Green Tea Vs Black Tea: இவற்றில் எது சிறந்தது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Green Tea Vs Black Tea: இவற்றில் எது சிறந்தது தெரியுமா?

கிரீன் டீயின் நன்மைகள் (Green Tea Benefits)

* கிரீன் டீ தயாரிக்க 'கேமல்லியா சினென்சிஸ்' இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளது. பாலிபினால் உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.

* இந்த டீயைக் குடிப்பதால் டைப்-2 சர்க்கரை நோய், அல்சைமர், கல்லீரல் நோய் போன்றவை குறையும். 

* கிரீன் டீ குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். 

* கிரீன் டீ குடிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சனைகள் குறையும்

* கிரீன் டீயில் காஃபின் உள்ளது. கிரீன் டீ மூலம் மூளையின் செயல்பாடு மேம்படும்.

* கிரீன் டீ கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் (எச்டிஎல்) அளவை அதிகரிக்கிறது.

* அதிக எடை கொண்டவர்கள் இதை குடிப்பதால் கொழுப்பு குறையும்.

இதையும் படிங்க: Benefits of Coffee: காபியிலும், காபித் தூளிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

பிளாக் டீயின் நன்மைகள் (Black Tea Benefits)

* பிளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

* பிளாக் டீ குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையும். மேலும் இரத்த நாளங்களின் செயல்பாடு மேம்படும். 

* பிளாக் டீ குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மன அழுத்தம் குறைக்கவும் பிளாக் டீ சிறந்து திகழ்கிறது. 

* தொடர்ந்து பிளாக் டீ குடிப்பதால் எலும்பு வலிமையாகும். எலும்பு முறிவு அபாயம் குறையும்.

மொத்தத்தில், கிரீன் டீ மற்றும் பிளாக் டீ இரண்டுமே பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. உங்கள் உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ப, உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கனும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்