Smelly Urine Causes: சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? லேசுல விடாதீங்க இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்

  • SHARE
  • FOLLOW
Smelly Urine Causes: சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? லேசுல விடாதீங்க இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்


Urine Smell Can be a Sign of These Diseases: உடலில் எந்த நோய் ஏற்பட்டாலும், அதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக தோன்றும். அறிகுறிகள் இல்லாத நோய் எதுவும் இல்லை. சில சமயங்களில் நாம் சோம்பல் மற்றும் பலவீனமாக உணர்வோம், இன்னும் சில நேரங்களில் உடல் வலி மற்றும் திடீரென வியர்ப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இவை அனைத்தும் சில நோய்களின் அறிகுறிகளே!

நம்மில் பலர் கவனித்திருப்போம், சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரில் இருந்து துர்நாற்றம் வீசும். இதற்கு நமது வாழ்க்கை முறை அல்லது உணவுகள் கூட காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் இது நீரிழப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Health: கிட்னி பாதுகாப்புக்கான சில ஆரோக்கிய வழிமுறைகள்!

ஏனென்றால், சிறுநீரில் இருந்து வரும் துர்நாற்றம் பல ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரில் துர்நாற்றம் வீசுவதற்கான அறிகுறிகள் என்னென்ன நோய்கள் என்று பார்க்கலாம்.

சிறுநீர் துர்நாற்றம் எந்தெந்த நோயின் அறிகுறி?

சிறுநீர் பாதை நோய் தொற்று

பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (uti symptoms) ஏற்படும் அபாயம் அதிகம். சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர்க்குழாப் பாதித்து இருக்கும் போது, ​​சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வும் வலியும் ஏற்படும். பல சந்தர்ப்பங்களில், சிறுநீரில் இரத்தமும் வெளியேறத் தொடங்குகிறது.

இந்த தொற்று சிறுநீரகங்களுக்கு பரவும் போது சிறுநீர் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். UTI க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். UTI தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது சிறுநீரகங்களுக்கும் பரவக்கூடும். இதனால், நீங்கள் கடுமையான பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!

பாக்டீரியா வஜினோசிஸ்

பாக்டீரியா வஜினோசிஸ் (Bacterial vaginosis) என்பது பிறப்புறுப்பு தொற்று ஆகும். பாக்டீரியாவின் சமநிலையின்மையால் ஏற்படும் பொதுவான தொற்றுகளில் இதுவும் ஒன்று. இது தவிர, இது பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களாலும் ஏற்படலாம்.

இந்நிலையில், சிறுநீரில் துர்நாற்றம் வீச தொடங்கும். இது மட்டுமின்றி, BV தொற்று ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மேலும், பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சளி வெளிவரும்.

சர்க்கரை நோய்

நீரிழிவு நோயாளிகளின் சிறுநீர் துர்நாற்றம் வீசும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஒருவரின் சிறுநீர் துர்நாற்றம் வீசினால், அவர் நீரிழிவு நோயாளியாக இருக்கலாம். நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை உட்கொள்ளும்போது, ​​அவர்களின் சிறுநீரில் துர்நாற்றம் வீசும்.

குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது. இதனால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். நீங்கள் சோர்வு, கடுமையான தாகம் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகவும்.

இந்த பதிவும் உதவலாம் : Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

கல்லீரல் நோய்

தற்போது பெரும்பாலானோர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரில் இருந்து வரும் துர்நாற்றம் கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சோர்வு, வெளிர் தோல், எடை இழப்பு, கருமையான சிறுநீர் மற்றும் அடிவயிறு வீக்கம் போன்றவை கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்..

சிறுநீர்ப்பை ஃபிஸ்துலா

சிறுநீர்ப்பை ஃபிஸ்துலா (Bladder Fistula) இருந்தால் சிறுநீர் துர்நாற்றம் வீசும். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு சிறுநீர்ப்பையுடன் இணைக்கும்போது இந்த ஃபிஸ்துலா ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. எனவே, அதை உடனடியாக கவனிக்கவும். இது யோனி ஃபிஸ்துலா (Vesicovaginal fistula) என்றும் அழைக்கப்படுகிறது. பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் குழாய்க்கு இடையில் ஒரு இடைவெளி ஏற்படும் போது ஃபிஸ்துலா ஏற்படுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Bottle Gourd Side Effects: ஏன் சுரைக்காய் ஜூஸ் தினசரி குடிக்கக் கூடாது? நிபுணர்கள் கருத்து

Disclaimer