அனைவரும் ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை விரும்புகிறார்கள். ஆனால், வாழ்க்கை முறை குறைபாடுகள், தூக்கமின்மை, மாசு, தவறான உணவுமுறை காரணமாக சருமம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துவருகின்றன. இதனை தடுக்கு பலர் கிரீன் டீ மற்றும் எலுமிச்சை நீரை நாடுகின்றனர். இவை இரண்டும் சருமத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டவை என்றாலும், எது சிறந்தது என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுகிறது. இதற்கு மருத்துவ உணவியல் நிபுணரும், ஊட்டச்சத்து நிபுணருமான ரக்ஷிதா மெஹ்ரா பதிலளித்துள்ளார்.
சருமத்திற்கு கிரீன் டீயின் நன்மைகள்
* கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை தடுப்பதன் மூலம், சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
* கிரீன் டீயில் உள்ள Anti-inflammatory தன்மை முகப்பரு, சிவத்தல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை தணிக்க உதவும்.
* கிரீன் டீயை அடிக்கடி குடிப்பதால் உடல் நீரேற்றம் மேம்பட்டு, சருமம் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாறுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் நீரா? எலுமிச்சை நீரா? சரும பொலிவுக்கு எது சிறந்தது.?
சருமத்திற்கு எலுமிச்சை நீரின் நன்மைகள்
* எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்கிறது.
* எலுமிச்சை நீர், செரிமான அமைப்பை வலுப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, தடிப்பு குறைபாடுகள் குறைகின்றன.
* இதில் உள்ள டிடாக்ஸ் பண்புகள், சருமத்தை சுத்தமாக்கி, இயற்கையான பளபளப்பை தருகிறது.
எது சிறந்தது?
* கிரீன் டீ – வயதான அறிகுறிகளை குறைக்கவும், முகப்பருவை தணிக்கவும் உதவும்.
* எலுமிச்சை நீர் – பளபளப்பான, கொலாஜன் நிறைந்த ஆரோக்கியமான சருமத்திற்குச் சிறந்தது.
எனவே, இரண்டு பானங்களுமே தனித்தன்மை வாய்ந்த நன்மைகள் கொண்டவை. உங்கள் உடல் தன்மைக்கு ஏற்றவாறு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.