffee Vs Tea: காபி Vs டீ.. ஆரோக்கியத்திற்கு சிறந்தது.?Coffee Vs Tea: காபி Vs டீ.. ஆரோக்கியத்திற்கு சிறந்தது.?

காலையில் எழுந்ததும், சிலருக்கு படுக்கையில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். காபி, டீ குடித்து வருபவர்கள் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை தேடுகிறார்கள். மேலும், எவ்வளவு காபி அல்லது டீ குடிக்க வேண்டும், இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

காபி அல்லது டீயில் எது சிறந்தது? 

காபி அல்லது டீ சிறந்ததா என்ற கேள்விக்கு, மருத்துவர்கள் காபிக்கு வாக்களிக்கின்றனர். இருப்பினும், காபி மற்றும் டீயில் போதுமான அளவு மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காபி மற்றும் டீ ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது?

காபி மற்றும் டீ குடிப்பதால் உடலுக்கு பயோஆக்டிவ், பாலிஃபீனாலிக் கலவைகள், புரோட்டீன்கள் மற்றும் டைட்டோர்பைன்கள் கிடைக்கின்றன. காபி மற்றும் டீயில் உள்ள காஃபின் உடலில் உள்ள வலியை நீக்குகிறது. தலைவலி அல்லது களைப்பு ஏற்படும் போது ஒரு கப் காபி அல்லது டீ குடித்தால் பிரச்னை உடனடியாக தீரும். சோர்வையும் போக்குகிறது. 

காபி மற்றும் டீ தேவையான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் காபி குடித்தால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பொதுவாக, காலையிலும் மாலையிலும் ஒரு கப் காபி குடிப்பது நல்லது. 

இதையும் படிங்க: காபியை விட கிரீன் டீ நல்லதா? - உண்மை இதோ!

காபி டீ எப்படி குடிக்க வேண்டும்? 

ஒன்று அல்லது இரண்டு கப் காபி அல்லது டீ குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் அளவுக்கு அதிகமாக காபி, டீ குடிப்பது நல்லதல்ல. அதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது நல்லதல்ல. எழுந்தவுடன் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் வெளியாகும். காபி அல்லது டீ குடித்தால் அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், எழுந்தவுடன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கழித்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிகமாக காபி அல்லது டீ அருந்துதல்

சிலர் அதிகமாக டீ அல்லது காபி குடிப்பார்கள். 6-7 கப் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு சாப்பிடும் உணவு ஜீரணமாகாமல் வாயு பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. உடல் அதிக கலோரிகளைப் பெறுகிறது. இதன் விளைவாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது மற்றும் எடை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

பின் குறிப்பு 

இந்த இணையதளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும், மருத்துவ குறிப்புகளும் மற்றும் பரிந்துரைகளும் உங்கள் தகவலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். ஆனால் இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

→ Godhumai Rava Idli: ஒரு கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சுவையான இட்லி ரெடி..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.