Doctor Verified

Chest-ல சின்ன கட்டி இருந்தா அது cancer-ஆ.? மருத்துவர் விளக்கம்..

மார்பகத்தில் சிறிய கட்டி இருந்தால் புற்றுநோயா? வலி உள்ள கட்டி, வலி இல்லாத கட்டி, தற்காலிக கட்டி – எத்தனை சதவீதம் புற்றுநோயாக மாறும்? மருத்துவர் விளக்கம்.
  • SHARE
  • FOLLOW
Chest-ல சின்ன கட்டி இருந்தா அது cancer-ஆ.? மருத்துவர் விளக்கம்..


பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் சந்தேகங்களில் ஒன்றாக மார்பகத்தில் சிறிய கட்டி தோன்றுதல் கருதப்படுகிறது. “இது புற்றுநோயா?” என்ற பயம் பெரும்பாலும் பெண்களை கவலைக்குள்ளாக்குகிறது. சமீபத்தில் ரேடியாலஜிஸ்ட் டாக்டர் முபாரக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தகவல்கள், இதற்கான விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.

மார்பக கட்டி – புற்றுநோய் சாத்தியம் எவ்வளவு?

மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்ல. ஆனால், சில கட்டிகள் புற்றுநோயாக மாறும் வாய்ப்பும் உள்ளது. டாக்டர் முபாரக் கூறுவதாவது:

* வலி உள்ள கட்டி – புற்றுநோயாக மாறும் வாய்ப்பு சுமார் 10% முதல் 20% வரை.

* வலி இல்லாத கட்டி – புற்றுநோய் ஆபத்து சுமார் 25% முதல் 30% வரை அதிகரிக்கும்.

* சில நேரங்களில் இருக்கும், சில நேரங்களில் தெரியாத கட்டி – புற்றுநோய் சாத்தியம் வெறும் 5% முதல் 10% வரை மட்டுமே.

இந்த பதிவும் உதவலாம்: Tight-ஆ Bra போட்டா “Breast Cancer” வருமா?! மருத்துவர் கூறும் உண்மை இங்கே..

எதற்கும் தாமதிக்க வேண்டாம்

“கட்டி சிறியதா பெரியதா என்பது முக்கியமில்லை. ஒருமுறை சந்தேகம் வந்துவிட்டால், கண்டிப்பாக மார்பக ஸ்கேன் (Breast Scan) செய்ய வேண்டும். அதற்கு விதிவிலக்கு கிடையாது” என மருத்துவர் எச்சரிக்கிறார்.

ரேடியாலஜிஸ்டாக பணிபுரியும் அவர், தினசரி பலர் புற்றுநோய் சந்தேகத்துடன் ஸ்கேன் செய்வதற்காக வருவதைப் பார்க்கிறேன் என்கிறார். “அவர்கள் காத்திருக்கும்போது, அவர்களின் மனஅழுத்தத்தை, பயத்தை, கவலையை நான் நேரடியாக உணர்கிறேன். சில சமயம் அது மகிழ்ச்சியின் கண்ணீராக முடிகிறது, சில சமயம் சகிக்க முடியாத துயரமாகவும் முடிகிறது. எனவே, தாமதம் செய்யாமல் சிகிச்சை தேடுவது மிகவும் அவசியம்” என்று அவர் வலியுறுத்துகிறார்.

View this post on Instagram

A post shared by Dr Mubarak (@drmubarakofficial)

நிபுணர்கள் கூறும் முக்கிய பரிந்துரைகள்

* சுய பரிசோதனை செய்ய வேண்டும் – மாதம் ஒருமுறை மார்பகத்தைத் தானே பரிசோதனை செய்து மாற்றங்களை கவனிக்க வேண்டும்.

* வலி, வீக்கம், வடிவ மாற்றம் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* மாமோகிராம் / அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள், சந்தேகங்களை தெளிவுபடுத்தும்.

* குடும்ப வரலாறு இருந்தால், அதிக கவனத்துடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இறுதியாக..

மார்பகத்தில் கட்டி ஏற்பட்டாலே அது புற்றுநோய் என்று கருத வேண்டியதில்லை. ஆனால், சந்தேகத்தை புறக்கணிக்க கூடாது என்பது முக்கியமானது. வலி இருந்தாலோ இல்லையோ, கட்டி சிறியதோ பெரியதோ, மருத்துவரின் ஆலோசனையை உடனடியாகப் பெறுவது மட்டுமே பாதுகாப்பான தீர்வு. “அவசரம் கண்டறிந்தால், உயிரைக் காப்பாற்ற முடியும்” என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மார்பகத்தில் கட்டி போன்ற பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக நிபுணர் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

மார்பக புற்றுநோயை எவ்வாறு ஆரம்பத்திலேயே கண்டறிவது.? மருத்துவர் விளக்கம்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 19, 2025 14:49 IST

    Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி

குறிச்சொற்கள்