$
Breast Cancer Cases Will Increase From 2.3 Million In 2020: புற்றுநோய் முழுமையாக குணப்படுத்த முடியாத ஒரு கொடிய நோய். இந்த நோயால், ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். அவற்றில் ஒன்று மார்பக புற்றுநோய். தற்போது இது தொடர்பாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் 2040 ஆம் ஆண்டுக்குள் மார்பகப் புற்றுநோய் மற்றும் இறப்பு அபாயம் பல மடங்கு அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை லான்செட் கமிஷன் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Cancer Symptoms: பெண்களே.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.. இது புற்றுநோயாக இருக்கலாம்.!
அறிக்கை கூறுவது என்ன?

தி லான்செட் கமிஷன் அறிக்கையின்படி, மார்பக புற்றுநோயானது இப்போது உலகில் மிகவும் பொதுவான புற்றுநோயாக காணப்படுகிறது. இந்த நோய் 2040-க்குள் ஆண்டுக்கு ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலான ஐந்து ஆண்டுகளில், சுமார் 7.8 மில்லியன் (78 லட்சம்) பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே ஆண்டில் சுமார் 685,000 பெண்கள் இந்த நோயால் இறந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
உலக அளவில் மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் 2020-யில் 2.3 மில்லியனில் (23 லட்சம்) இருந்து 2040-க்குள் 3 (30 லட்சம்) மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Cancer Survival Tips: மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது எப்படி?
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தவறான உணவுப் பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் சில மரபணு காரணங்கள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும். உங்களுக்கு மார்பக புற்றுநோய் இருக்கும்போது நீங்கள் காணக்கூடிய சில பொதுவான அறிகுறிகள்:
மார்பில் வலியற்ற கட்டி
மார்பகத்தில் வலியற்ற கட்டி தோன்றுவதே மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். ஆரம்பத்தில் இந்த கட்டி மிகவும் சிறியதாக இருக்கும். மேலும், அது வலியை ஏற்படுத்துவதில்லை. எனவே, யாராலும் அதை உணர முடியாது. இது வழக்கமான ஸ்கிரீனிங் மேமோகிராம் மூலம் கண்டறியப்படுகிறது. எனவே, மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு வழக்கமான பரிசோதனைகள் அவசியம். மார்பகத்தில் கட்டி இருப்பதை நீங்கள் உணர்ந்தால், அந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள். கட்டி மார்பகத்திலோ அல்லது அக்குள் பகுதியில் இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Prostate Cancer Prevention: புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ செய்ய வேண்டியவை!
மார்பக தோல் மாற்றம்
கட்டி அமைந்துள்ள மார்பகத்தின் தோல் மற்ற மார்பகத்தை விட வித்தியாசமாக இருக்கும். கட்டி இருக்கும் மார்பகத்தின் தோலில் வீக்கம் மற்றும் சிவத்தல் காணப்படலாம். உங்கள் மார்பகத்தின் மீது கட்டியுடன் வீக்கம் மற்றும் சிவத்தலை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியான நேர பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயை கண்டறியலாம்.
மார்பக வலி

மார்பக புற்றுநோயில் உருவாகும் பெரும்பாலான கட்டிகள் வலியற்றவை. ஆனால், நீங்கள் சில சமயங்களில் மார்பக வலியை அனுபவிக்கலாம். மார்பகத்தில் வலி ஏற்படுவது மார்பக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். மார்பக புற்றுநோயில், முலைக்காம்பிலும் வலியை உணர முடியும். மார்பகம் அல்லது முலைக்காம்பு வலி இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
இந்த பதிவும் உதவலாம் : Stage 1 Breast Cancer: ஸ்டேஜ் 1 மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?
மார்பிலிருந்து திரவம் வெளியேற்றம்
முலைக்காம்பிலிருந்து திரவம் வெளியேறுவது மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். இதில், முலைக்காம்பிலிருந்து நீர் அல்லது இரத்தம் வெளியேறலாம். முலைக்காம்பில் இருந்து திரவ வெளியேற்றம் இருந்தால், தவறுதலாக கூட இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள். முலைக்காம்பிலிருந்து திரவம் வெளியேற்றம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
மார்பு பகுதியில் கூச்சம்
மார்பகத்தில் வீக்கம் அல்லது உணர்திறன் கூட மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். மார்பகத்தைச் சுற்றி வீக்கம் அல்லது கூதிகம் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.
இந்த பதிவும் உதவலாம் : Colon Cancer: அதிகமாக இறைச்சி சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் - புதிய ஆய்வில் தகவல்!
பெரும்பாலும் மார்பக புற்றுநோய் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமே வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல, இந்த பிரச்சனை ஆண்களுக்கும் வரலாம். இந்நிலையில், மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக எச்சரிக்கையாகி, மருத்துவரை அணுகி உடனடியாக சிகிச்சையைத் தொடங்குங்கள். வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்யுங்கள்.
Pic Courtesy: Freepik