கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் என்றாலும். சரியான நோயறிதலுக்கு மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
சிறுநீரகங்கள் விலா எலும்புகளுக்குப் பின்னால் அமைந்துள்ள இரண்டு பீன் வடிவ உறுப்புகள் ஆகும். சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகங்களில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பிக்கும் போது ஏற்படுகிறது. சிறுநீரக புற்றுநோயானது அதன் ஆரம்ப கட்டங்களில் பொதுவாக எந்த அறிகுறிகளும் இருக்காது, எனவே இதை கண்டறிவது கடினமாக இருக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் கட்டி உருவாகும்போது, அறிகுறிகள் தோன்றக்கூடும். இதுகுறித்த டாக்டர் அதுல் இங்கலே (ஆலோசகர் சிறுநீரக மருத்துவர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், நெப்ராலஜி, ஃபோர்டிஸ் ஹிரானந்தனி மருத்துவமனை, வாஷி(மும்பை) கூற்றுப்படி, சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் பின்வருமாறு…
முக்கிய கட்டுரைகள்
சிறுநீரில் இரத்தம் (ஹெமாட்டூரியா)
சிறுநீரில் இரத்தம் தோன்றுவது சிறுநீரக புற்றுநோயின் ஆபத்தான அறிகுறியாகும். ஹெமாட்டூரியாவுடன் சிறுநீர் இளஞ்சிவப்பு , சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றும். சிறுநீரில் இரத்தம் மற்ற சிறுநீர் பாதை நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
சிறுநீரக பகுதியில் அல்லது கீழ் முதுகில் கட்டி
வயிறு அல்லது உடலின் பக்கத்தில் அசாதாரண கட்டி தோன்றுவதும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிறு வீக்கம் அல்லது தசை வளர்ச்சியும் சிறுநீரக புற்றுநோயின் சாத்தியமான அறிகுறியாகும்.
சில வாரங்களாக விவரிக்க முடியாத காய்ச்சல்
சில சந்தர்ப்பங்களில், சிறுநீரக புற்றுநோய் காய்ச்சல் ஏற்படலாம். இந்த அறிகுறி குறைவாகவே காணப்பட்டாலும், உடலில் புற்றுநோயின் தாக்கத்தை இது குறிக்கும். மற்ற அறிகுறிகளுடன் இதையும் கருத்தில் கொள்வது அவசியம்.
எதிர்பாராத எடை இழப்பு
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் திடீரென விவரிக்க முடியாத எடை இழப்பை சந்திக்க நேரிடும். இந்த அறிகுறி புற்றுநோயால் உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம். வெளிப்படையான காரணமின்றி குறிப்பிடத்தக்க எடை இழப்பை நீங்கள் கவனித்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
சோர்வாக அல்லது மோசமான உடல்நிலை
தொடர்ந்து மிகவும் சோர்வாக இருப்பது சிறுநீரக புற்றுநோயின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம். ஒரு நபர் சில சந்தர்ப்பங்களில் பசியின்மை மற்றும் மிகக் குறைந்த ஆற்றல் உள்ளிட்டவையை உணர முடியும்.
கணுக்கால் மற்றும் கால்களின் வீக்கம்
சிறுநீரக புற்றுநோய் கணுக்கால் மற்றும் கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். பலர் வீக்கத்தை அலட்சியம் செய்கிறார்கள் மற்றும் மருத்துவ கவனிப்பை நாடுவதில்லை. பல அடிப்படை காரணங்கள் இருக்கலாம், சரியான நோயறிதல் முக்கியமானது.
இது தவிர வேறு சில அறிகுறிகள், நீடித்த மந்தமான வலிகள் அல்லது பக்கவாட்டில், வயிறு அல்லது கீழ் முதுகில் வலி, இரவில் வியர்த்தல், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் அதிக கால்சியம்.
சிறுநீரக புற்றுநோய்க்கான குறிப்பிட்ட காரணம் தெரியவில்லை என்றாலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சோடா, இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் காஃபின் நுகர்வு போன்ற சில ஆபத்து காரணிகள் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம். பருமனானவர்கள், சுறுசுறுப்பான புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுநீரக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது சிகிச்சை வெற்றிக்கு முக்கியமானது. மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் சிறுநீரக புற்றுநோயைக் குறிக்கலாம் என்றாலும். சரியான நேரத்தில் மருத்துவர்கள் உதவியை நாட வேண்டும் என்பது மிக அவசியம்.
Image Source: Freepik