What foods should you not eat to avoid cancer: உலகளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெரும்பாலும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் அமைகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உணவுத் தேர்வுகள் அடங்கும். ஏனெனில் சில ஆரோக்கியமற்ற உணவுகளின் மூலம் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகம் வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்னும் பிற காரணங்களால் கேன்சர் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க சில உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் கேன்சர் அபாயத்தைத் தவிர்க்க, நாம் சாப்பிடக்கூடாத உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்
கேன்சர் வராமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள்
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். அவ்வாறே அன்றாட உணவில் நாம் சேர்க்கும் பல்வேறு உணவுப்பொருள்கள் சர்க்கரை நிறைந்ததாகவே இருக்கிறது. அதன் படி மிட்டாய்கள், இனிப்புகள், குளிர்பானங்கள் மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற உடல் பருமனுக்கு பங்களிக்கக் கூடியதாகும். எனவே இது போன்ற உணவுகளால் மார்பக மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பெரும்பாலும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் புற்றுநோய்க்கான ஆபத்து காரணியாக அமைகிறது. இது நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். மேலும் வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி போன்ற உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக புற்றுநோய் அபாயம் அதிகமாகலாம்.
வறுத்த உணவுகள்
ஆனியன் சிப்ஸ், ஃப்ரெஞ்ச் சிப்ஸ், துரித உணவு, வறுத்த கோழி உள்ளிட்ட ஆழமாக வறுத்த உணவுகளால் எடை அதிகரிப்புடன் தொடர்புடையவையாக இருக்கலாம். இது போன்ற உணவுகள் அக்ரிலாமைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகிறது. இது புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
இந்த வகை உணவுகளில் நைட்ரேட் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் இருப்பதால் இதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அதிக வெப்பத்தில் சிவப்பு இறைச்சியை சமைப்பதால் அதில் தீங்கு விளைவிக்கும் கலவைகள் உருவாவதாகக் கூறப்படுகிறது. இது பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இரைப்பை குடல் புற்றுநோய் மற்றும் பிறவற்றிற்கு வழிவகுக்கலாம். பன்றி இறைச்சி, தொத்திறைச்சி அல்லது புகைபிடித்த இறைச்சிகள் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer Causing Foods: புற்றுநோயை உண்டாக்கும் அபாய உணவுகள் இதுதான்.!
மது அருந்துவது மற்றும் புகையிலை பிடிப்பது
ஆல்கஹால் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு தீங்கு விளைவிக்கும் அபாயங்கள் ஏற்படலாம். இதை அருந்துவதால் கல்லீரல், வாய் மற்றும் மார்பகம் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அபாயங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. புகைபிடித்தல் மற்றும் புகைபிடிக்காத புகையிலை உட்பட புகையிலை பயன்பாடு காரணமாக நுரையீரல், கல்லீரல், வயிறு, குடல், வாய்வழி மற்றும் கருப்பை புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மது, புகைபிடித்தலைத் தவிர்ப்பதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோயைத் தடுப்பதற்கான குறிப்புகள்
உடல் பருமன் பல புற்றுநோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணியாக இருப்பதால், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது நல்லது. அதன் படி புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலமும், சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணிப் பாதுகாக்கலாம். பட்டியலிடப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன் படி தவறாமல் உடற்பயிற்சி செய்வது, வழக்கமான சோதனைகளை மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவை உண்பது போன்றவற்றைக் கையாள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: World Cancer Day 2025: உலக புற்றுநோய் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.? இங்கே காண்போம்..
Image Source: Freepik