Korean Beauty Secrets: அரிசி நீரில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் வரும். அரிசி நீரில் சருமத்தை பாதுகாக்க உதவும் ஃபெருலிக் அமிலம் உள்ளது. இது சூரிய பாதிப்பு மற்றும் ஆன்டி ஏஜிங் (முதுமை எதிர்ப்பு) பண்புகளை கொண்டிருக்கிறது.
கோடையில் வானிலை வறண்டதாக இருக்கும். வெயிலின் தாக்கத்தால் சருமம் பெருமளவு பாதிக்கப்படும் என்பது அறிந்ததே. இதில் இருந்து விடுபட பலர் பல வழிகளை பின்பற்றி அதில் பலன் கிடைக்காமல் தவிக்கிறார்கள். சந்தையில் இருந்து கிடைக்கும் பல விலையுயர்ந்த க்ரீம்களை வாங்கி பலன் கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளம்.
கோடை வெயிலில் சரும பராமரிப்பு வழிகள்
பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஆயுர்வேத தீர்வும், வீட்டு வைத்தியமும் சிறந்த தேர்வாக இருக்கும். தோல் பராமரிப்பு என்று வருகையில், இந்த விஷயத்தில் கொரிய அழகு ரகசியங்களை யாரும் முறியடிக்க முடியாது.
தற்போது அதில் பயன்படுத்தப்படும் ஒரு விஷயத்தை தான் பார்க்கப் போகிறோம். பல நூற்றாண்டுகளாக கொரிய தோல் பராமரிப்பு விஷயத்தில் அரிசி நீர் இடம்பெற்று வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பும்படியாக இல்லாவிட்டாலும் இதுதான் நிஜம்.
சரும பராமரிப்பு Rice Water என்றால் என்ன?
அரிசியை ஊறவைத்த அல்லது வேகவைத்த பிறகு கிடைக்கும் நீர் மாவுச்சத்தின் ஆகச்சிறந்த திரவமாகும். இதில் இயற்கையாக அழகை வழங்கக் கூடிய வைட்டமின்கள், தாதுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்டவை நிரம்பியுள்ளது.
அரிசி நீர் சருமத்தை பிரகாசமாக்கி அதற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது. இதுபோல தோல் பராமரிப்புக்கு பல நன்மைகளை வழங்கும் பல முக்கிய பண்புகள் கொண்டு தோல் பராமரிப்பின் மூலப்பொருளாக திகழ்கிறது.
அரிசி நீரில் நிறைந்துள்ள சத்துக்கள்
தோல் பராமரிப்புக்கான இயற்கையான அமுதமாக இருக்கும் இந்த பொருள் எரிச்சலூட்டும் சருமத்திற்கு ஆற்றும் திறன்களையும், சருமத்தை சுத்தம் செய்யும் தன்மைகளையும் கொண்டிருக்கிறது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் இருக்கிறது. இது சூரியனால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும், ஆன்டி ஏஜிங் (முன்கூட்டிய வயது எதிர்ப்பு தடுப்பு பண்புகள்) உள்ளிட்டவையை கொண்டிருக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
Korean Beauty Tips: தோல் பராமரிப்புக்கான இயற்கை வழிகள்
மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால் கொரிய தோல் பராமரிப்பு முறையில் முதலிடத்தில் அரிசி நீர் இருக்கிறது. அரிசி நீர் இந்த இடத்தில் இருப்பது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, காரணம் இதில் அவ்வளவு நன்மைகள் நிரம்பியுள்ளது. பளபளப்பான ஒளிரும் நிறத்தை பெற இது சிறந்த தேர்வாகும்.
Rice Water: அரசி நீரை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது?
அரிசி நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நாள் முழுவதும் உங்கள் முகத்தில் தெளிப்பதன் மூலம் முகம் பளபளப்பாகும். இதை உங்கள் தோலில் தடவுவதற்கு முன், தேவைப்பட்டால் அரிசி நீரில் தோலுக்கு ஆரோக்கியம் வழங்கும் எண்ணெயின் சில துளிகளை சேர்க்கலாம். இதை இப்படி பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து சருமம் புத்துயிர்ப்பு பெறும்.
சருமத்தை மென்மையாக்கி பிரகாசமளிக்கும்
அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தை மென்மையாக்கவும், பளபளப்பாக்கவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கவும் உதவும்.
முகப்பரு குறையும்
அரிசி நீரின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிவத்தல் மற்றும் எரிச்சல் உணர்வை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். உணர்திறன் அல்லது முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி.
முகத் துளைகளை இறுக்கமாக்கும்
அரிசி நீரின் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முகத்தில் உள்ள துளைகளை இறுக்கி சரும அமைப்பை மேம்படுத்தி, மென்மையான மற்றும் சீரான நிறத்தை பெற உதவுகிறது.
சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவும்
அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் உள்ளது, இது சூரியனால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, இது பல வகை தோல் பராமரிப்புக்கு தீர்வாக இருக்கிறது.
தோலுக்கு தேவையான நீரேற்றம் மற்றும் ஊட்டமளிப்பு
அரிசி நீர் ஒரு இயற்கை ஈரப்பதமாகும், அதாவது இது சருமத்தில் ஈரப்பதத்தை இழுக்க உதவுகிறது. இதன்மூலம் சருமம் நீரேற்றமாகவும் ஊட்டமாகவும் இருக்க முடியும். இது நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
என்றென்றும் இளமையோடு காட்சியளிக்கும், சருமம் பளபளப்பாகவும் ஒளிரும் விதமாகவும் காட்சியளிக்க அரிசி நீர் மிக பயனுள்ளதாக இருக்கும். பல தோல் பராமரிப்புக்கும் நாம் அன்றாடம் கீழே ஊற்றும் அரிசி நீர் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இனி அரிசி நீரை கீழே ஊற்றாமல் இப்படி பயன்படுத்தி பலன் பெறுங்கள்.