What are the symptoms and treatment of jaw cancer: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த வரிசையில் புற்றுநோய் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படக்கூடிய நாள்பட்ட நோயாக மாறிவிட்டது. பொதுவாக, ஒரு நபரின் உடலின் அனைத்து பாகங்களும் சரியாகச் செயல்பட்டால் மட்டுமே அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். நம் உடலில் இயற்கையாகவே காணப்படும் நோயெதிர்ப்பு அமைப்பின் உதவியுடன் வெளிப்புற தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இதில் நம் உடலில் காணப்படக்கூடிய வெள்ளை இரத்த அணுக்கள் வெளிப்புற பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால், சில நேரங்களில் உடலில் தன்னியக்க நோய் எதிர்ப்பு நோய்கள் ஏற்படுகிறது. இதனால் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான செல்களையும் தாக்கத் தொடங்கலாம். இந்நிலையே புற்றுநோய் எனப்படுகிறது. புற்றுநோயைப் பொறுத்த வரை ஏராளமான வகைகள் உள்ளது. இதில் தாடைப் புற்றுநோய் பற்றி காண்போம். ஒருவருக்குத் தாடைப் புற்றுநோய் ஏற்படுவதால் நோயாளி பேசுவது, மெல்லுவது மற்றும் முகத்தை அசைப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்குவர்.
இதில் பரேலியில் உள்ள அசோக் கிரண் மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அருண் சிங் அவர்கள் பகிர்ந்துள்ள தாடைப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tongue Cancer: நாக்கில் தோன்றும் இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்!
தாடை புற்றுநோயின் அறிகுறிகள்
வீக்கம் மற்றும் கட்டிகள்
தாடைப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக தாடை அல்லது கழுத்துக்கு அருகில் வீக்கம் அல்லது கட்டிகள் இருப்பது அடங்கும். இது முதலில் வலியற்றதாக இருக்கலாம். ஆனால், கட்டி ஏதேனும் வகையில் வளர்ந்தால், கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
தொடர்ச்சியான வலி
தாடைப் புற்றுநோயின் ஆரம்ப மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக, தாடை அல்லது வாய் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. இது காலப்போக்கில் படிப்படியாக தீவிரமடையலாம். இந்நிலையில் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் வலியைக் குறைக்கவில்லை எனில், மருத்துவர் மருந்துகளை மாற்றுவர்.
முக தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படுவது
தாடை புற்றுநோய் வளர்வதன் காரணமாக, அது தாடையின் வடிவத்தை மாற்றலாம். இந்த சூழ்நிலையில், அவர்களின் முக அமைப்பு மாறத் தொடங்குகிறது. எனவே முக அமைப்பில் ஏதேனும் சமச்சீரற்ற தன்மை அல்லது மாற்றம் இருப்பின், அதை ஆராய வேண்டும்.
பேச்சில் மாற்றங்கள் ஏற்படுவது
தாடையைப் பாதிக்கும் புற்றுநோயின் காரணமாக பேச்சுக்கு காரணமான தசைகள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் தெளிவற்ற பேச்சு, பேச்சு முறைகளில் மாற்றம், அல்லது சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
மெல்லுதல், விழுங்குவதில் சிரமம்
தாடை புற்றுநோய் காரணமாக தாடையின் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படக்கூடும். இதன் காரணமாக மெல்லுதல் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம். இதனால் சாப்பிடும் போது அசௌகரியத்தை அனுபவிக்கலாம் அல்லது தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு
வாய் துர்நாற்றம்
வழக்கமான சுகாதாரப் பராமரிப்பு செய்தாலும், வாய் துர்நாற்றம் தொடர்ந்து இருப்பது தாடைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு முக்கிய காரணம், கட்டியின் முன்னிலையில் பாக்டீரியாக்கள் வளர்ந்து, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
தாடை புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்
தாடைப் புற்றுநோயைக் கண்டறிந்த பிறகு, மருத்துவர் அதற்கான சிகிச்சையைத் தொடங்குவர். இதன் சிகிச்சை முறையானது புற்றுநோயின் தற்போதைய நிலையின் அடிப்படையில் செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சைமுறை
இதில் கட்டி மற்றும் பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் புற்றுநோயைப் பொறுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் தாடை எலும்பை பகுதியளவு அல்லது முழுமையாக நீக்குவர். இது மண்டிபுலெக்டோமி எனப்படுகிறது.
கீமோதெரபி
இந்த சிகிச்சை முறையில் புற்றுநோய் செல்களை அழிக்க சக்திவாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இது பெரும்பாலும் தாடை புற்றுநோயின் மேம்பட்ட நிகழ்வுகளுக்கு அல்லது புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவியிருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது.
நோயெதிர்ப்பு சிகிச்சை
இதில் புற்றுநோய் செல்கள் கண்டறியப்பட்டு, அதை அழிப்பதற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் தாடை புற்றுநோய் உட்பட பல வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கலாம்.
கதிர்வீச்சு சிகிச்சை
இது புற்றுநோய் செல்களை அழிக்க உயர் ஆற்றல் அலைகள் பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றுவதற்கு முன்பு, அதைச் சுருக்குவதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
இலக்கு சிகிச்சை
இது புற்றுநோய் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் ஈடுபடும் மூலக்கூறுகளை குறிவைக்கும் சிகிச்சை முறையாகும். இது புற்றுநோய் செல் சமிக்ஞைகளை சீர்குலைத்து, அதன் வளர்ச்சியை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
எனவே தாடையில் எந்த வகையான வலி அல்லது கட்டி இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. குறிப்பாக, அதிக வலியை அனுபவித்து, கட்டி நீண்ட காலமாக குணமடையவில்லை என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதன் மூலம் புற்றுநோயை சரியான நேரத்தில் குணப்படுத்தலாம். அதே சமயம், அதை சரியான நேரத்தில் கண்டறிவதும் முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நீங்க சாப்பிடும் இந்த உணவுகளால் புற்றுநோய் வரலாம். அதற்கான ஆரோக்கியமான மாற்று உணவுகள் இதோ
Image Source: Freepik