உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு

Everyday habits that cause mouth cancer: நாம் செய்யும் சில அன்றாட பழக்க வழக்கங்கள் வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இந்த வாய் புற்றுநோயானது உதடு, நாக்கு, ஈறுகள், வாயின் கூரை உள்ளிட்ட எந்த பகுதியிலும் உருவாகக் கூடியதாகும். இந்த புற்றுநோய் உருவாவதைத் தவிர்க்க நாம் கட்டாயம் சில பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. இதில் நாம் தவிர்க்க வேண்டிய வாய் புற்றுநோய்க்கான காரணங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு

Everyday habits that cause mouth cancer: உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் வாய் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கக் கூடியதாகும். அதிலும் குறிப்பாக, இளைஞர்களே வாய் புற்றுநோயால் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு நம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களே காரணமாகிறது.

வாய் புற்றுநோய் ஆனது வாய் அல்லது வாய்வழி குழியை உருவாக்கும் எந்தப் பகுதியிலும் உருவாகும் புற்றுநோயைக் குறிப்பதாகும். வாய்வழிப் பகுதி என்பது ஈறுகள், உதடுகள், நாக்கு, வாயின் கூரை, கன்னங்களின் உள் புறணிப்பகுதி உள்ளிட்ட பகுதிகளைக் குறிக்கிறது. இதில் வாயில் சிவப்பு அல்லது வெள்ளைத் திட்டுகள் உருவாகலாம். மேலும், வாய், தலை அல்லது கழுத்தில் அசாதாரண கட்டிகள் அல்லது வீக்கங்களுடன் கூடிய வாய் புண்கள் போன்றவை குணமடையாததைக் குறிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்

வாய் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான அன்றாட பழக்கங்கள்

வாய் புற்றுநோய்க்கு புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்றவை முக்கிய காரணிகளாக அமைகிறது. எனினும், இந்த வாய் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் மற்ற முக்கிய காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஆரோக்கியமற்ற உணவுமுறை

வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக ஆரோக்கியமற்ற உணவு அமைகிறது. ஏனெனில் இந்த உணவுமுறைகளால் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறமுடியாமல் போகலாம். எனவே நாள்தோறும் நிறைய காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவு உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், வாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்ற சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.

மது அருந்துவது

ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது அவர்களின் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது. இதில் வாய்வழி புற்றுநோயும் அடங்கும். அதிகப்படியான மதுஅருந்துதல் 34% வாய் வழி புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே வாய் வழி புற்றுநோய்க்கு மது அருந்துவதும் முக்கிய காரணமாக அமைகிறது.

புகைபிடிப்பது

புகைபிடித்தல் காரணமாக நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கப்படுகிறது. ஆய்வின் படி, ஒருவர் புகைபிடிப்பதால், வாய்வழி புற்றுநோயின் ஆபத்து 5-10 மடங்கு அதிகமாவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மது அருந்தினால், வாய் புற்றுநோய்க்கான ஆபத்து பல மடங்கு அதிகரிக்கிறது. குறிப்பாக, பெண்களை விட, ஆண்களுக்கே வாய் வழி புற்றுநோய் ஏற்படுவது 2 அல்லது 3 மடங்கு அதிகமாக உள்ளது. எனவே புகைபிடிக்கும் நபர்கள் ஏதேனும் அசாதாரண அறிகுறிகளைச் சந்தித்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer: வாய் புற்றுநோயின் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

மெல்லும் புகையிலை

புகையிலையை மெல்லுவது புகைபிடிக்காத புகையிலையின் பயன்பாட்டைக் குறிக்கிறது. இது வாய்வழி புற்றுநோயின் அபாயத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும். புகையில்லா புகையிலையில் அதாவது மெல்லும் புகையிலையில் புகையிலை சார்ந்த நைட்ரோசமைன்கள், ஃபார்மால்டிஹைடு, பொலோனியம், ஈயம், காட்மியம் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் நிறைந்துள்ளது. எனவே இது வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணியாக அமைகிறது.

வாய்வழி புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்

  • உதடு அல்லது வாய்க்குள் புண்கள் ஏற்படுவதுடன், எளிதில் இரத்தம் கசியலாம். மேலும், இது இரண்டு வாரங்களுக்குள் குணமடையாது.
  • வெளிப்படையான காரணமின்றி வாயில் இரத்தம் வருவது
  • ஈறுகள், உதடுகள் அல்லது வாயின் உள்ளே கரடுமுரடான புள்ளிகள் காணப்படுவது
  • மெல்லுதல், விழுங்குதல், பேசுதல், நாக்கு அல்லது தாடை நகர்த்துவதில் சிரமம்

இவை அனைத்தும் வாய்வழி புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும். இது தவிர, காதுவலி, நாள்பட்ட துர்நாற்றம், எதிர்பாராத எடையிழப்பு போன்றவையும் இதன் அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer: புற்றுநோய் தோன்றும் முன் வாயில் தோன்றும் அறிகுறிகள்.. முன்னெச்சரிக்கை முக்கியம்!

Image Source: Freepik

Read Next

Petticoat Cancer: புடவை பிரியர்களே ஜாக்கிரதை.! இறுக்கமான பாவாடை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.!

Disclaimer