Doctor Verified

Tight-ஆ Bra போட்டா “Breast Cancer” வருமா?! மருத்துவர் கூறும் உண்மை இங்கே..

Tight-ஆ Bra போட்டால் Breast Cancer வருமா? Mammogram, Perfume, Family History போன்ற Breast Cancer myths குறித்து மருத்துவர் விளக்கம். உண்மை மற்றும் தவறான நம்பிக்கைகள் பற்றிய முழுமையான தகவல் இங்கே.
  • SHARE
  • FOLLOW
Tight-ஆ Bra போட்டா “Breast Cancer” வருமா?! மருத்துவர் கூறும் உண்மை இங்கே..


மார்பக புற்றுநோய் (Breast Cancer) குறித்து சமூக வலைத்தளங்களில் பல தவறான நம்பிக்கைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, “Tight-ஆ Bra போட்டால் புற்றுநோய் வரும்”, “Perfume பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும்” போன்ற கருத்துகள் பெண்களை அச்சுறுத்துகின்றன. ஆனால் உண்மை என்ன? இதுகுறித்து ரேடியாலஜிஸ்ட் டாக்டர் முபாரக் விளக்கமளித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..

1. Tight-ஆ Bra போட்டால் Breast Cancer வருமா?

இல்லை. இதுவரை எந்தவித ஆராய்ச்சி ஆதாரமும் இதனை நிரூபிக்கவில்லை. Bra எவ்வளவு tight-ஆ இருந்தாலும் அது மார்பகப் புற்றுநோய்க்கு காரணமில்லை. அதனால் பெண்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

2. Mammogram புற்றுநோயை தடுக்குமா?

Mammogram என்பது ஒரு மருத்துவ பரிசோதனை. இது மார்பகத்தில் இருக்கும் “lump” அல்லது மாற்றங்களை கண்டறிவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிகிச்சை அல்ல. எனவே, mammogram புற்றுநோயை தடுப்பதில்லை. ஆனால் முன்னதாக கண்டறிவதற்கு மிகவும் உதவுகிறது என்கிறார் மருத்துவர்.

how-to-examine-breast-at-home-01

3. Mammogram radiation காரணமாக புற்றுநோய் வருமா?

முற்றிலும் தவறு. Mammogram செய்யும்போது பயன்படுத்தப்படும் radiation அளவு மிகவும் குறைவானது. இது சாதாரண X-ray-க்கும் குறைவான radiation தான். எனவே, இது புற்றுநோய் உண்டாக்காது என்று மருத்துவர் தெரிவித்தார்.

4. Perfume பயன்படுத்தினால் Breast Cancer வருமா?

இதுவும் ஒரு பொய்யான நம்பிக்கை. Perfume அல்லது deodorant பயன்படுத்துவதால் மார்பக புற்றுநோய் வராது. இது Bra தொடர்பான மித்யைகள் போலவே மக்கள் மத்தியில் பரவிய தவறான தகவல் மட்டுமே என்று மருத்துவர் கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: Breast Cancer - ஐ தடுப்பது உங்கள் கைகளில் தான்! Self Check, Regular Screening, Early Awareness – இவை தான் உங்கள் பாதுகாப்பு கவசம்..

5. குடும்ப வரலாறு இல்லாததால், ஆபத்து இருக்காதா?

பெரும்பாலானோர் “என் குடும்பத்தில் யாருக்கும் புற்றுநோய் இல்லை, எனவே எனக்கு வராது” என்று நினைப்பது தவறு. குடும்ப வரலாற்றைத் தவிர பல காரணங்களால் புற்றுநோய் உருவாகலாம். எனவே, முறையான சோதனைகள் அவசியம் என்கிறார் மருத்துவர்.

how-to-examine-breast-at-home-02

6. புற்றுநோய் 45 வயதுக்குப் பிறகு தான் வருமா?

இந்தியாவில் நடந்த கடைசிப் புள்ளிவிவரத்தில், 14 வயது குழந்தைக்கும் மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. எனவே, இது எந்த வயதிலும் ஏற்படக்கூடியது. 20 – 25 வயதுக்கு பிறகு screening செய்வது மிகவும் நல்லது என்று மருத்துவர் கூறினார்.

7. ஆண்களுக்கு Breast Cancer வராதா?

பலர் “ஆண்களுக்கு Breast Cancer வராது” என்று நினைப்பார்கள். ஆனால் இது தவறு. ஆண்களுக்கும் breast tissue இருப்பதால், அவர்களுக்கும் புற்றுநோய் வரக்கூடும். மிகக் குறைவு தான் என்றாலும், “lump” அல்லது “nipple discharge” இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர் எச்சரிக்கிறார்.

View this post on Instagram

A post shared by Dr Mubarak (@drmubarakofficial)

மருத்துவர் பரிந்துரை

* பெண்களும், ஆண்களும் மார்பகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் அலட்சியம் செய்யக்கூடாது.

* Self-examination மற்றும் mammogram screening முறையாக செய்வது மிகவும் அவசியம்.

* தவறான நம்பிக்கைகளுக்கு இடமளிக்காமல், உண்மை மருத்துவ தகவல்களை மட்டும் பின்பற்றுங்கள்.

இறுதியாக..

“Tight-ஆ Bra போட்டால் புற்றுநோய் வரும்”, “Perfume Breast Cancer ஏற்படுத்தும்” போன்றவை அனைத்தும் கட்டுக்கதைகள். உண்மையில், முன்னதாக கண்டறிதல், சோதனை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் முக்கிய கருவிகள். பெண்களும் ஆண்களும் இருவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

{Disclaimer: இந்த கட்டுரை மருத்துவர்களின் கருத்துகள் மற்றும் ஆராய்ச்சி தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இது சுகாதார ஆலோசனை (medical advice) அல்ல. எந்தவொரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.}

Read Next

மஞ்சள் முதல்.. ப்ரொக்கோலி வரை.. புற்றுநோயை தடுக்கும் 10 அற்புத உணவுகள் இங்கே.. நிபுணர் டிம்பிள் ஜாங்க்டா பரிந்துரை..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 12, 2025 15:08 IST

    Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி