Side Effects Of Vampire Facial: இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் அழகு பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். இதில் அவர்கள் அழகாகவும், இளமையாகவும் இருக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாம்பயர் ஃபேஷியலை அன்றாட வாழ்க்கையில் இணைத்து கொள்கின்றனர். இந்த வாம்பயர் ஃபேஷியல் செய்வது அழகை அதிகரிக்கவும், இளமையாகவும் வைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த ஃபேஷியல் செய்வது முதுமையிலும் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. எனினும் இயற்கை முறைகளைத் தவிர்த்து பயன்படுத்தப்படும் சில முறைகள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் வாம்பயர் ஃபேஷியல், அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Ubtan: சருமத்தைப் பொலிவாக்கும் உப்டான். வீட்டிலேயே ஈஸியா இப்படி தயார் செய்யலாம்
வாம்பயர் ஃபேஷியல் என்றால் என்ன?
இது ஒரு சிறப்பு வாய்ந்த அழகு சிகிச்சையாகும். மற்ற ஃபேஷியலைப் போல அல்லாமல், இது நமது சொந்த இரத்தத்தின் மூலம் செய்யப்படும் சிகிச்சையாகும். இந்த சிகிச்சையில், நம் உடலில் இருந்து பிளேட்லெட்டுகளைப் பயன்படுத்தி பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர், இது முகம், கழுத்து, வயிறு அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சிகிச்சைக்கு பொதுவாக நம் கைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. பின் ஒரு செயல்முறையின் மூலம் பிளாஸ்மா பிரிக்கப்படுகிறது. இந்த வாம்பயர் ஃபேஷியல் ஆனது ஃபேஸ் பிஆர்பி அதாவது பிளேட்லெட்ஸ் ரிச் பிளாஸ்மா என்றும் அழைக்கப்படுகிறது. இது சருமத்தில் கொலாஜன் தொகுப்பின் செயல்முறையை அதிகரித்து செல்களின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது.
வாம்பயர் ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- இந்த ஃபேஷியல் செய்வது சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது
- முகத்தில் உள்ள சுருக்கங்கள், நிறமிகள் மற்றும் புள்ளிகளை நீக்குகிறது
- முகத்தை இறுக்கமாக்கி சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது
- வாம்பயர் ஃபேஷியல் புதிய சரும செல்களை அதிகரிக்கிறது
- சருமத்தின் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது
- சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது
- கருவளையம் பிரச்சனைக்கு உகந்தவற்றில் வாம்பயர் ஃபேஷியல் நன்மை தருகிறது
இந்த பதிவும் உதவலாம்: Orange Peel Powder: இனி ஆரஞ்சு தோல தூக்கி போடாதீங்க. சருமத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க
வாம்பயர் ஃபேஷியல் தீய விளைவுகள்
மேலே கூறப்பட்ட நன்மைகளைத் தந்தாலும், வாம்பயர் ஃபேஷியல் செய்வது சருமத்திற்கு சில பிரச்சனைகளைத் தரலாம். இதில் வாம்பயர் ஃபேஷியல் செய்வதில் பக்கவிளைவுகளைக் காணலாம்.
- வாம்பயர் ஃபேஷியல் செய்து கொள்வது சருமத்திற்கு வீக்கம், அரிப்பு, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம்.
- சருமத்தில் சிவப்பு காயக் குறிகளை ஏற்படுத்தலாம்.
- வாம்பயர் ஃபேஷியல் காரணமாக எச்ஐவி போன்ற கொடிய நோயும் உண்டாகலாம்.

வேம்பயர் ஃபேஷியல் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
- சரும பராமரிப்பில் இது அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறையாக இருப்பதால் சுருக்கங்களை அகற்றலாம்.
- இது அனைத்து வகையான வயது மற்றும் சரும வகைகளுக்கு பொருந்துமாறு அமைகிறது.
- இது பயனுள்ளதாகவும், சொந்த இரத்தத்தைக் கொண்டு பயன்படுத்தப்படுவதாகவும் அமைகிறது.
- இதன் பக்கவிளைவுகளையும் கருத்தில் கொண்டு இந்த ஃபேஷியல் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
இவை அனைத்தும் வாம்பயர் ஃபேஷியல் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகும். இது தனிநபரின் சருமம் மற்றும் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு இந்த ஃபேஷியல் செய்ய பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் முதலில் மருத்துவரை அணுகி பிறகு வாம்பயர் ஃபேஷியலைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik