How to use rice water for face glow: அன்றாட வாழ்வில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பல்வேறு வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நம் வீட்டிலேயே இயற்கையாகவே சருமத்தைப் பிரகாசமாக வைத்திருக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளது. இதில் கொரிய பெண்களின் அழகு இரகசியத்திற்குக் காரணமான அரிசி தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசியை ஊறவைக்கும்போதோ அல்லது வேகவைக்கும்போதோ கிடைக்கக்கூடிய மாவுச்சத்து நிறைந்த திரவமே அரிசி நீர் ஆகும். இது வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆனால், இந்த அரிசி நீரானது சரும பராமரிப்பிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்த அரிசி நீரை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த இந்த மூலப்பொருளைக் கொண்ட பொருட்களை வாங்கலாம். இது வீக்கத்தைக் குறைத்து சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. ஆனால், இதை முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதால் நன்மை பயக்குமா இல்லையா என்று பலரும் யோசிக்கின்றனர். இதில் சருமத்திற்கு அரிசி நீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Korean Rice Water: கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இது தான் காரணமா.?
சருமத்திற்கு அரிசி நீர் தரும் நன்மைகள்
ஹெல்த்சைட் தளத்தில் குறிப்பிட்டபடி, சருமத்திற்கு அரிசி நீர் கீழ்க்கண்ட ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
வீக்கத்தைக் குறைக்க
ஆய்வு ஒன்றில், அரிசி நீர் உட்பட அரிசியிலிருந்து பெறப்பட்ட பொருட்கள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நீரில் காணப்படக்கூடிய இயற்கையாகவே நிகழும் கலவையான அலன்டோயின், உணர்திறன் அல்லது எரிச்சலூட்டும் சருமத்தை, குறிப்பாக அரிக்கும் தோலழற்சி அல்லது வெயில் போன்ற சூழ்நிலைகளில் ஆற்றுவதாக நிபுணர் கூறுகின்றனர்.
சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கு
அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் மற்றும் பைடிக் அமிலம் போன்ற நொதிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற தோல் நிறத்திற்கு காரணமான மெலனின் நிறமியின் உற்பத்தியைத் தடுக்கிறது. இது படிப்படியாக ஹைப்பர் பிக்மென்டேஷன் பகுதிகளை ஒளிரச் செய்து சருமத்திற்கு இயற்கையான, சீரான பளபளப்பை மீட்டெடுக்க உதவுகிறது.
முகப்பருவை கட்டுப்படுத்த
எண்ணெய் பசை மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம் கொண்டவர்களுக்கு அரிசி நீர் சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்தும் திறன் கொண்டதாகும். மேலும் இது அடைபட்ட துளைகளைத் தடுக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் இவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியா குட்டிபாக்டீரியம் ஆக்னேஸை அழிக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அரிசி நீரை சந்தனத்துடன் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகளை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Rice Water: உடைந்தது Korean Beauty Secret.. அரிசி நீரை இப்படி பயன்படுத்தி பாருங்க!
முதுமை எதிர்ப்பு நன்மைகள்
அரிசி நீரில் உள்ள மூலக்கூறுகள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் உருவாவதைக் குறைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், அரிசி நீர் சருமத்தை வயதானதாக்குவதில் பங்கு வகிக்கும் எலாஸ்டேஸ் என்ற நொதியின் செயல்பாட்டைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஸ்டார்ச் ஒரு இயற்கையான அஸ்ட்ரிஜென்டாக செயல்படுகிறது. இவை துளைகளை இறுக்கி, தொய்வடைந்த சருமத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
வீட்டில் அரிசி தண்ணீர் தயாரிக்கும் முறை
ஊறவைத்தல் - 1/2 கப் பச்சரிசியை எடுத்து 3 கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அரிசியை பிழிந்து சல்லடை மூலம் வடிகட்டி, குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
கொதிக்க வைத்தல் - அரிசியை வழக்கமாக சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீரில் இரு மடங்கு சேர்த்து வேகவைக்க வேண்டும். பின்னர் சமைத்து முடித்ததும், தண்ணீரை ஒரு சுத்தமான கிண்ணத்தில் வடிகட்டலாம்.
புளிக்கவைக்கப்பட்ட அரிசி நீர் - தண்ணீர் மற்றும் அரிசியைப் பயன்படுத்தி ஊறவைக்கும் முறையைப் பயன்படுத்த வேண்டும். இந்த தண்ணீரை அறை வெப்பநிலையில் 24 முதல் 48 மணி நேரம் வரை விட்டு, அதை புளிக்க வைக்கலாம். பின்னர் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.
இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான முறைகளில் வீட்டிலேயே அரிசி தண்ணீரைத் தயார் செய்யலாம். இதில் வேகவைத்த அல்லது புளிக்க வைத்த விருப்பங்களைத் தேர்வு செய்தால், அதை வெற்று நீரில் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். அதன் பின்னர், சரும வகைகளுக்கு ஏற்ற வகையில் மற்ற பிற சரும பராமரிப்புப் பொருள்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Korean Face Tips: 1 வாரத்தில் கொரியர்கள் போல் முகம் பளபளக்க இந்த நிரூபிக்கப்பட்ட வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
Image Source: Freepik