Effects Of Holding In Urine For Too Long: இன்று பலரும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தங்களது உடல் ஆரோக்கியத்தை கவனிக்க முற்படுவதில்லை. இதில் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்கி வைப்பதாகும். சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பலரும் பல்வேறு காரணங்களால் சிறுநீரை நீண்ட நேரம் வைத்திருக்க முனைகின்றனர்.
பலர் பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது பொது இடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்கின்றனர். இதனால், அவர்கள் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு வீட்டிற்கு வந்தவுடன் உடனே குளியலறைக்குச் செல்லும் ஆசை ஏற்படுகிறது. சிறுநீரை அடக்குவது தவறில்லை என்றாலும், நீண்ட நேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல உபாதைகளை சந்திக்க நேரிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Smelly Urine Causes: சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? லேசுல விடாதீங்க இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்
சிறுநீரை நீண்ட நேரம் வைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
இடுப்பு தசை பலவீனம்
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று இடுப்பு தசைகள் பலவீனமடைதல் ஆகும். இதன் காரணமாக, அடங்காமை பிரச்சனை அதாவது சிறுநீர் கட்டுப்பாட்டை இழத்தல் பிரச்சனையைச் சந்திக்க நேரிடலாம்.
வலி ஏற்படுவது
வெகு நேரமாக சிறுநீரை அடக்கி வைத்திருக்கும் போது, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் வலியை சந்திக்க நேரிடலாம். பொதுவாக சிறுநீர் கழிக்கும் போது வலியை உணர்வீர்கள். ஏனெனில், சிறுநீரைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அது தசைகளில் வலியை உண்டாக்கும். இதில் அவை நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இது அவர்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கக் கூடியதாக அமையும்.
சிறுநீர்ப்பை நீட்சி
யூரினைத் தொடர்ந்து வைத்திருப்பதால் உடலில் சிறுநீர்ப்பை நீட்சியடையலாம். இதன் காரணமாக சிறுநீர்ப்பை சுருங்குவது மற்றும் அதன் முந்தைய அளவிற்கு வருவது மிகவும் கடினமாக இருக்கும். கூடுதலாக, சிறுநீரை வெளியிடுவதில் சிரமம் உண்டாகலாம். இதில் நீண்ட நேரம் சிறுநீரை வைத்திருப்பதால் சிறுநீர்ப்பை வெடிக்கும் வாய்ப்புகள் அரிதானவையாக ஏற்படலாம்.
சிறுநீரகக் கற்கள்
நீண்ட நேரம் சிறுநீரை வைத்திருக்கும் போது சிறுநீரக் கற்கள் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். இது சிறுநீரகத்தில் வலியை உண்டாக்கும். மேலும், இந்த கற்களை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். அதிலும் குறிப்பாக, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Blood in Urine: சிறுநீருடன் இரத்தம் கலந்து வருகிறதா? சிவப்பு நிறத்தில் சிறுநீர் வர காரணங்கள்!
சிறுநீரை வைத்திருக்கும் சூழலில் செய்ய வேண்டியவை
சில இக்கட்டான சூழ்நிலைகளில் சிறுநீரை அடக்கி வைத்திருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். இந்நிலையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
- உட்கார்ந்திருக்கும் சூழலாக இருந்தால், உட்கார்ந்தே இருக்க வேண்டும்.
- மனதை திசைதிருப்ப முயற்சிக்க வேண்டும். அதாவது மூளையை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அல்லது இசையைக் கேட்கும் செயலில் ஈடுபடலாம். இது மனதை திசை திருப்பி சிறுநீர் வைத்திருப்பதன் நினைவை மறக்க செய்யும்.
- சிலருக்கு குளிர்ச்சியாக சூழ்நிலையில் அதிகளவு சிறுநீர் வரத் தூண்டும். இந்த காலகட்டத்தில் ஒருவர் தங்களை சூடாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

குறிப்பு
சிறுநீரை வைத்திருப்பது ஆபத்தானதாகக் கருதப்படாது. ஆனால், இதைத் தொடர்ந்து நீண்ட நேரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் சிறுநீரக கோளாறுகள், விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் போன்றவை இருப்பின் சிறுநீர் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீர் அடக்கி வைக்கும் போது சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், சிறுநீர் பிடிப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எனினும், அதிகப்படியான சிறுநீர்ப்பை இருப்பின், சிறுநீரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Frequent Urination: அடிக்கடி சிறுநீர் வருகிறதா? இதன் அறிகுறியாக இருக்கலாம்!
Image Source: Freepik