Food To Increase Mouth Cancer Risk: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உணவு முறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை மீதான விருப்பமே அதிகம் உள்ளது. அதே சமயம், இவை ஆரோக்கியத்திற்கு மாற்றான உணவுகள். இவற்றால் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த வகை உணவுகள் வாய் புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.
ஆய்வு ஒன்றில், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கு இடையேயான புற்றுநோய் தொடர்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் படி, சில காலை உணவுகள் வாய் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்துக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Tattoos Cause Cancer: டாட்டூ போட்டால் புற்றுநோய் வருமா? மருத்துவர் தரும் விளக்கம்
வாய் புற்றுநோயை அதிகரிக்கும் உணவுகள்
ரொட்டி உணவுகள்
இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆய்வில், மொத்த ரொட்டி வகைகளில் 84% ரொட்டிகளில், புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனங்கள் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பீட்சா, பாவ் பன், மற்றும் பர்கர் போன்ற ரொட்டிகளில் பொட்டாசியம் அயோடேட் மற்றும் பொட்டாசியம் புரோமேட் போன்றவை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், பொட்டாசியம் அயோடேட் தைராய்டு கோளாறுகளைத் தூண்டுவதாகும். மேலும், பொட்டாசியம் புரோமேட் 2பி வகை புற்றுநோய்களை உண்டாக்குவதாகும். இந்த உணவுகளைத் தினமும் எடுத்துக் கொள்வது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
காலை உணவு தானியங்கள்
உயர் வெப்பநிலையில் வைத்து உணவுகளைச் சமைக்கும் போது, சில தொகுக்கப்பட்ட காலை உணவு தானியங்கள் உட்பட சில உணவுகளில் அக்ரிலாமைடு என்ற இரசாயனம் உருவாகலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை வெப்ப செயலாக்கத்தில் ஈடுபடுத்தும் போது, அக்ரிலாமைடு உற்பத்தி செய்யப்பட்டு புற்றுநோயை உண்டாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Test: எலும்பு புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனைகள் என்னென்ன தெரியுமா?
பழ சுவை உள்ள யோகர்ட்ஸ்
காலை உணவாக சிலர் சுவையூட்டப்பட்ட யோகர்ட்ஸ் எடுத்துக் கொள்வர். இந்த வகையான சில சுவையூட்டப்பட்ட தயிர்களில் அஸ்பார்டேம் இனிப்பானதாக இருக்கலாம். இதில் அஸ்பார்டேம் என்பது செயற்கையான இனிப்பாகும். இந்த இனிப்புகள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது எனக் கூறப்படுகிறது.
தொத்திறைச்சிகள்
தொத்திறைச்சிகள் உட்பட சில பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சில சாத்தியமான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துவது குறித்து நீண்ட காலமாகவே ஆய்வு செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்துக் கொள்வது வாய் புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில், இந்த இறைச்சிகளின் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படும் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்புகள், சேர்க்கைகள் போன்றவை வாய்வழி குழியில் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. எனவே இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Pancreatic Cancer Prevention: சைலன்ட் கில்லரான கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இத செய்யுங்க
Image Source: Freepik